Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளில் ஒன்று கள்ளக்குறிச்சி.விழுப்புரம் மாவட்டத்தின் கடைக்கோடியில், சேலம் மாவட்டத்தின் எல்லையை ஒட்டி இத்தொகுதி அமைந்துள்ளது .கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி 1952-ம் ஆண்டு இரட்டைமுறை வாக்கெடுப்பில் பொது தொகுதியாக தொடங்கப்பட்டது. அதன் பிறகு 1962-ல் கள்ளக்குறிச்சி தனி தொகுதியாக மாற்றப்பட்டது. பின்னர் 1967-ல் கள்ளக்குறிச்சி மீண்டும் பொது தொகுதியாக மாறியது. அதன் பிறகு 1977-ம் ஆண்டு கள்ளக்குறிச்சி தொகுதி நீக்கப்பட்டு சின்னசேலம் தொகுதியாக மாற்றப்பட்டது. 2011-ல் தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு சின்னசேலம் சட்டப்பேரவை பொது தொகுதி நீக்கப்பட்டு கள்ளக்குறிச்சி தனித் தொகுதி உருவாக்கப்பட்டது.
இத்தொகுதியில் கள்ளக்குறிச்சி நகராட்சி,தியாகதுருகம் பேரூராட்சி,கள்ளக்குறிச்சி ஒன்றியம், சின்னசேலம் ஒன்றியம், தியாகதுருகம் ஒன்றியம் மற்றும் ரிஷிவந்தியம் ஒன்றியத்தைச் சேர்ந்த 2 ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன.
விவசாயம் சார்ந்த இப்பகுதியில் நெல் விளைச்சல் அதிகம். அதைத்தொடர்ந்து பருத்தி, மக்காச் சோளம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்படுகின்றனர். நெல் விளைச்சல் அதிகம் என்பதால் இப்பகுதியில் நவீன நெல் அரவை ஆலைகள் 75-க்கும் அதிகமாக உள்ளது. தனியார் பொறியியல் கல்லூரிகள் அதிக அளவில் இடம்பெற்றிருந்த போதிலும் அரசுக் கலைக் கல்லூரி ஒன்றும் இயங்கிவருகிறது. அதேபோன்று தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் இத்தொகுதியில் அதிகம். நெல் மற்றும் சாக்கு வியாபாரிகள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் அனைத்து சமுதாயத்தினரும் சம அளவில் வசிக்கின்றனர்.
இந்தத் தொகுதியில் நிலவும் நீண்ட காலப் பிரச்சனைகளில் முதன்மையாக விளங்குவது ரயில்வே திட்டம். கடந்த 2007-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டத் திட்டம் 11 ஆண்டுகளுக்குப் பின் தற்போது தான் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இருப்பினும் கள்ளக்குறிச்சி மார்க்கமாக சேலம்-சென்னை ரயில் இயக்கப்படவேண்டும். போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதியாக இருப்பதால் பேருந்து நிலையத்தை புறவழிச் சாலைப் பகுதிக்கு மாற்றவேண்டும், கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை ஏற்படுத்தவேண்டும், ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இதுவரை செயல்பாட்டுக்கு வராதது,மாவட்ட நூலகத்துக்கு ரூ,1 கோடி ஒதுக்கீடு செய்தும் அதற்கான பணிகள் துவங்காதது போன்ற பிரச்சனைகள் தொகுதி வாசிகள் முன் வைக்கின்றனர்.
1951 முதல் 1971 வரை திமுக 3 முறையும், சுயேட்சை இரு முறையும் வெற்றி பெற்றது. இதையடுத்து கள்ளக்குறிச்சி நீக்கப்பட்டு சின்னசேலம்தொகுதி உருவானது. கடந்த 2011 தொகுதி மறுசீரமைப்பினால் சின்னசேலம் நீக்கப்பட்டு மீண்டும் கள்ளக்குறிச்சி தனித் தொகுதி உருவானதையடுத்து 2011 தேர்தலில் அதிமுகவைச் சேர்ந்த அழகுவேல்ராஜா வெற்றிபெற்றார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | எ.பிரபு | அதிமுக |
2 | பி.காமராஜ் | தி.மு.க |
3 | பி.ராமமூர்த்தி | விசிக |
4 | ஆர்.செந்தமிழ் செல்வி | பாமக |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கள்ளக்குறிச்சி வட்டம் (பகுதி) அந்தியூர், குன்னியூர், மேல்வழி, தென்னேரிக்குப்பம், திம்மலை, வடதொரசலூர், சிறுவங்கூர், க.மாமனந்தல், சடையம்பட்டு, மட்டிகைக்குறிச்சி, நல்லாத்தூர், குதிரைச்சந்தல், காரணூர், பெருவங்கூர், நீலமங்கலம், மாடூர், வீரசோழபுரம், பிரிதிவிமங்கலம், விளக்கூர், சின்னமாம்பட்டு, வாழவந்தான்குப்பம், சிறுநாகலூர், பொறையூர், சிறுவால், தியாகை, சித்தலூர், விருகாவூர், முடியனூர், மடம், குரூர், நிறைமதி, தென்கீரனூர், தச்சூர், உலகங்காத்தான், நமசிவாயபுரம், பங்காரம், இந்திலி, பொற்படாக்குறிச்சி, விளம்பார், மலைகோட்டாலம், கனங்கூர், பொரசக்குறிச்சி, நாகலூர், வடபூண்டி, வேங்கைவாடி, குடியாநல்லூர், சோமநாதபுரம், நின்னையூர், கோட்டையூர், சித்தாத்தூர், குருபீடபுரம், குண்டலூர், கச்சகுடி, எரஞ்சி, கூத்தகுடி, உடையநாச்சி, கொங்கராயபாளையம், கண்டாச்சிமங்கலம், வரஞ்சரம், வேலகுறிச்சி, சித்தேரி, சாத்தனூர் (பி), வானவரெட்டி, தென்தொரசலூர், கனியாமூர், மூங்கில்பாடி, எலவடி, பூசப்பாடி, தென்பொன்பரப்பி, மேல்நாரியப்பனூர், ராயப்பனூர், எ.வாசுதேவனூர், அம்மையகரம், பூண்டி, தோட்டப்பாடி, ராயர் பாளையம், பெத்தானூர், சிறுவத்தூர், வரதப்பனூர், புக்கிரவாரி, சிறுமங்கலம், கீழ்நாரியப்பனூர், ஒகையூர், ஈயனூர், அசகளத்தூர், மகரூர், பெருமங்கலம், நல்லசேவிபுரம்,ஈரியூர், கருங்குழி, அம்மகளத்தூர், உலகியநல்லூர், நாட்டார்மங்கலம், தென்சிறுவளூர், இசாந்தை, நைனார்பாளையம், பெத்தாசமுத்திரம், தத்தாரிபுரம், காளசமுத்திரம், தாகம்தீர்த்தபுரம், குரால்,வி.அலம்பலம், வி.கிருஷ்ணாபுரம், கீழ்குப்பம், அனுமனந்தல், செம்பாக்குறிச்சி, கருந்தாலங்குறிச்சி, வீரபயங்கரம், பாக்கம்பாடி, கூகையூர் மற்றும் வி.மாமந்தூர் கிராமங்கள்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,32,428 |
பெண் | 1,31,645 |
மூன்றாம் பாலினத்தவர் | 21 |
மொத்த வாக்காளர்கள் | 2,64,094 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1951 | இளைய பிள்ளை | சுயேச்சை | 25799 |
1957 | நடராச உடையார் | சுயேச்சை | 25020 |
1962 | டி. சின்னசாமி | திமுக | 25084 |
1967 | டி. கே. நாயுடு | திமுக | 39175 |
1971 | டி. கேசவலு | திமுக | 38513 |
ஆண்டு | 2ம் இடம்பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1951 | ஆனந்தன் | காங்கிரஸ் | 24874 |
1957 | எம். ஆனந்தன் | சுயேச்சை | 24099 |
1962 | பி. வேதமாணிக்கம் | காங்கிரஸ் | 18837 |
1967 | வி. டி. இளைய பிள்ளை | காங்கிரஸ் | 28642 |
1971 | எசு. சிவராமன் | நிறுவன காங்கிரஸ் | 34374 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K. அழகுவேலு | அ.தி.மு.க | 111249 |
2 | A.C. பவராசு | வி.சி.கே | 51251 |
3 | K. நடேசன் | சுயேச்சை | 4031 |
4 | K. அறிவுக்கரசு | ஐ.ஜே.கே | 3246 |
5 | M. செந்தில் குமார் | சுயேச்சை | 2425 |
6 | V. அனாந்தி | சுயேச்சை | 2246 |
7 | M. தினேஷ் | பி.எஸ்.பி | 1481 |
8 | N. ராஜேஷ் | பி.ஜே.பி | 1192 |
9 | M. குருசாமி | சுயேச்சை | 1025 |
10 | A. அம்சவள்ளி | எல்.ஜே.பி | 760 |
178906 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT