Published : 22 Mar 2019 07:50 AM
Last Updated : 22 Mar 2019 07:50 AM

ஆந்திராவில் வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பு

ஆந்திர மாநிலத்தில் நேற்று விறுவிறுப்பாக வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. கட்சித்தலைவர்கள், முக்கிய வேட்பாளர்கள் பலர் நேற்று தங்களது தொண்டர் படை சூழ, பட்டாசு வெடித்து, மேள தாளங் களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஆந்திர மாநிலத்தில் வரும் ஏப்ரல் 11-ம் தேதி ஒரே கட்டமாக 175 சட்டமன்றம் மற்றும் 25 மக் களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதனை யொட்டி, கடந்த 18-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 25-ம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய் யலாம் என்பதால், நேற்று மாநிலம் முழுவதும் பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள், முக்கிய வேட் பாளர்கள், சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட் கள் என்பதால் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய முடியாது. இதனால் நேற்று அதிக அளவில் மாநிலம் முழு வதும் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. இதில் குறிப்பாக ஜனசேனா கட்சித் தலைவரும், நடி கருமான பவன் கல்யாண் விசாகப் பட்டினம் மாவட்டம், காஜுவாக்கா சட்டமன்ற தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனையொட்டி, இக்கட்சியின் தொண்டர்கள், நிர் வாகிகள், ஏராளமான ரசிகர்கள் ஆர வாரத்துடன் சென்றனர். ரசிகர்களின் உற்சாகத்தோடு பவன் கல்யாண் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

இதேபோன்று, விசாகப்பட்டினம் மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு தெலுங்கு தேச கட்சி வேட்பாளரும், முன்னாள் கல்வித்துறை அமைச்சரு மான கண்டா ஸ்ரீநிவாசா ராவ், உற்சாகமாக தனது தொண்டர் படை யுடன் சென்று, விசாகப்பட்டினம் தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். கிருஷ்ணா மாவட்டம், மைலாவரம் சட்டமன்ற தொகுதிக்கு, முன்னாள் அமைச் சரும், தெலுங்கு தேச கட்சி வேட்பாள ருமான தேவிநேனி உமா மகேஷ்வர ராவ் மாட்டு வண்டியில் ஊர்வலமாக சென்று தாசில்தார் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதே சமயத்தில் இவரை எதிர்த்து போட்டியிடும் ஒய்.எஸ்.ஆர் காங்கி ரஸ் கட்சி வேட்பாளர் வசந்த கிருஷ்ண பிரசாத்தும் தனது ஆதர வாளர்களுடன் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்ததால், அங்கு அரை மணி நேரம் பதற்றம் நிலவியது. இரு கட்சியினரும் ஒருவருக்கொருவர் வாக்குவாதங்களில் ஈடுபட்டனர். பின்னர் போலீஸார் குவிக்கப்பட்டு நிலைமையை சரிசெய்தனர்.

ஜெகன் மோகன் இன்று மனு தாக்கல்

ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று தனது சொந்த மாவட்டமான கடப்பா மாவட்டம், புலிவேந்தலா சட்டமன்ற தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக இவர், புலிவேந்தலாவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்ய உள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x