Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM
மிகப்பெரிய தொகுதியாக விளங்கிய முகையூர் தொகுதி, 2011ம் ஆண்டு திருக்கோவிலூர் தொகுதியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
இத்தொகுதியில் அரகண்டநல்லூர், திருக்கோயிலூர் , திருவெண்ணைநல்லூர் பேரூராட்சிகளும், தி. அத்திப்பாக்கம், வீரபாண்டி, , கண்டாச்சிபுரம், குலதீபமங்கலம், முகையூர், வீரசோழபுரம்,டி.மழவராயனூர், செம்மார், , மலையம்பட்டு உள்ளிட்ட 94 ஊராட்சிகளும் உள்ளடக்கியது.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூர் அணையில் திறந்துவிடப்படும் தெண்பெண்ணையாற்று நீர் இத்தொகுதிக்குள் நுழைந்து கடலூர் மாவட்டம் வரை செல்கிறது. புகழ்பெற்ற கபிலர் குன்று, உலகளந்த பெருமாள் கோயில், விரட்டானேஸ்வரர் ஆலையம், ஞானானந்த கிரி சுவாமிகள் மூல தபோவனம் உள்ளிட்டவை இத்தொகுதியில் உள்ளது.
விரிவுபடுத்தப்பட்ட புதிய பஸ்நிலைய கோரிக்கை , முதலமைச்சரால் புராதான நகர மேம்பாட்டு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டு, சீரழிக்கப்பட்டுள்ள தெப்பக்குளத்தை புனரமைக்க வேண்டும்.ஏரியில் இருந்து குளத்திற்கு தண்ணீர்வரும் பாதாள கால்வாயை சீரமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகள் முக்கியமானவை., நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
இத்தொகுதியில் . 1, 20, 927ஆண்களும், 1, 17, 358 பெண்களும் 33 திருநங்கைகளும் என 2,38, 318 வாக்காளர்கள் உள்ளனர்.
தற்போது தேமுதிகவைச் சேர்ந்த எல். வெங்கடேசன் எம் எல் ஏவாக பதவி வகிக்கிறார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ஜி. கோதண்டபாணி | அதிமுக |
2 | கே. பொன்முடி | தி.மு.க |
3 | டி.எம். கணேஷ் | தமாகா |
4 | பால.சக்தி | பாமக |
5 | தண்டபாணி | இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் |
6 | த. ராஜசேகர் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருக்கோவிலூர் தாலுக்கா (பகுதி) டி.அத்திப்பாக்கம், கொடுக்கப்பட்டு, வேளாகுளம், வசந்தகிருஷ்ணாபுரம், ஆதிச்சனூர், வீரபாண்டி, புழிக்கல், கல்லந்தல், அருணாபுரம், ஓட்டம்பட்டு, தண்டரை, அடுக்கவும், துரிஞ்சிக்காடு (ஆர்.எப்). வீரங்காபுரம், கண்டாச்சிபுரம், மேல்வாழை, கீழ்வாழை, ஒதியத்தூர், ஒடுவன்குப்பம், சித்தாத்தூர், செங்கமேடு, மடவிளாகம், புதுப்பாளையம், வேடாலம், அப்பனந்தல், புலராம்பட்டு, திருமலைப்பட்டு, வெள்ளம்புத்தூர், அரசங்குப்பம், நாயனூர், கோட்டமருதூர், ஆலூர், கொலப்பாக்கம், சடகட்டி, நெடுங்கம்பட்டு, கொழுந்திராம்பட்டு, சொரையப்பட்டு, கோட்டகம், கழுமரம், விழ்ந்தை, அகஸ்தியர் மூலை, குலதீபமங்கலம், குடமுரட்டி, மணம்பூண்டி, தேவனூர், வடகரைத்தாழனூர், கொல்லூர், அந்திலி, நெற்குணம், எமப்பேர், அருமலை, மேலகொண்டூர், வி.புத்தூர், காடகனூர், கிங்கிலிவாடி, வி.சித்தாமூர், தனிகேளம்பட்டு, ஆலம்பாடி, சத்தியகண்டனூர், கஸ்பாகாரணை, பெரிச்சானூர், சித்தேரிப்பட்டு, சென்னகுணம், அ.கூடலூர், அயந்தூர், கொடுங்கால், முகையூர், பரனூர், கீழக்கொண்டூர், அத்தண்ட மருதூர், வடக்குநெமிலி, அவியூர், தேவி அகரம், அவியூர்கொளப்பாக்கம், முதலூர், வடமருதூர், சித்தலிங்கமடம், சி.மெய்யூர், வீரசோழபுரம், ஆற்காடு, அருளவாடி, கொங்கராயனூர், பையூர், அண்டராயனூர், டி.புதுப்பாளையம், வீரணாம்பட்டு, கொடியூர், டி.குன்னத்தூர், எல்ராம்பட்டு, காட்டுப்பையூர், வடமலையனூர், வில்லிவலம், அருங்குருக்கை, டி.கொணலவாடி, பெண்ணைவலம், ஆக்கனூர், பாவந்தூர், பனப்பாக்கம், இளந்துரை, மணக்குப்பம், டி.இடையூர், சின்னசெவலை, டி.மழவராயனூர், சிறுவானூர், சிறுமதுரை, மாரங்கியூர், ஏனாதிமங்கலம், எரளூர், வளையாம்பட்டு, மேலமங்கலம், செம்மார், டி.சாத்தனூர், ஏமப்பூர், மலையம்பட்டு, மற்றும் தடுத்தாட்கொண்டூர் கிராமங்கள்.
அரகண்டநல்லூர் (பேரூராட்சி), திருக்கோயிலூர் (பேரூராட்சி) மற்றும் திருவெண்ணைநல்லூர் (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,20,413 |
பெண் | 1,17,732 |
மூன்றாம் பாலினத்தவர் | 34 |
மொத்த வாக்காளர்கள் | 2,38,179 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | L. வெங்கடேசன் | தே.மு.தி.க | 78229 |
2 | M. தங்கம் | தி.மு.க | 69438 |
3 | V. வெங்கடேசன் | சுயேச்சை | 6029 |
4 | S.S. வெங்கடேசன் | ஐ.ஜே.கே | 3280 |
5 | C. பெரியசாமி | பி.எஸ்.பி | 1271 |
6 | R. சாந்தி | சுயேச்சை | 828 |
159075 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT