Published : 06 Apr 2019 10:08 AM
Last Updated : 06 Apr 2019 10:08 AM
மதுரையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தமிழில் இன்று வெளியிடப் படுகிறது.
தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் அறிக்கை என்பது முக்கியம் வாய்ந்தது. அதில் இடம் பெறும் முக்கிய அம்சங்களை பிரச்சாரத்தின்போது தேர்தல் வாக்குறுதிகளாக மக் களிடம் தெரிவிக்கின்றனர். தேர்தல் அறிக்கைகள் கட்சித் தலைமை அலுவலகத்தில்தான் வெளியிடு வது வழக்கம்.
2019 மக்களவைத் தேர்தல் அறிக் கையை சென்னையில் திமுகதான் முதலில் வெளியிட்டது. அடுத்த 3 மணி நேரத்தில் அதிமுகவும், இதைத் தொடர்ந்து பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் அடுத்தடுத்து சென்னையில் வெளியிட்டன. தேசியக் கட்சியான காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை டெல்லியில் கடந்த செவ்வாய்க்கிழமை ஹிந்தி, ஆங்கில மொழிகளில் வெளியிட்டது. தமிழில் தேர்தல் அறிக்கையை மாநிலத் தலைவர் தலைமையில் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சென்னையில் வெளியிடத் திட்டமிட்டனர். ஆனால் அது முடியவில்லை.
தென்மாவட்டத்தில் முகாமிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர்களை சென் னைக்கு அழைக்க முடியாத சூழல் உள்ளதால் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள ஏடிஆர் திருமண மண்டபத்தில் தமிழில் தேர்தல் அறிக்கையை இன்று (ஏப்.6) வெளியிடுகின்றனர்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிக்கும் 25 கோடி பேருக்கு மாதம் ரூ.6 ஆயிரம், மாநிலத்துக்கேற்ப நீட் தேர்வு போன்ற முக்கிய அம்சங்கள் தென்மாவட்ட மக்களை சென்றடையும் வகையிலும், அரசி யல் ‘சென்டிமெண்ட்’ கருதியும் மதுரையில் வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.
மதுரை நகர் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது:
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தயாரிப்புக் குழுத் தலைவர் ப.சிதம்பரம் சிவகங்கையில் தனது மகன் மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக் குப் பிரச்சாரம் செய்து வருகிறார். மூத்த தலைவர்களான திருநாவுக்கரசர் திருச்சியிலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் தேனியிலும், மாணிக்கம் தாகூர் மதுரையிலும், வசந்தகுமார் கன்னியாகுமரியிலும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் மாநிலத் தலைவர் கேஎஸ். அழகிரியும் தென்மாவட்டங்களில் பிரச்சாரத்தில் உள்ளார். இவர் களை ஒருங்கிணைத்து சென் னைக்கு அழைப்பதில் சிக்கல் இருந்தது. இதனால் மது ரையில் தேர்தல் அறிக்கையை தமிழில் வெளியிடுகிறோம். வேறு ‘சென்டிமெண்ட்’ என்று எதுவு மில்லை. சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 4 தொகுதிகளிலும் முக்கியத் தலைவர்கள் போட்டியிடுவதாலும் மதுரையை தேர்வு செய்தி ருக்கிறோம். அவ்வாறு ‘சென்டி மெண்ட்’ இருந்தால் வெற்றி வாய்ப்பை தேடித்தரட்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT