Published : 28 Feb 2019 09:03 AM
Last Updated : 28 Feb 2019 09:03 AM
உ.பி.யில் கூட்டணி அமைத்த மாயாவதி, அகிலேஷ்சிங் யாதவ் தங்கள் அணியில் காங்கிரஸை சேர்க்கவில்லை. இதனால், உ.பி.யின் 80 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது. இதையடுத்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது சகோதரி பிரியங்காவை கட்சியின் பொதுச்செயலாளராக்கி இருந்தார்.
இதனால், உ.பி. காங்கிர ஸாரிடையே உத்வேகம் கூடியிருப் பதாகக் கருதப்பட்டது. உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ்பப்பர் தலைமையில் 33 உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் குழு நேற்று லக்னோவில் கூடியது. இதன் சார்பில் 45 தொகுதிகளுக்கு வேட்பாளர்களின் பெயர்கள் அதன் தலைமைக்கு பரிந்துரைக் கப்பட்டன. இதன் நிலையை பார்த்தால் காங்கிரஸாரிடம் ஆர் வம் குறைந்திருப்பதை அறிய முடிகிறது. இந்த வேட்பாளர் பரிந்துரைப் பட்டியலில் 22 தொகுதி களில் ஒரே ஒரு வேட்பாளர் பெயர் மட்டும் உள்ளது. மீதம் உள்ள தொகுதிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டதாகவும், அதிகபட்ச மாக மூன்று வேட்பாளர் பெயர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உ.பி. காங்கிரஸ் நிர்வாகிகள் வட்டாரம் கூறும் போது, ‘வேட்பாளர் தேர்வுக்காக எங்கள் தலைமை அமைத்த ஆறு தேர்தல் குழுக்களில் பலருக்கும் வேலை இருக்காது என்று தெரி கிறது.
தீவிர அரசியலுக்கு பிரியங்கா வந்த பின்பும் போட்டியிட விரும்பு வோர் எண்ணிக்கை மிகவும் குறை வாக இருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த நிலை உ.பி.யில் தேர்தல் பிரச்சாரம் துவங்கிய பின் மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன’’ எனத் தெரிவித்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் அமைத்த தேர்தலுக்கான வேட் பாளர் தேர்வுக் குழுவின் உறுப்பி னர்களிலும் பலர் தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்தப் பட்டி யலில் கட்சியின் மாநிலத் தலைவர் ராஜ்பப்பர், முன்னாள் மத்திய அமைச்சர்களான சல்மான் குர்ஷீத், ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், ஆர்.பி. என்.சிங், ஜிதின் பிரசாத் மற்றும் முன் னாள் எம்எல்ஏவான கஜராஜ்சிங் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இதுபோன்ற நிலையை பிரி யங்கா உ.பி. காங்கிரஸாருடன் நடத்திய ஆலோசனையில் கணித் துள்ளார். எனவே, அவர் கட்சி நிர்வாகிகளிடம் மக்களவை தேர் தலை விட அதிகமாக அடுத்து 2022-ல் நடைபெற இருக்கும் சட்ட சபைத் தேர்தலே நம் குறியாக இருக்க வேண்டும் என வலி யுறுத்தியதும் தெரியவந்துள் ளது. மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்களாக அமேதியில் ராகுலும், ரேபரேலியில் சோனியா வும் மட்டுமே உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT