Published : 31 Mar 2019 10:17 AM
Last Updated : 31 Mar 2019 10:17 AM
தமிழகத்தில் உள்ள மக்களவை தொகுதிகளில் பரப்பளவில் சிறய தொகுதி மத்திய சென்னை. சென்னையில் திமுகவுக்கு மிக வலிமையான வாக்கு வங்கி உள்ள தொகுதி மத்திய சென்னை. இதனால் பலத் தேர்தல்களில் அக்கட்சியே நேரடியாக களம் இறங்கி வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர்கள் டாக்டர் கலாநிதி, முரசொலி மாறன், முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் போட்டியிட்டு வென்ற தொகுதி.
கடந்த மக்களவை தேர்தலில் பல தொகுதிகளில் அதிமுக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற போதிலும், இந்த தொகுதியில் குறைவான வாக்கு வித்தியாசத்திலேயே வெல்ல முடிந்தது.
அதிமுகவை பொறுத்தவரையில் பெரும்பாலும் இந்த தொகுதியை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவதையே வாடிக்கையாக வைத்திருந்தது. கடந்தமுறை தனித்து போட்டியட்ட நிலையில் நேரடியாக களம் இறங்கி வெற்றியையும் பெற்றது.
இடம் பெற்றுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள்
துறைமுகம்
எழும்பூர் (எஸ்சி)
ஆயிரம் விளக்கு
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
அண்ணாநகர்
வில்லிவாக்கம்
தற்போதைய எம்.பி
விஜயகுமார், அதிமுக
2014-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நிலவரம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் |
அதிமுக | விஜயகுமார் | 333296 |
திமுக | தயாநிதி மாறன் | 287455 |
தேமுதிக | ரவீந்திரன் | 114798 |
காங் | மெய்யப்பன் | 25981 |
ஆம் ஆத்மி | பிரபாகர் | 19553 |
முந்தைய தேர்தல்கள்
ஆண்டு | வென்றவர் | 2ம் இடம் |
1977 | ராமச்ச்திரன், ஸ்தாபன காங் | ராஜா முகமது, அதிமுக |
1980 | கலாநிதி, திமுக | ராமச்சந்திரன், ஜனதா |
1984 | கலாநிதி, திமுக | பால் எர்னஸ்ட், காந்தி காமராஜ் காங் |
1989 | இரா.அன்பரசு, காங் | கலாநிதி, திமுக |
1991 | இரா. அன்பரசு, காங் | என்.வி.என்.சோமு, திமுக |
1996 | முரசொலி மாறன், திமுக | பாரதி, காங் |
1998 | முரசொலி மாறன், திமுக | ஜெயக்குமார், அதிமுக |
1999 | முரசொலி மாறன், திமுக | அப்துல் லத்தீப், அதிமுக |
2004 | தயாநிதி மாறன், திமுக | பாலகங்கா, அதிமுக |
2009 | தயாநிதி மாறன், திமுக | முகமதலி ஜின்னா, அதிமுக |
சட்டப்பேரவைத் தொகுதிகள் யார் வசம்? - 2016 நிலவரம்
துறைமுகம் : சேகர்பாபு, திமுக
எழும்பூர் (எஸ்சி) : ரவிசந்திரன், திமுக
ஆயிரம் விளக்கு : கு.க. செல்வம், திமுக
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி : ஜெ. அன்பழகன், திமுக
அண்ணாநகர் : மோகன், திமுக
வில்லிவாக்கம் : ரங்கநாதன், திமுக
2019- மக்களவைத் தேர்தல்: போட்டியிடும் முக்கிய வேட்பாளர்கள்
சாம் பால் (பாமக)
தயாநிதி மாறன் (திமுக)
கார்த்திகேயன் (நாம் தமிழர்)
தெஹலான் பார்கவி (எஸ்டிபிஐ)
கமீலா நாசர் (மநீம)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT