Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM
1951ம் ஆண்டு தேர்தல் முதல் 2006ம் ஆண்டு தேர்தல்வரை மேல்மலையனூர் தொகுதியாக இருந்தது. இத்தொகுதியில் வெற்றி பெற்ற கட்சியே ஆட்சி அமைத்த பெருமையை கொண்டதாக கடைசி வரை விளங்கியது. 2011ம் ஆண்டு தேர்தலில் தொகுதி மறுசீரமைப்பில் செஞ்சி தொகுதியாக மாறியது. மேல்மலையனூர் தொகுதியாக இருந்தவரை இத்தொகுதியில் வெற்றி பெற்ற கட்சியே ஆட்சி அமைத்த பெருமையை செஞ்சி தொகுதியாக மாறியவுடன் அந்த பெருமை பறிபோனது. இத்தொகுதியில் உலக புகழ் பெற்ற செஞ்சி கோட்டையும், மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலும் உள்ளது. இத்தொகுதி மக்களின் பிரதான தொழிலே விவசாயமாகும், ராஜாதேசுங்குவிற்கு மணிமண்டபமும், செஞ்சி கோட்டையை சுற்றுலா தளமாக்குவதுமே நிறைவேறாத கோரிக்கை. இத்தொகுதியில் தொழிற்சாலைகள் ஏதுமில்லாததால் முழுக்க முழுக்க கிணற்று நீர் மற்றும் ஏரி நீர் பாசனத்தையே நம்பி விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. பிறபடுத்தப்ப்ட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை இன மக்கள் வசித்து வருகின்றனர்.
இத் தொகுதியில் 7முறை திமுகவும்,2 முறை காங்கிரஸும், தலா 1 முறை உழவர் உழைப்பாளர் கட்சியும், சுயேட்சையும் , அதிமுக, பாமக, வும் வெற்றி பெற்றுள்ளது.
அவலூர்பேட்டை, தாயனூர், மேல்மலையனூர், வளத்தி,சொக்கனந்தல்,, மேல்பாப்பம்பட்டி, செம்மேடு,சிங்கவரம், தேவனாம்பேட்டை, நல்லான்பிள்ளைபெற்றாள் உள்ளிட்ட ஊராட்சிகளும் அனந்தபுரம் , செஞ்சி பேரூராட்சியையும் உள்ளடக்கியது.
இத்தொகுதியில் தற்போது 1, 24, 198 ஆண்கள், 1,25 963 பெண்கள், 30 திருநங்ககைள் என மொத்தம் 2, 50, 191 வாக்காளர்கள் உள்ளனர்.கடந்த 2011 தேர்தலில் கணேஷ் குமார் (பாமக) 77026 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்து போட்டியிட்ட சிவலிங்கம் (தேமுதிக) 75215 வாக்குகள் பெற்றார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | அ. கோவிந்தசாமி | அதிமுக |
2 | கே. எஸ் மஸ்தான் | திமுக |
3 | ஏ.கே. மணி | ம.தி.மு.க |
4 | அ.கணேஷ்குமார் | பாமக |
5 | எம். எஸ். ராஜேந்திரன் | பாஜக |
6 | தனசேகரன் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
செஞ்சி வட்டம் (பகுதி) எடப்பட்டு, வைலாமூர் (மேல்), தேப்பிராம்பட்டு, நந்திபுரம், பருத்திபுரம், பெரியநொளம்பை, பின்னனூர், கம்மந்தாங்கல், தேவந்தாவடி, கைவிடந்தாங்கல், மோடிப்பட்டு, பெருவளூர், மரக்கோணம், மேல் நெமிலி, சின்ன நொளம்பை, எய்யில், மேல் சேவலாம்பாடி, உண்ணமாந்தல், நாரணமங்கலம், தாழன்குன்றம், பரையன்பட்டு , கப்ளாம்பாடி, கோட்டைப்பூண்டி, சங்கிலிக்குப்பம், பறையன்தாங்கல், பழம்பூண்டி, சிந்தகம்பூண்டி, கீழவம்பூண்டி, கூடுவாம்பூண்டி, பாப்பந்தாங்கல், சொக்கம்பாலம், சேவலாம்பாடி கீழ், மேல்கரணை, வடவெட்டி, அருக்கம்பூண்டி, சாத்தாம்பாடி, சிறுதலைப்பூண்டி, கொடுக்கன்குப்பம், சிந்திப்பட்டு, நொச்சலூர், குந்தலம்பட்டு, கொடம்பாடி, வடுகன்பூண்டி, கடப்பனந்தல், அவலூர்பேட்டை, கோவில்பொறையூர், தாயனூர், மேல்மலையனூர், வளத்தி, தேவனூர், கங்கபுரம், சித்தேரி, சமத்தன்குப்பம், அன்னமங்கலம், சாத்தனந்தல், கன்னலம், சாத்தப்புத்தூர், மேல்மாம்பட்டு, தொரப்பாடி, சீயப்பூண்டி, மானந்தல், மேல்புதுப்பட்டு, வடபாலை, ஈயக்குன்னம், ஏம்பலம், துரிஞ்சிப்பூண்டி, மேல்மண்ணூர், பொற்குணம், கடலி, மாவனந்தல், வணக்கம்பாடி, மேலச்சேரி, செவலப்புரை, சிறுவாடி (ஆர்.எப்), ஆலம்பூண்டி, தென்பாலை, சொக்கனந்தல், கலத்தம்பட்டு, மேல் அறங்குணம், மேல் அத்திப்பட்டு, குழப்பலூர், மேல்பாப்பம்பட்டி, செம்மேடு, வீரமநல்லூர், சத்தியமங்கலம், நயமபடி, பரதந்தாங்கல், பசுமலைத்தாங்கல், பெருங்காப்பூர், முட்டக்காடு (ஆர்.பி), சிங்கவரம், ஊரணிதாங்கல், அஞ்சாசேரி, மேல் எடபாளயம், பொன்பட்டி, ஜெயங்கொண்டம், நரசிங்கராயன்பேட்டை, கோணை, சொன்னலூர், ஒடியாத்தூர், சின்னபொன்னம்பூண்டி, மணலப்பாடி, பெரியாமூர், தேவனாம்பேட்டை, சொரத்துப் பெரியன்குப்பம், புலிப்பட்டு, புதுப்பாளையம், பாக்கம், பேட்டை (செஞ்சி), புட்டகரம், காமகரம், தாதன்குப்பம், காட்டுசித்தாமூர், மாதப்பூண்டி, கஞ்சூர், நாகலாம்பட்டு, நல்லான்பிள்ளைபெற்றாள், உளியம்பட்டு, செத்தவரை, தடாகம், போத்துவாய், பழவலம், மல்லரசன்குப்பம், மழவந்தாங்கல், கெங்கவரம், கக்கன்குப்பம், தாண்வசமுத்திரம், பாடிப்பள்ளம், தச்சம்பட்டு, அத்தியூர், சிட்டாம்பூண்டி, சிறுநாம்பூண்டி, அப்பம்பட்டு, கவரை, கடகம்பூண்டி, மீனமூர், ஜம்போதி, கோம்மேடு, தென்புதுப்பட்டு, மாவட்டம்பாடி, பாலப்பட்டு, காரை (ஆர்.எப்), காரை, வரிக்கல், மேல் அருங்குணம், முள்ளூர், தாண்டவசமுத்திரம் (ஆர்.எப்), துத்திப்பட்டு, பொன்னன்குப்பம், கோணலூர், அணையேறி, புலிவந்தி, மாத்தூர் திருக்கை, ஓட்டம்பட்டு, திருவதிக்குன்னம் மற்றும் மடப்பாறை கிராமங்கள்,
செஞ்சி (பேரூராட்சி) மற்றும் அனந்தபுரம் (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,24,241 |
பெண் | 1,26,666 |
மூன்றாம் பாலினத்தவர் | 29 |
மொத்த வாக்காளர்கள் | 2,50,936 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1951 | அரங்கநாதன் | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 16918 |
1957 | எம். ஜங்கல் ரெட்டியார் | சுயேச்சை | 18016 |
1962 | இராசாராம் | காங்கிரஸ் | 29235 |
1967 | வி. முனுசாமி | திமுக | 39517 |
1971 | எஸ். சகாதேவ கவுண்டர் | திமுக | 39397 |
1977 | என். இராமச்சந்திரன் | திமுக | 26971 |
1980 | என். இராமச்சந்திரன் | திமுக | 41708 |
1984 | டி. என். முருகானந்தம் | காங்கிரஸ் | 56156 |
1989 | என். இராமச்சந்திரன் | திமுக | 38415 |
1991 | எஸ். எஸ். ஆர். இராமதாசு | காங்கிரஸ் | 57390 |
1996 | டி. நடராசன் | திமுக | 51327 |
2001 | வி. ஏழுமலை | அதிமுக | 58564 |
2006 | வி. கண்ணன் | திமுக | 62350 |
2011 | அ.கணேஷ்குமார் | பாமக | 77026 |
ஆண்டு | 2ம் இடம்பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1951 | கே. இராமகிருஷ்ணசாமி பிள்ளை | காங்கிரஸ் | 14837 |
1957 | வி. கோபால் கவுண்டர் | சுயேச்சை | 14291 |
1962 | அரங்கநாதன் | சுதந்திரா கட்சி | 27494 |
1967 | இராசாராம் | காங்கிரஸ் | 27905 |
1971 | வி. பெருமாள் நயினார் | நிறுவன காங்கிரஸ் | 26625 |
1977 | ஜி. கிருஷ்ணசாமி | அதிமுக | 23381 |
1980 | ஜி. கிருஷ்ணசாமி | அதிமுக | 40075 |
1984 | என். இராமச்சந்திரன் | திமுக | 34054 |
1989 | வி. இரங்கநாதன் | சுயேச்சை | 15785 |
1991 | என். இராமச்சந்திரன் | திமுக | 33916 |
1996 | டி. என். முருகானந்தம் | காங்கிரஸ் | 25893 |
2001 | இராசேந்திரன் என்கிற தீரன் | திமுக | 29478 |
2006 | ஆர். மாசிலாமணி | மதிமுக | 49417 |
2011 | சிவா என்ற சிவலிங்கம் | தேமுதிக | 75215 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | V. கண்ணன் | தி.மு.க | 62350 |
2 | R. மாசிலமணி | மதிமுக | 49417 |
3 | D. ராஜேந்திரன் | தே.மு.தி.க | 12491 |
4 | R. மணிவண்ணன் | சுயேச்சை | 1670 |
5 | M.S. ராஜேந்திரன் | பி.ஜே.பி | 1509 |
6 | G. காளியமூர்த்தி | பி.எஸ்.பி | 1043 |
7 | K. கோவிந்தராசு | சுயேட்சை | 629 |
8 | C. கணேசன் | சுயேட்சை | 523 |
9 | P. பூங்காவனம் | சுயேட்சை | 314 |
129946 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | A. கணேஷ் குமார் | பாமக | 77026 |
2 | R. சிவலிங்கம் | தே.மு.தி.க | 75215 |
3 | K. சிவமார்க் | சுயேச்சை | 8627 |
4 | A. ஏழுமலை | சுயேச்சை | 2962 |
5 | P. வைத்திலிங்கம் | சுயேச்சை | 2811 |
6 | A. மோகன் | ஐ.ஜே.கே | 1388 |
7 | M.S. ராஜேந்திரன் | பி.ஜே.பி | 1362 |
8 | R. கருணாநிதி | சுயேச்சை | 1275 |
9 | P. சிவலிங்கம் | சுயேச்சை | 1082 |
10 | M. பருத்திபுரம் சக்கரை | பி.எஸ்.பி | 1010 |
11 | S. பாஸ்கரையா | எம்.எம்.கே.எ | 1003 |
12 | V. வீராமலை | சுயேட்சை | 688 |
174449 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT