Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM
அரக்கோணம் தொகுதியில் பிரிக்கப்பட்ட சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதி கடந்த 1957 முதல் தேர்தலை சந்திக்கிறது. 108 திவ்யதேசங்களில் புகழ்பெற்ற லட்சுமி நரசிம்மர் கோயில் தொகுதியின் அடையாளம். மேலும், டிவிஎஸ் பிரேக்ஸ் இந்தியா நிறுவனம், பிரபல பாரதி பேருந்து குழுமம், முனி பச்சையப்பன் தொழிற்சாலையால் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
சோளிங்கர், நெமிலி, பனப்பாக்கம், பாணாவரம், காவேரிப்பாக்கம் உள்ளிட்ட பகுதியில் விசைத்தறிக் கூடங்கள் மற்றும் விவசாயம் பிரதான தொழில். சோளிங்கர், நெமிலி, பனப்பாக்கம், காவேரிப்பாக்கம் என பேரூராட்சி மற்றும் சோளிங்கர் ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகள், காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 44 கிராம ஊராட்சிகள், நெமிலி ஒன்றியத்தில் 28 ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளது.
தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருப்பது எல்லா தகுதியும் இருந்தும் தனி தாலுகா உருவாக்கப்படாமல் இருப்பதுதான். சோளிங்கர் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும். பனப்பாக்கத்தில் வார சந்தை அமைக்க தனி இடம், நெமியலில் இருந்து காஞ்சிபுரத்துக்கு பேருந்து வசதி, சோளிங்கர் தக்கான் குளம் தூர்வார வேண்டும்.
புதிய தொழிற்சாலைகள் தொடங்க வேண்டும். சுற்றுலா வளர்ச்சிக்காக சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்கு ரோப்கார் திட்டம், பாணாவரம் ரயில் நிலையத்தில் கூடுதல் ரயில்கள் நின்று செல்வது, விசைத்தறி மேம்பாட்டுக்காக கட்டணம் இல்லாத மின்சாரம் வழங்க வேண்டும் என்பது கோரிக்கையாக இருக்கிறது.
சோளிங்கர் சட்டப்பேரவை தொகுதி இதுவரை 14 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 6 முறை, அதிமுக 4, காமன் வீல் கட்சி, திமுக, தமாகா மற்றும் தேமுதிக தலா ஒரு முறை வெற்றிபெற்றுள்ளது.
கடந்த 2006 தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு வெற்றிபெற்றார். 2011 தேர்தலில் இதே தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அருள் அன்பரசு, அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் பி.ஆர்.மனோரகனிடம் தோல்வி அடைந்தார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | என்.ஜி.பார்த்திபன் | அதிமுக |
2 | ஏ.எம்.முனிரத்தினம் | காங்கிரஸ் |
3 | பி.ஆர்.மனோகர் | தேமுதிக |
4 | கே.சரவணன் | பாமக |
5 | எம்.குமார் | பாஜக |
6 | பி.செந்தில்குமார் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
வாலாஜா வட்டம் (பகுதி):
சோமசமுத்திரம், கல்பட்டு, பாண்டியநல்லூர், கள்ளான்குப்பம், கொடக்கல், புலிவலம், கடப்பந்தாங்கல், தகரசூப்பம், செங்கால்நத்தம், செக்கடிகுப்பம், ரெண்டாடி, வெங்கடாபுரம் (மேல்), கேசவனகுப்பம், ஜம்புகுளம், கல்மேல்குப்பம், வேலம், கொளத்தேரி, மருதாலம், காட்டாரம்பாக்கம், தலங்கை, வாங்கூர், கோவிந்தசேரிகுப்பம், கோவிந்தசேரி, மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கள், ஒழுகூர் மற்றும் சித்தூர்த்தூர் கிராமங்கள்.
சோளிங்கர் (பேரூராட்சி),
அரக்கோணம் வட்டம் (பகுதி)
வெங்குபட்டு, பரவத்தூர், அக்கச்சிக்குப்பம், பாராஞ்சி, நந்திவேடுதாங்கல், மின்னல், வயலாம்பாடி, கூடலூர், தானிக்கால், அய்ப்பேடு, அரியூர், கரிக்கால்,நந்திமங்கலம், சூரை, ஆயல், போளிப்பாக்கம், தப்பூர், பழையபாளையம், குன்னத்தூர், அன்வர்திகான்பேட்டை, காட்டுப்பாக்கம், பாணாவரம், மங்கலம், கூத்தம்பாக்கம், மகேந்திரவாடி, கருணாவூர், புதூர், கீழ்வீராணம், பன்னீயூர், புதுப்பட்டு, சிறுவளையம், பேரப்பேரி, உளியநல்லூர், வேப்பேரி, வேட்டாங்குளம், அசனல்லிகுப்பம், திருமால்பூர், நெல்வாய், எஸ்.கொளத்தூர், ரெட்டிவலம், அகவலம், நெடும்புலி, துரையூர், பெருவளையம், ஆலப்பாக்கம், துரைபெரும்பாக்கம், மாகானிப்பட்டு, சேரி, கட்டளை, ஈரானச்சேரி, உதிரம்பட்டு, தருமநீதி, நங்கமங்கலம், மேலபுலம், பொய்கைநல்லூர், வேளியநல்லூர், தண்டலம் (ஜாகீர்), மேல்வெம்பாக்கம், கீழ்வெம்பாக்கம், பெரும்புலிப்பாக்கம், அவலூர், கரிவேடு, ஆயர்பாடி, ஒச்சேரி, சிறுகரும்பூர், அத்திப்பட்டு, வேகாமங்கலம், மாமண்டூர், களத்தூர் மற்றும் சங்கரம்பாடி கிராமங்கள்.
நெமிலி (பேரூராட்சி), காவேரிப்பாக்கம் (பேரூராட்சி) மற்றும் பணப்பாக்கம் (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,27,256 |
பெண் | 1,29,994 |
மூன்றாம் பாலினத்தவர் | - |
மொத்த வாக்காளர்கள் | 2,57,250 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1957 | பி. பக்தவச்சல நாயுடு | காங்கிரஸ் | 22991 | 55.44 |
1962 | எ. எம். பொன்னுரங்க முதலியார் | காங்கிரஸ் | 33291 | 56.02 |
1967 | அரங்கநாதன் | திமுக | 35225 | 51.67 |
1971 | எ. எம். பொன்னுரங்க முதலியார் | நிறுவன காங்கிரஸ் | 36776 | 55.39 |
1977 | எசு. ஜே. இராமசாமி | அதிமுக | 25997 | 38.23 |
1980 | சி. கோபால் | அதிமுக | 35783 | 49.4 |
1984 | என். சண்முகம் | அதிமுக | 47967 | 51.38 |
1989 | எ. எம். முனிரத்தினம் | காங்கிரஸ் | 33419 | 39.24 |
1991 | எ. எம். முனிரத்தினம் | காங்கிரஸ் | 58563 | 53.9 |
1996 | எ. எம். முனிரத்தினம் | தமாகா | 65361 | 54.33 |
2001 | ஆர். வில்வநாதன் | அதிமுக | 62576 | 50.12 |
2006 | அருள் அன்பரசு | காங்கிரஸ் | 63502 | --- |
2011 | பி.ஆர்.மனோகர் | தேமுதிக | 69963 | --- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1957 | எம். சுப்பரமணிய நாயக்கர் | சுயேச்சை | 14037 | 33.85 |
1962 | வி. முனுசாமி | திமுக | 20762 | 34.94 |
1967 | எ. எம். பொன்னுரங்க முதலியார் | காங்கிரஸ் | 28201 | 41.37 |
1971 | கே. எம். நடராசன் | திமுக | 29621 | 44.61 |
1977 | கே. மூர்த்தி | திமுக | 20348 | 29.93 |
1980 | கே. மூர்த்தி | திமுக | 35626 | 49.18 |
1984 | கே. மூர்த்தி | திமுக | 43918 | 47.05 |
1989 | சி. மாணிக்கம் | திமுக | 28161 | 33.06 |
1991 | சி. மாணிக்கம் | திமுக | 24453 | 22.51 |
1996 | எசு. சண்முகம் | பாமக | 31431 | 26.13 |
2001 | எ. எம். பொன்னுரங்கம் | புதிய நீதி கட்சி | 52781 | 42.28 |
2006 | சி. கோபால் | அதிமுக | 55586 | --- |
2011 | அருள் அன்பரசு | காங்கிரஸ் | 36957 | --- |
2006 சட்டமன்ற தேர்தல் | 39. சோளிங்கர் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | அருள் அன்பரசு | என்.ஐ.சி | 63502 |
2 | C. கோபால் | அ.தி.மு.க | 55586 |
3 | C.D. பிரபாகரன் | தே.மு.தி.க | 12900 |
4 | V. வேலு | சுயேச்சை | 2026 |
5 | R. கோபி | எஸ்.பி | 1319 |
6 | D. முருகேசன் | பிஜேபி | 1308 |
7 | S. சுரெஷ் | சுயேட்சை | 773 |
8 | P. தேவன் | எல்.ஜே.பி | 405 |
9 | S. கிருஷ்ணன் | சுயேச்சை | 293 |
மொத்தம் | 138112 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 39. சோளிங்கர் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | பி. ஆர். மனோகர் | தே.மு.தி.க | 69963 |
2 | முனிரத்தினம் | சுயேச்சை | 60925 |
3 | அருள் அன்பரசு | காங்கிரஸ் | 36957 |
4 | M. பவானி | பு.பா | 3858 |
5 | T.V. பரமசிவம் | சுயேச்சை | 2288 |
6 | V. வேலு | சுயேச்சை | 2268 |
7 | A.M. இன்பநாதன் | எஐஜேஎம்கே | 1181 |
8 | N. தினகரன் | பி.ஸ்.பி | 1076 |
9 | வடிவேலு | சுயேச்சை | 983 |
மொத்தம் | 179499 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT