Published : 01 Apr 2019 10:11 AM
Last Updated : 01 Apr 2019 10:11 AM
தமிழகத்தில் நீண்டகாலம் ரிசர்வ் தொகுதியாக இருந்த ராசிபுரம் தொகுதி மறுசீரமைப்பின் போது பொதுத்தொகுதியாக மாறியது. ராசிபுரம் தொகுதிக்கு பதிலாக மாவட்டத்தின் தலைநகரான நாமக்கல் பெயரிலேயே உருவாக்கப்பட்டுள்ள புதிய மக்களவை தொகுதி இது.
நாமக்கல் மாவட்டத்தின் 5 சட்டப்பேரவைத் தொகுதிகளுடன், சேலம் மாவட்டத்தின் சங்ககிரி தொகுதியையும் இணைத்து புதிய மக்களவை தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
காவிரி கரையின் பரமத்திவேலூர் முதல் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதியையான சேர்ந்த மங்கலம் வரை இந்த தொகுதி பரவியுள்ளது.
விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. காவிரி கரையையொட்டிய பகுதி என்பதால் நெல், கரும்பு என பாரம்பரிய விவசாயம் நடைபெறும் பகுதி.
விவசாயத்தை தவிர கோழிப்பண்ணை முக்கிய தொழில். முட்டை மற்றும் கோழி இறைச்சி அதிகஅளவில் உற்பத்தி செய்யப்படுவதால் வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிகஅளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக நாமக்கல், திருச்செங்கோடு, சங்ககிரி பகுதிகளில் அதிகமாக லாரி சார்ந்த தொழில் நடைபெறுகிறது. இந்த பகுதிகளைச் சேர்ந்த லாரி தமிழகம் மட்டுமின்றி நாடுமுழுவதுமே இயக்கப்படுகிறது. சரக்குகள் எடுத்துச் செல்லப்படுவதில் நாமக்கல் பகுதி லாரிகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு உண்டு.
குறிப்பிட்ட கட்சிக்கு மட்டுமே செல்வாக்கு என்றில்லாமல் பல கட்சிகளும் இந்த தொகுதியில் முத்திரை பதித்துள்ளன. தொடக்ககாலத்தில் காங்கிரஸ் அதிகமாக வென்றுள்ளது. இருப்பினும் சமீபகாலத்தில் அதிமுக, திமுகவுக்கும் இடையில் தான் நேரடி போட்டி நிலவியுள்ளது.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
நாமக்கல்
சங்ககிரி
திருச்செங்கோடு
பரமத்திவேலூர்
ராசிபுரம் (எஸ்சி)
சேர்ந்தமங்கலம் (எஸ்டி)
தற்போதைய எம்.பி
பி.ஆர்.சுந்தரம், அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
அதிமுக | சுந்தரம் | 563272 |
திமுக | காந்திசெல்வன் | 268898 |
தேமுதிக | எஸ்.கே.வேலு | 146882 |
காங் | சுப்பிரமணியன் | 19800 |
முந்தைய தேர்தல்கள்
ராசிபுரம் தொகுதி (ரிசர்வ் தொகுதி)
ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
1977 | தேவராஜன், காங் | ஜோதி வெங்கடாச்சலம், ஸ்தாபன காங் |
1980 | தேவராஜன், காங் | அன்பழகன், அதிமுக |
1984 | தேவராஜன், காங் | துரைசாமி, திமுக |
1989 | தேவராஜன், காங் | மாயவன், திமுக |
1991 | தேவராஜன், காங் | சுகன்யா, திமுக |
1996 | கந்தசாமி, தமாகா | ஜெயகுமார், காங் |
1998 | சரோஜா, அதிமுக | கந்தசாமி, தமாகா |
1999 | சரோஜா, அதிமுக | உதயரசு, பாமக |
2004 | ராணி, காங் | அன்பழகன், அதிமுக |
நாமக்கல் (பொதுத்தொகுதி)
2009 காந்திசெல்வன், திமுக வைரம் தமிழரசி, அதிமுக
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
நாமக்கல் : பாஸ்கர், அதிமுக
சங்ககிரி : ராஜா, அதிமுக
திருச்செங்கோடு : சரஸ்வதி, அதிமுக
பரமத்திவேலூர் : மூர்த்தி, திமுக
ராசிபுரம் (எஸ்சி) : சரோஜா, அதிமுக
சேர்ந்தமங்கலம் (எஸ்டி) : சந்திரசேகரன், அதிமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
பி.காளியப்பன் (அதிமுக)
ஏ.கே.பி சின்ராஜ் (கொமதேக)
சாமிநாதன் (அமமுக)
தங்கவேலு (மநீம)
பாஸ்கர் (நாம் தமிழர்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT