Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM

42 - ஆற்காடு

வேலூர் மாவட்டத்தின் மிகப் பழமையான நகரங்களில் ஆற்காடு குறிப்பிடத்தக்கது. பெரிய தொழிற்சாலைகள் எதுவும் இல்லாமல் இருந்தாலும் வரலாற்றையும் விவசாயத்தையும் பின்னணியாகக் கொண்டது. பாலாற்றின் ஒரு கரையில் ராணிப்பேட்டை இருக்கிறது. அதன் மறுகரையில் ஆற்காடு தொகுதி உள்ளது.

ஆற்காடு நகராட்சி, விளாப்பாக்கம், திமிரி, கலவை பேரூட்சி மற்றும் ஆற்காடு ஒன்றியத்தில் 55 கிராம ஊராட்சிகள், கணியம்பாடி ஒன்றியத்தில் 18 ஊராட்சி, வேலூர் ஒன்றியத்தில் 1 ஊராட்சி இந்த தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

ஆற்காடு கிச்சிலி சம்பா அரிசி உற்பத்திக்கு பெயர்பெற்ற இந்தத் தொகுதி சற்றேறக்குறைய 150 ஆண்டுகள் ஆற்காடு நவாப்புகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆம்பூர் பிரியாணிக்கு அடுத்தபடியாக ஆற்காடு பிரியாணி, மக்கன்பேடாவும் சிறப்பு வாய்ந்தவை. தொகுதியின் அடையாளங்களாக ஆற்காடு நவாப் சதாத்துல்லா கானின் பச்சை நிற கல்லறை கட்டிடம், போரில் ஆற்காட்டை கைப்பற்றிய ராபர்ட் கிளைவ் ஏற்படுத்திய டெல்லி கேட் தொகுதியின் முக்கிய அடையாளங்கள்.

விவசாயம், நெசவுத் தொழில் பிரதானம். தமிழ்நாட்டில் காய்கனி கழிவில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் முதல் நகராட்சி என்ற பெருமையுடன் சிறந்த நகராட்சியாக தேர்வு செய்யப்பட்டு 2013-ம் ஆண்டு விருது வழங்கப்பட்டது.

ஆற்காடு தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.எஸ்.எஸ் கல்லூரி அருகில் மேம்பாலம், காவனூரில் ஆரம்ப சுகாதார நிலையம், ஆற்காடு அரசு மருத்துவமனையில் கூடுதல் வசதிகளுடன் பிணவறைக்கு குளிரூட்டி வசதி, செய்யாறு, ஆரணி, கண்ணமங்கலம் பகுதிக்கு அரசு பேருந்து சேவை மற்றும் கிராமப் பகுதியில் இருந்து பள்ளி நேரத்துக்கு அரசு பேருந்து வசதி, கால்நடை மருத்துவமனைகள் தேவையாக இருக்கிறது.

1952 முதல் சட்டப்பேரவை தேர்தலை ஆற்காடு தொகுதி சந்தித்துவருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 14 தேர்தலில் காங்கிரஸ் 2, திமுக 5, அதிமுக 6, பாமக ஒருமுறை வெற்றிபெற்றுள்ளது. கடந்த 2006-ம் ஆண்டு தேர்தலில் பாமக வேட்பாளர் கே.எல்.இளவழகன் வெற்றிபெற்றார். 2011-ம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் கே.எல்.இளவழகன் அதிமுக வேட்பாளர் வி.கே.ஆர்.சீனிவாசனிடம் தோல்வி அடைந்தார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.வி.ராமதாஸ்

அதிமுக

2

ஜெ.எல்.ஈஸ்வரப்பன்

திமுக

3

பி.என்.உதயகுமார்

மதிமுக

4

ஜி.கரிகாலன்

பாமக

5

டி.அருள்தாசன்

பாஜக



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

காட்பாடி வட்டம் (பகுதி):

தெங்கால், பாலேகுப்பம், கொண்டாரெட்டிபள்ளி, பொன்னை, பரமசாத்து, மாதண்டகுப்பம், கீரைசாத்து, கொல்லபள்ளி, அம்மவாரிபள்ளி, மகிமண்டலம், பெருமாள்குப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, முத்தரசிகுப்பம், விண்ணம்பள்ளி, கொடுக்கந்தாங்கல், இளையநல்லூர், தேம்பள்ளி, வெப்பாலை, ஸ்ரீபாதநல்லூர், குகையநல்லூர், ஏராந்தாங்கல், சேர்க்காடு, ஒட்டந்தாங்கல், கரிகிரி, கண்டிபேடு, புதூர், செம்பராயநல்லூர், பிரம்மபுரம், சேவூர், அரும்பருத்தி, கார்ணம்பட்டு, அம்முண்டி, வண்டநந்தாங்கல், கரசமங்கலம், உண்ணாமலைசமுத்திரம், தலையாரம்பட்டு, தண்டலம்கிருஷ்ணாபுரம், விருதம்பட்டு, மற்றும் தாராபடவேடு கிராமங்கள்.

தாராபடவேடு, (பேரூராட்சி), கழிஞ்சூர் (பேரூராட்சி), காட்பாடி (பேரூராட்சி), காங்கேயநல்லூர் (சென்சஸ் டவுன்), காந்திநகர் (காட்பாடி விரிவாக்கம்) (பேரூராட்சி) திருவலம் (பேரூராட்சி) மற்றும் சேனூர் (சென்சஸ் டவுன்),

வேலூர் வட்டம் (பகுதி)

செம்பாக்கம் (பேரூராட்சி)

வாலாஜா வட்டம் (பகுதி)

வசூர், பல்லேரி, கொண்டகுப்பம், மருதம்பாக்கம், ஏகாம்பரநல்லூர், சீக்கராஜபுரம், முகுந்தராயபுரம், கத்தாரிகுப்பம் மற்றும் லாலாப்பேட்டை கிராமங்கள்.

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,20,422

பெண்

1,26,091

மூன்றாம் பாலினத்தவர்

-

மொத்த வாக்காளர்கள்

2,46,513

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்

ஆண்டு

வெற்றிபெற்றவர்

கட்சி

1962

பி.ராஜகோபால்நாயுடு

காங்கிரஸ்

1967

ஜி.நடராஜன்

திமுக

2006 சட்டமன்ற தேர்தல்

42. ஆற்காடு

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.L. இலவழகன்

பா.மா.க

60286

2

V.R. சந்திரன்

அ.தி.மு.க

48969

3

V.B. வேலு

தி.மு.க

8523

4

S. சேதுமாதவன்

எஸ்.பி.

2006

5

P. குப்புசாமி

சுயேச்சை

1610

6

S. தியாகராஜன்

பிஜேபி

1319

7

V.குபேந்திரன்

சுயேச்சை

657

8

C. முனிசாமி

எல்.ஜெ.பி

337

123707

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்



2011 சட்டமன்ற தேர்தல்

42. ஆற்காடு

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

ஆர். சீனிவாசன்

அ.தி.மு.க

93258

2

இளவழகன்

பா.ம.க

74005

3

M. வேலு

சுயேச்சை

3211

4

தணிகாசலம்

பி.ஜே.பி

2046

5

விஜயன். S.R

சுயேச்சை

960

6

C. ஸ்ரீனிவாசன்

சுயேச்சை

710

7

K. பாலமுருகன்

பி.எஸ்.பி

497

8

திருநாவுக்கரசு .S

சுயேச்சை

337

9

K. ஆனந்தன்

எல்.ஜே.பி

302

10

V.G. சம்பத்

சுயேச்சை

284

175610

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x