Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM

46 - குடியாத்தம் (தனி )

வேலூர் மாவட்டத்தில் உள்ள 13 சட்டப்பேரவை தொகுதியில் மிகவும் பழமையான தொகுதியில் குடியாத்தம் முக்கியமானது. 1952 முதல் தேர்தலை சந்திக்கிறது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நாடு சுதந்திரம் அடைந்தபோது டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் இந்திய தேசிய கொடியை தயாரித்தது குடியாத்தம் நகரில்தான். கல்விக் கண் திறந்த காமராஜரை இடைத் தேர்தலில் வெற்றிபெற வைத்து முதலமைச்சராக்கி அழகு பார்த்த தொகுதி என்ற பெருமைக்குரியது.

சர்வதேச ஏற்றுமதி தரம் வாய்ந்த குடியாத்தம் கைத்தறி லுங்கி உற்பத்தியால் கணிசமான அன்னிய செலாவணி கிடைக்கிறது. 700-க்கும் மேற்பட்ட குறு, சிறு தீப்பெட்டி தொழிற்சாலைகளால் குட்டி சிவகாசி என்ற அடைமொழியுடன் பீடி தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் நிறைந்த தொகுதியாக இருக்கிறது.

தொகுதி மறு சீரமைப்புக்குப் பிறகு பேரணம்பட்டு தொகுதி கலைக்கப்பட்டு குடியாத்தம் (தனி) தொகுதியாக உருவாக்கப்பட்டது. குடியாத்தம் ஒன்றியத்தின் பெரும்பகுதி புதிதாக உருவாக்கப்பட்ட கே.வி.குப்பம் (தனி) தொகுதியுடன் இணைக்கப்பட்டது. தற்போது, குடியாத்தம் மற்றும் பேரணாம்பட்டு நகராட்சி, குடியாத்தம் ஒன்றியத்தில் 13 கிராம ஊராட்சி, பேரணாம்பட்டு ஒன்றியத்தில் 34 கிராம ஊராட்சி, மாதனூர் ஒன்றியத்தில் ஒரு ஊராட்சி இணைக்கப்பட்டுள்ளது.

தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது பின்தங்கிய பேரணாம்பட்டு பகுதியில் அரசு கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது தொழிற் பயிற்சி நிலையம் தொடங்க வேண்டும். போக்குவரத்து நெரிசலில் திணறும் குடியாத்தம் நகருக்கு புறவழிச்சாலை, பேரணம்பட்டு மற்றும் குடியாத்தம் நகரில் இருந்து இரவு நேரத்தில் ஒரு மணி நேரத்து ஒரு பேருந்து சேவை.

பேரணாம்பட்டு பேருந்து நிலையம், நலிந்துவரும் கைத்தறி, தீப்பெட்டி, பீடி தொழிலாளர்களுக்கு மாற்று வாழ்வாதாரம், இஎஸ்ஐ மருத்துவமனை, ஆந்திர வனப்பகுதியில் இருந்து யானைகள் நடமாட்டத்தைத் தடுக்க அகழி வெட்டுவது, ஆந்திர மாநிலம் கடப்பநத்தத்தை இணைக்க வனப்பகுதியில் சாலை அமைக்க வேண்டும்.

தொகுதி சீரமைப்புக்குப் பிறகு நடந்த முதல் தேர்தலில் முதல் எம்எல்ஏவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கு.லிங்கமுத்து வெற்றிபெற்றார். 1952-ல் நடந்த முதல் தேர்தலில் இரட்டை தொகுதியாக இருந்தது. அப்போது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ.ஜெ.அருணாச்சல முதலியார், ஏ.எம்.ரத்தினசாமி ஆகியோர் வெற்றிபெற்றனர். காமராஜர் முதலமைச்சர் ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் அருணாச்சல முதலியார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இரட்டை தொகுதியில் ஒருவர் பதவியை ராஜினாமா செய்தால் மற்றொரு உறுப்பினர் பதவியும் தானாக ரத்தாகிவிடும் என்ற விதியால் ரத்தினசாமியின் பதவியும் பறிபோனது.

இதையடுத்து 1954-ல் நடந்த இடைத் தேர்தலில் இரட்டை வாக்குரிமை அடிப்படையில் காமராஜர், டி.மணவாளன் ஆகியோர் வெற்றிபெற்றனர். காமராஜர் முதலமைச்சரானார். 1957-ல் நடந்த இரட்டைத் தொகுதி தேர்வில் இந்திய கம்யூனிஸ் கட்சியின் வி.கே.கோதண்டராமன், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.மணவாளன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

ஒரு இடைத் தேர்தல் மற்றும் 2 முறை இரட்டை உறுப்பினரை தேர்வு செய்யும் தேர்தல் என்ற அடையில் 15 தேர்தல்களை குடியாத்தம் தொகுதி சந்தித்துள்ளது. காங்கிரஸ் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 5, இந்திய கம்யூனிஸ்ட் 2, திமுக 2, அதிமுக ஒரு முறை வெற்றிபெற்றுள்ளன

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

சி.ஜெயந்தி பத்மநாபன்

அதிமுக

2

கே.ராஜமார்தாண்டன்

தி.மு.க

3

கு.லிங்கமுத்து

இந்திய கம்யூ.

4

பி.தீபா

பாமக

5

டி.கணேசன்

இந்திய ஜனநாயக கட்சி

6

எஸ்.ராஜ்குமார்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

குடியாத்தம் வட்டம் (பகுதி)

அரவட்லா, மோர்தானா, ரங்கம்பேட்டை, குண்டலபள்ளி, பத்தலபள்ளி, எருக்கம்பட்டு, ஏரிகுத்தி, சேம்பள்ளி, கத்தாரிகுப்பம், மூங்கப்பட்டு, பெரும்பாடி, அக்ரஹாரம், ரெங்கசமுத்திரம், எர்தாங்கல், மொரசபள்ளி, தொட்டிதுரை மோட்டூர், பேர்ணாம்பட்டு, கொத்தபள்ளி, சின்னதாமல்செருவு, மசிகம், சாரக்கல், கெம்பசமுத்திரம், பல்லாளகுப்பம், புகலூர், பரவக்கல், பங்கரிஷிகுப்பம், கொத்தமாரிகுப்பம், கருகூர், வசனம்பள்ளி, பாலூர், மாச்சம்பட்டு, மேல்கொத்தகுப்பம், ராஜக்கல், ரெட்டிமாங்குப்பம், சிக்கரிஷிகுப்பம், செண்டத்தூர், மேல்முருங்கை, அழிஞ்சிகுப்பம், மேல்வைட்த்ஹியணான்குப்பம், மேம்பட்டி, கீழ்பட்டி, குளித்திகை, சின்னதொட்டாளம், வளத்தூர், கருணீகசமுத்திரம் ,பரதராமி மற்றும் உள்ளி கிராமங்கள்,

பேர்ணாம்பட்டு (பேரூராட்சி), குடியாத்தம், (நகராட்சி), மற்றும் சீவூர் (சென்சஸ் டவுன்),

வாணியம்பாடி வட்டம் (பகுதி)

பைரபள்ளி, கைலாசகிரி, நரியம்பட்டு, சாத்தம்பாக்கம், கோமேஸ்வரம், சோமலாபுரம், பாவரவுதாம்பட்டடை, அய்யத்தம்பட்டு, சின்னவரிகம், தேவலாபுரம், லப்பைமாங்குப்பம் மற்றும் பெரியவரிகம் கிராமங்கள்,

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,29,565

பெண்

1,33,403

மூன்றாம் பாலினத்தவர்

-

மொத்த வாக்காளர்கள்

2,62,968

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

எ. ஜே. அருணாச்சல முதலியார்

காங்கிரஸ்

24101

20.13

1957

வி. கே. கோதண்ட ராமன்

இ பொ க

33811

21.78

1962

டி. மணவாளன்

காங்கிரஸ்

25795

44.97

1967

வி. கே. கோதண்ட ராமன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட

38825

61.21

1971

எப். கே. துரைசாமி

திமுக

34954

56.38

1977

வி. கே. கோதண்ட ராமன்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட

20590

29.54

1980

கே. ஆர். சுந்தரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட

30869

43.87

1984

ஆர். கோவிந்தசாமி

காங்கிரசு

32077

39.15

1989

கே. ஆர். சுந்தரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட

22037

23.46

1991

வி. தண்டாயுதபாணி

காங்கிரஸ்

63796

64.41

1996

வி. ஜி. தனபால்

திமுக

48837

48.62

2001

சி. எம். சூரியகலா

அதிமுக

61128

57.05

2006

ஜி. லதா

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட

48166

---

2011

லிங்கமுத்து

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட

79416

---

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

விழுக்காடு

1951

பி. எசு. இராஜகோபால நாயுடு

சுயேச்சை

18940

15.82

1957

டி. மணவாளன்

காங்கிரசு

33341

21.47

1962

சி. குப்புசாமி

குடியரசு கட்சி

15258

26.6

1967

பி. ஆர். நாயுடு

காங்கிரஸ்

21901

34.53

1971

டி. எ. ஆதிமூலம்

நிறுவன காங்கிரஸ்

18580

29.97

1977

சுந்தரராசுலு நாயுடு

ஜனதா கட்சி

18046

25.89

1980

கே. எ. வாகாப்

சுயேச்சை

20929

29.74

1984

எ. கே. சுந்தரேசன்

சுயேச்சை

25630

31.28

1989

ஆர். வேணுகோபால்

அதிமுக (ஜெ)

19958

21.24

1991

ஆர். பரமசிவம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட

28897

29.17

1996

எஸ். இராம்கோபால்

காங்கிரஸ்

19701

19.61

2001

எஸ். துரைசாமி

திமுக

36804

34.35

2006

ஜெ. கே. என். பழனி

அதிமுக

46516

---

2011

. க. ராஜமார்த்தாண்டன்

திமுக

73574

---

2006 சட்டமன்ற தேர்தல்

44. குடியாத்தம்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

G. லதா

சி.பி.ஐ

48166

2

K.N. பழநி

அ.தி.மு.க

46516

3

K. சுதீஷ்

தேமுதிக

20557

4

S. நடராஜன்

சுயேச்சை

1500

5

P.V. கோவிந்தராஜி

எஸ்.பி

1073

6

K.S. குமரவேல்

பிஜேபி

997

7

E. கருணாநிதி

பகுஜன்

965

8

M. கோவிந்தசாமி

சுயேட்சை

768

9

P. சங்கரன்

சுயேட்சை

453

10

V. தமிழ் செல்வன்

சுயேட்சை

343

121338

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 சட்டமன்ற தேர்தல்

44. குடியாத்தம்

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

கு. லிங்கமுத்து

சி.பி.ஐ

79416

2

க. ராஜமார்தாண்டன்

தி.மு.க

73574

3

C. பாரதி

ஐ.ஜே.கே

1687

4

P. வடிவேலன்

சுயேச்சை

1416

5

E. கருணாநிதி

பி.எஸ்.பி

1335

6

P. மேகனாதன்

பு.பா

1168

7

A.மதி

சுயேச்சை

1053

8

C. பாஸ்கரன்

சுயேச்சை

595

9

ரமேஷ் பாபு

சுயேச்சை

558

10

கனகராஜ் .E.

சுயேச்சை

499

11

C. ராஜன்

எல்.ஜே.பி

297

12

K. ஏகனாதன்

சுயேச்சை

235

161833


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x