Published : 20 Mar 2019 09:39 AM
Last Updated : 20 Mar 2019 09:39 AM
ஊழல்வாதிகளை பிரதமர் நரேந்திர மோடி காப்பாற்றுகிறார் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திராவின் கர்னூலில் நேற்று அவர் பேசியதாவது:
தெலுங்கு தேச கட்சியின் வெற்றி ரகசியம் 65 லட்சம் தொண்டர்களே. கட்சிக்காக பாடுபடுபவர்களுக்கு தனி இடம் உண்டு. மக்களின் நலனில் தொண்டர்கள் அக்கறை செலுத்த வேண்டும். கட்சியின் மந்திராலயம் தொகுதி வேட்பாளர் திக்கா ரெட்டியை, எதிர்க்கட்சியினர் தாக்கியுள்ளனர். வன்முறையில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவர். மாநிலத்தை காப்பாற்றும் சக்தி தெலுங்கு தேச கட்சிக்கு மட்டுமே உள்ளது.
அமராவதியில் தலைநகரம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி ஒரு முறை கூட இதனை காண வரவில்லை. ஹைதராபாத்தில் வசிக்கும் அவர், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுடன் கைகோத்து ஆந்திராவுக்கு களங்கம் விளைவிக்கிறார்.
போலாவரம் அணைக்கட்டு போன்ற திட்டங்களுக்கு சந்திரசேகர ராவ் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். அவருடன் இணைந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆந்திராவுக்கு துரோகம் இழைத்து வருகிறார். இவர்களுக்கு மோடி ஆதரவு அளித்து வருகிறார். ஊழல்வாதிகள் அனைவரையும் மோடி காப்பாற்றி வருகிறார். இந்த நேரத்தில் நாட்டைக் காப்பாற்றுவது மக்களின் கையில் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT