Published : 03 Mar 2014 08:04 PM
Last Updated : 03 Mar 2014 08:04 PM
ஒரு காலத்தில் சென்னை நகரம் உருவானதே இங்கிருந்துதான் என்று சொல்லலாம். பிரான்சிஸ் டே என்கிற ஆங்கிலேயர் 1640-ல் இந்தப் பகுதியில்தான் புனித ஜார்ஜ் கோட்டையைக் கட்டினார். 1688-ல் இங்குதான் சென்னை மாநகராட்சி உருவாக்கப்பட்டது.
1977-ல் இங்கு ஜனதா கட்சியின் சார்பில் வெற்றிபெற்ற பா.ரா. என்கிற ராமச்சந்திரன், பின்னாட்களில் கேரளாவின் ஆளுநராகவும் பதவிவகித்தார். கடந்த 96-ம் ஆண்டு முதல் இந்தத் தொகுதி தி.மு.க-வின் கோட்டையாக இருந்துவருகிறது. முரசொலி மாறன் இங்கு பதவி வகித்து, மத்திய அமைச்சராக இருந்த காலகட்டத்தில் இந்தத் தொகுதி பரவலாக முன்னேற்றம் கண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT