Published : 22 Feb 2019 10:13 AM
Last Updated : 22 Feb 2019 10:13 AM
குற்றப் பின்னணி கொண்ட எதிர்க்கட்சியினரிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று தனது கட்சியினரை சந்திரபாபு நாயுடு கேட்டுக்கொண்டார்.
எதிர்வரும் மக்களவை தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி ஆந்திர அரசியல் பரபரப்பாக இயங்கி வருகிறது. ஆளும் கட்சியான தெலுங்கு தேசம், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒன்றுதிரட்டி வருகிறது. என்றாலும் ஆந்திராவில் காங்கிரஸுடன் கூட்டணி சேராமல் தனித்துப் போட்டியிடுகிறது. முக்கிய எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், இம்முறை யாருடனும் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளது. ஜனசேனா கட்சித்தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் இம்முறை இடதுசாரி கட்சிகள் மற்றும் லோக்சத்தா கட்சியுடன் கூட்டணி அமைக்கவுள்ளார். இங்கு பாஜகவும் தனித்து போட்டியிட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு நேற்று அமராவதியிலிருந்து டெலிகான்பரன்ஸ் மூலம் மாநிலம் முழுவதிலும் உள்ள தனது கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். அப்போது அவர் கூறும்போது, “இந்த தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும். இது நாட்டுக்கும் மாநில வளர்ச்சிக்கும் அவசியமாகும். எனவே ஒவ்வொருவரும் போர் வீரரை போன்று செயல்பட வேண்டும். எதிர்க்கட்சியினர் குற்றங்களுக்கு அஞ்சாதவர்கள். பலர் குற்றப்பின்னணி கொண்டவர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT