Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 05 Apr 2016 04:09 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது பெரிய நகரம் கோவில்பட்டி. தொழிலாளர்களை அதிகம் கொண்ட தொகுதியாகும். கரிசல் பூமியான கோவில்பட்டியில் பிரதான தொழில் விவசாயம். அடுத்ததாக தீப்பெட்டித் தொழில் உள்ளது. தமிழகத்தில் தீப்பெட்டித் தொழிலில் முதலிடம் வகிப்பது கோவில்பட்டி. மேலும், பட்டாசு தொழில், மில் தொழில் போன்றவை இங்கு அதிகம் உள்ளன.
சிவகாசி மக்களவை தொகுதியில் இடம்பெற்றிருந்த கோவில்பட்டி தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு தூத்துக்குடி மக்களவை தொகுதிக்குள் வரும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. கோவில்பட்டி நகராட்சி, கடம்பூர், கயத்தாறு, கழுகுமலை பேரூராட்சிகளை உள்ளடக்கியது கோவில்பட்டி தொகுதி.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
இந்த தொகுதியில் பிரதான பிரச்சினையாக குடிநீர் பிரச்சினை உள்ளது. கோவில்பட்டி 2-வது பைப்லைன் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். கோவில்பட்டியில் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டும். நலிவடையும் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க வேண்டும் என்பன போன்றவை இத்தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகளாகும்.
இந்த தொகுதி கடந்த 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இதுவரை 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் 7 முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வென்றுள்ளது. அடுத்ததாக அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், சுயேச்சைகள் 2 முறையும் வென்றுள்ளன. கடந்த 2011 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கடம்பூர் செ. ராஜூ 26,480 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவருக்கு 73,007 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் ஜி. ராமச்சந்திரன் 46,527 வாக்குகளை பெற்றார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
கோவில்பட்டி தாலுகா.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,22,401 |
பெண் | 1,24,896 |
மூன்றாம் பாலினத்தவர் | 2 |
மொத்த வாக்காளர்கள் | 2,47,299 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
2011 | கடம்பூர் சே.ராஜூ | அதிமுக | |
2006 | L.ராதாகிருஷ்ணன் | அதிமுக | 46.61 |
2001 | S.ராஜேந்திரன் | இந்திய கம்யூனிச கட்சி | 40.27 |
1996 | L.அய்யலுசாமி | இந்திய கம்யூனிச கட்சி | 35.19 |
1991 | R.சியாமளா | அதிமுக | 61.81 |
1989 | சோ. அழகர்சாமி | இந்திய கம்யூனிச கட்சி | 35.34 |
1984 | ஆர். ரங்கசாமி | இ.தே.கா | 55.75 |
1980 | சோ. அழகர்சாமி | இந்திய கம்யூனிச கட்சி | 51.37 |
1977 | சோ. அழகர்சாமி | இந்திய கம்யூனிச கட்சி | 32.75 |
1971 | சோ. அழகர்சாமி | இந்திய கம்யூனிச கட்சி | |
1967 | சோ. அழகர்சாமி | இந்திய கம்யூனிச கட்சி | |
1962 | வேனுகோபால கிருஸ்ணசாமி | சுயேச்சை | |
1957 | சுப்பையாநாயக்கர் | சுயேச்சை | |
1952 | ராமசாமி | இந்திய தேசிய காங்கிரஸ் |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | L. ராதாகிருஷ்ணன் | அ.தி.மு.க | 53354 |
2 | S. ராஜேந்திரன் | சி.பி.ஐ | 41015 |
3 | T. சீனிவாசராகவன் | தே.மு.தி.க | 11633 |
4 | K. கோவில்செல்வன் | பி.எஸ்.பி | 2827 |
5 | S. செல்லதுரை | எ.ஐ.எப்.பி | 2560 |
6 | V. விஸ்வநாதன் | சுயேச்சை | 1201 |
7 | G.சோமச்சுந்தரம் | பி.ஜே.பி | 733 |
8 | R. முத்துமாரியப்பன் | சுயேச்சை | 409 |
9 | S.D. கல்யாணசுந்தரம் | சுயேச்சை | 360 |
10 | K.V.K. லோகநாதன் | சுயேச்சை | 240 |
11 | I. முத்துராஜ் | சுயேச்சை | 146 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | C. கடம்பூர் ராஜு | அ.தி.மு.க | 73007 |
2 | G. ராமச்சந்திரன் | பாமக | 46527 |
3 | P. மாரியப்பன் | சுயேச்சை | 2685 |
4 | V. ரெங்கராஜ் | பி.ஜே.பி | 2186 |
5 | E. விசுவாசம் | சுயேச்சை | 1232 |
6 | S. அருமைராஜ் | பி.எஸ்.பி | 1107 |
7 | V. கென்னடி | சுயேச்சை | 1068 |
8 | P. ராமசாமி | சுயேச்சை | 679 |
9 | R. மகேஸ்வரன் | சுயேச்சை | 566 |
10 | P. கார்த்திக் ராஜன் | சுயேச்சை | 452 |
11 | K. அண்ணாதுரை | சுயேச்சை | 397 |
12 | M. பாஸ்கர் | சுயேச்சை | 370 |
13 | G. கண்ணம்மாள் | சுயேச்சை | 260 |
14 | M. கணபதி | சுயேச்சை | 187 |
130723 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT