Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதியில் ஒன்று உளுந்தூர்பேட்டை. மாவட்டத்தில் மிகப்பெரிய தொகுதியாகவும், அதிக வாககாளர்களை கொண்ட தொகுதியாக விளங்கும் உளுந்தூர்பேட்டை சட்டப் பேரவைத் தொகுதி தொகுதி 1952 முதல் 1994-ம் ஆண்டு வரை கடலூர் மாவட்டத்தில் இருந்தது. அதில் உந்தூர்பேட்டை, ஒன்றியம், திருநாவலூர் ஒன்றியம், திருவெண்ணைநல்லூர் ஒன்றியத்தில் திருவெண்ணைநல்லூர், அரசூர், சித்தானங்கூர் உட்பட உளுந்தூர்பேட்டை தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் திருநங்கைகள் சங்கமிக்கும் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் இந்தத் தொகுதியில் உள்ளது. ஒரு தனியார் கல்வி நிறுவனம், பொறியியல் கல்லூரிகளும் இந்தத் தொகுதியில் இயங்கிவருகிறது.தென்பெண்ணை, மலட்டாறு, கோரையாறு, கெடிலம் என்ற 4 ஆறுகள் இந்தத் தொகுதியைக் கடந்தே கடலுக்கு சென்றடைகிறது.அனைத்து சமூகத்தினரும் சம அளவில் வசிக்கும். விவசாயிகளும்,விவசாயக் கூலித் தொழிலாளர்களும் நிறைந்த இத்தொகுதியில் தென்மாவட்டத்தை வியபாரிகள் அதிக அளவில் வணிகம் செய்துவருகின்றனர். பனைமரங்கள் அதிகமுள்ள இத்தொகுதியில் பனைத் தொழில் ஓரளவுக்கு பலருக்கு வருமானத்தை வழங்குகிறது.
இந்தத் தொகுதியைப் பொறு்ததவரை நீண்ட கால பிரச்சனைக் குறைவில்லாமல் உள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள் போதுமான அளவுக்கு இல்லாது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத்திலேயே நீண்ட தூர நெடுஞ்சாலைகளை உள்ளடக்கிய இத்தொகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் உயிரிழப்பு தொடர்கிறது. இதை தடுக்கும் பொருட்டு உளுந்தூர்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் அரசின் சிறப்பு மருத்துவமனை திறக்கப்படுவேண்டும், சென்னை-திருச்சி மற்றும், உளுந்தூர்பேட்டை -சேலம் தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து விதிகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது, பெரிய அளவுக்கு தொழில் நிறுவனங்கள் இல்லாததால், அவ்வப்போது வெளி மாநிலங்களுக்கு இடம்பெயரும் இத்தொகுதி வாசிகளுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொழிற்பேட்டைகளை உருவாக்கவேண்டும் என இத்தொகுதி வாசிகளின் பிரதான கோரிக்கையாக உள்ளது. இத உயர் கல்வி நிறுவனம் இல்லை. தேசிய நெடுஞ்சாலைகளில் தொடரும் விபத்து, கல்வி நிறுவனம், போக்குவரத்து வசதி இல்லை. சாத்தனூர் அணை திறக்கப்பட்டால் தடுப்பணை வேண்டும்.
கடந்த 1952 முதல் 2011 வரை நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் 6 முறை திமுக, 4 முறை அதிமுக, 3 முறை காங்கிரஸ், ஒருமுறை சுயேட்சை வென்றுள்ளது.கடந்த 2006 சட்டப் பேரவைத் தேர்தலின் போது திமுகவைச் சேர்ந்த திருநாவுக்கரசும், 2011-ல் உள்ள அதிமுகவைச் சேர்ந்த குமரகுருவும் வெற்றி பெற்றனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ஆர்.குமரகுரு | அதிமுக |
2 | ஜி.ஆர்.வசந்தவேல் | தி.மு.க |
3 | விஜயகாந்த் | தேமுதிக |
4 | ஆர்.பாலு | பாமக |
5 | செ.தேசிங்கு | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
உளுந்தூர்பேட்டை வட்டம்
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,38,556 |
பெண் | 1,35,793 |
மூன்றாம் பாலினத்தவர் | 41 |
மொத்த வாக்காளர்கள் | 2,74,390 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு | வெற்றிபெற்றவர் | கட்சி |
1952 | கந்தசாமி படையாச்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
1957 | கந்தசாமி படையாச்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
1962 | மனோன்மணி | சுதந்திரா |
1967 | கந்தசாமி படையாச்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
1971 | சுப்பிரமணியம் | திமுக |
1977 | துலுக்கானம் | திமுக |
1980 | ரங்கசாமி | திமுக |
1984 | ஆனந்தன் | அதிமுக |
1989 | அங்கமுத்து | திமுக |
1991 | ஆனந்தன் | அதிமுக |
1996 | மணி | திமுக |
2001 | ராமு | அதிமுக |
2006 | திருநாவுக்கரசு | திமுக |
2011 | ரா.குமரகுரு | அதிமுக |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K. திருநாவுக்கரசு | தி.மு.க | 65662 |
2 | E.விஜயாராகவன் | வி.சி.கே | 46878 |
3 | C. சண்முகம் | தே.மு.தி.க | 30411 |
4 | V. ராமலிங்கம் | பி.ஜே.பி | 3099 |
5 | A. கண்ணன் | சுயேச்சை | 3011 |
149061 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | R. குமரகுரு | அ.தி.மு.க | 114794 |
2 | M. முகமது யூசுப் | வி.சி.கே | 61286 |
3 | N. சந்திரசேகரன் | சுயேச்சை | 3642 |
4 | A. அன்பு | பி.ஜே.பி | 2662 |
5 | L. ஜகதிசன் | சுயேச்சை | 1811 |
6 | M. வெங்கடேசன் | சி.பி.ஐ | 1751 |
7 | G. முத்தையன் | சுயேச்சை | 1743 |
8 | M. ஜான் பீட்டர் | சுயேச்சை | 1576 |
9 | K. அரசன் | சுயேச்சை | 1018 |
10 | M. தேவர் | சுயேச்சை | 764 |
191047 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT