Published : 01 Apr 2019 03:21 PM
Last Updated : 01 Apr 2019 03:21 PM
தலைக்காவிரியில் புறப்பட்டு தமிழகம் முழுவதும் செழிக்க வைக்கும் காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் பகுதி இது. காவிரி பாசன விவசாய பகுதியான இந்த தொகுதி முழுக்க முழுக்க விவசாயத்தை மையமாக கொண்டு இயங்குகிறது.
பெரிய அளவில் தொழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் விவசாயமே இந்த பகுதியின் உயிர் மூச்சு. காவிரி ஆறு பல பகுதிகளில் பாய்ந்து வடக்கு கடைமடைப்பகுதியை கொண்டது இந்த தொகுதி. இதனால் காவிரிக்கான போராட்டம் தீவிரமாக இருக்கும் இடம்.
அரசியலை பொறுத்தவரையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் நீண்டகாலமாக எம்.பி.யாக இருந்த தொகுதி. வழக்கமாகவே காங்கிரஸ் பாரம்பரிய தொகுதியாகவே இருந்துள்ளது. எனினும் அதிமுக மற்றும் திமுகவின் ஆதரவுடனேயே காங்கிரஸ் அதிகமுறை வென்றுள்ளது. பாமகவுக்கு ஒரளவு வாக்கு வங்கி உள்ள தொகுதி இது. கடந்த 2 தேர்தல்களாக இந்த தொகுதியில் அதிமுகவின் காற்று வீசி வருகிறது.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
மயிலாடுதுறை
கும்பகோணம்
பாபநாசம்
திருவிடைமருதூர்
சீர்காழி
பூம்புகார்
தற்போதைய எம்.பி
பாரதி மோகன், அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
அதிமுக | பாரதி மோகன் | 513729 |
மனிதநேய மக்கள் கட்சி | ஹைதர் அலி | 236679 |
பாமக | அகோரம் | 144085 |
காங் | மணிசங்கர் அய்யர் | 58465 |
முந்தைய தேர்தல்கள்
ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
1977 | குடந்தை ராமலிங்கம், காங் | கோவிந்தசாமி, ஸ்தாபன காங் |
1980 | குடந்தை ராமலிங்கம், காங் | கோவிந்தசாமி, ஸ்தாபன காங் |
1984 | பக்கீர் முகமது ஹாஜி, காங் | கல்யாணம், திமுக |
1989 | பக்கீர் முகமது ஹாஜி, காங் | கல்யாணம், திமுக |
1991 | மணிசங்கர் அய்யர், காங் | குத்தாலம் கல்யாணம்,திமுக |
1996 | ராஜேந்திரன், தமாகா | மணிசங்கர் அய்யர், காங் |
1998 | கிருஷ்ணமூர்த்தி, தமாகா | அருள்மொழி, பாமக |
1999 | மணிசங்கர் அய்யர், காங் | அருள்மொழி, பாமக |
2004 | மணிசங்கர் அய்யர், காங் | ஓ.எஸ்.மணியன், அதிமுக |
2009 | ஓ.எஸ்.மணியன், அதிமுக | மணிசங்கர் அய்யர். காங் |
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
மயிலாடுதுறை : ராதாகிருஷ்ணன், அதிமுக
கும்பகோணம் : அன்பழகன், திமுக
பாபநாசம் : துரைக்கண்ணு, அதிமுக
திருவிடைமருதூர் : கோவி. செழியன், திமுக
சீர்காழி : பாரதி, அதிமுக
பூம்புகார் : பவுன்ராஜ், அதிமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
எஸ்.ஆசைமணி (அதிமுக)
செ. இராமலிங்கம் (திமுக)
எஸ் செந்தமிழன் (அமமுக)
ரிஃபாயுதீன் (மநீம)
சுபாஷினி (நாம் தமிழர்)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT