Published : 23 Feb 2019 09:03 AM
Last Updated : 23 Feb 2019 09:03 AM
நாடு முழுவதும் வரும் 26-ம் தேதி ‘கமல ஜோதி’ என்ற பெயரில் பாஜகவினர் மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
மக்களவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில், பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மத்திய அரசு, மாநிலங்களில் ஆளும் பாஜக அரசின் பல்வேறு திட்டங்களால் 22 கோடி மக்கள் பலனடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அரசின் திட்டங்களால் பலன்பெற்ற மக்களை சந்தித்து, திட்டங்களுக்கு காரணமான பாஜக அரசுக்கு மக்களவைத் தேர்தலில் மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்று வரும் 26-ம் தேதியன்று மக்களை பாஜக தலைவர்களும் தொண்டர்களும் சந்தித்து பிரசாரம் செய்ய உள்ளனர். இதற்கு ‘கமல ஜோதி’ பிரசாரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பிரசாரத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசின் திட்டம் மூலம் உத்தரபிரதேசத்தில் புதிதாக மின்சார வசதி அளிக்கப்பட்ட கிராமத்துக்கு பாஜக தலைவர் அமித்ஷா 26-ம் தேதி சென்று மக்களை சந்திக்கிறார். நாடு முழுவதும் பாஜக தலைவர்களும் தொண்டர்களும் அன்று மக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக பாஜக பொதுச் செயலாளர் புபேந்திர யாதவ் டெல்லியில் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT