Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 05 Apr 2016 04:09 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் திருச்செந்தூர் தொகுதி முக்கியமானது. முருகனின் இரண்டாம் படை வீடாக இத்தொகுதி விளங்குகிறது. திருச்செந்தூர் முக்கிய ஆன்மீக தலமாகவும், சுற்று மையமாகவும் விளங்குகிறது. கடந்த 1952-ம் ஆண்டு இத்தொகுதி உருவாக்கப்பட்டது. தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் சட்டப்பேரவை தொகுதி நீக்கப்பட்டதால் அதில் உள்ள சில பகுதிகள் திருச்செந்தூர் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
காயல்பட்டினம் நகராட்சி, திருச்செந்தூர், ஆத்தூர், ஆறுமுகநேரி, கானம், தென்திருப்பேரை, நாசரேத், உடன்குடி ஆகிய பேரூராட்சிகள் மற்றும் பல்வேறு உள்ளாட்சிகளை உள்ளடக்கியது திருச்செந்தூர் தொகுதி. விவசாயமே பிரதான தொழில். அடுத்ததாக மீன்பிடித் தொழில் உள்ளது. விவசாயிகளுக்கு அடுத்தப்படியாக மீனவர்களும் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர்.
திருச்செந்தூர் முக்கிய ஆன்மீக தலமாகவும், சுற்றுலா மையமாகவும் இருப்பதால் தினம் தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஆனால், அதற்கான எந்தவித அடிப்படை வசதிகளும் திருச்செந்தூரில் இல்லை என்பது மக்களின் நீண்ட கால குற்றச்சாட்டு.
குலசேகரப்பட்டினம், மணப்பாடு, காயல்பட்டினம் போன்ற கடற்கரை பகுதிகளை சுற்றுலா மையங்களாக மேம்படுத்த வேண்டும். இந்த தொகுதியில் உள்ள பனைத்தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது திருச்செந்தூர் தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை.
திருச்செந்தூர் தொகுதி 14 பொதுத்தேர்தல்களையும், 1 இடைத்தேர்தலையும் சந்தித்துள்ளது. 14 பொதுத்தேர்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக 5 முறையும், 3 முறை காங்கிரஸ் கட்சியும் வென்றுள்ளன. 2009-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். கடந்த 2011-ல் நடந்த பொதுத்தேர்தலில் திமுகவின் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் 640 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு 68,741 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பி.ஆர். மனோகரன் 68,101 வாக்குகளை பெற்றார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருச்செந்தூர் தாலுகா (பகுதி)
மாவீடுபண்ணை, தென் திருப்பேரி (குருக்காட்டூர்), தென் திருப்பேரி (இராஜபதி), சேதுக்குவாய்த்தான், மேல ஆத்தூர், சேர்ந்தமங்கலம், புன்னக்காயல், சுகந்தலை, அங்கமங்கலம், புறையூர், மூக்குப்பொறி, கச்சனாவிளை, நாலுமாவடி, நல்லூர், மூலக்கரை, அம்மன்புரம், வீரமாணிக்கம், வீரபாண்டியன்பட்டணம், பள்ளிப்பத்து, காயாமொழி, மேல திருச்செந்தூர், பரமன்குறிச்சி, குதிரைமொழி, செம்மறிக்குளம், நங்கைமொழி, மெய்ஞானபுரம், மானாடுதண்டுபத்து, லெட்சுமிபுரம்,வாகைவிள்ளை, செட்டியாபத்து, வெங்கடராமானுஜபுரம், ஆதியாக்குறிச்சி, உடன்குடி, குலசேகரப்பட்டனம், மாதவன்குறிச்சி மற்றும் மணப்பாடு கிராமங்கள்.
தென் திருப்பேரி (பேரூராட்சி), ஆத்தூர் (பேரூராட்சி), காயல்பட்டணம் (பேரூராட்சி), ஆறுமுகநேரி (பேரூராட்சி), கானம் (பேரூராட்சி), நாசரேத் (பேரூராட்சி), திருச்செந்தூர் (பேரூராட்சி) மற்றும் உடன்குடி (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,10,898 |
பெண் | 1,16,097 |
மூன்றாம் பாலினத்தவர் | 12 |
மொத்த வாக்காளர்கள் | 2,27,007 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு |
2010 இடைத்தேர்தல் | அனிதா R. ராதாகிருஷ்ணன் | திமுக | 70.52 |
2006 | அனிதா R. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 52.52 |
2001 | அனிதா R. ராதாகிருஷ்ணன் | அதிமுக | 53.01 |
1996 | S.ஜெனிஃபர் சந்திரன் | திமுக | 59.22 |
1991 | A.செல்லதுரை | அதிமுக | 58.63 |
1989 | K.P.கந்தசாமி | திமுக | 42.48 |
1984 | சுப்பிரமணிய ஆதித்தன் (எ) சுப்பிரமணியன் | அதிமுக | 50.7 |
1980 | S.கேசவ ஆதித்தன் | அதிமுக | 49.49 |
1977 | R.அமிர்தராஜ் | அதிமுக | 29.13 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | அனிதா.R.ராதாகிருஷ்ணன் | அ.தி.மு.க | 58600 |
2 | A.D.K. ஜெயசீலன் | தி.மு.க | 44684 |
3 | A. கணேசன் | தே.மு.தி.க | 3756 |
4 | N. விவேகானந்தசேகர் | சுயேச்சை | 1635 |
5 | C. கண்ணன் | பி.ஜே.பி | 1398 |
6 | S. பரிசமுத்து | எ.ஐ.எப்.பி | 430 |
7 | T. முருகேசன் | சுயேச்சை | 365 |
8 | V. குமார் | பி.எஸ்.பி | 218 |
9 | G. நடராஜன் | சுயேச்சை | 121 |
10 | A. பாலசுப்பிரமணியன் | சுயேச்சை | 120 |
11 | V. சிதம்பரம் | சுயேச்சை | 91 |
12 | N.M. அகமத் அப்துல் காதர் | சுயேச்சை | 67 |
13 | M. காலீல்ரகுமான் | சுயேச்சை | 48 |
14 | K. அய்யாகுட்டி | சுயேச்சை | 47 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | அனிதா.R.ராதாகிருஷ்ணன் | தி.மு.க | 68741 |
2 | P.R. மனோகரன் | அ.தி.மு.க | 68101 |
3 | N. நாட்டார் | ஜே.எம்.எம் | 3240 |
4 | N. ராமேஸ்வரன் | பி.ஜே.பி | 2429 |
5 | B. முருகேசன் | சுயேச்சை | 693 |
6 | P. ராஜ்குமார் | சுயேச்சை | 672 |
7 | B. தேவ ஞானசிகாமணி | பி.ஸ்.பி | 626 |
8 | K. சுடலைகண்ணு | ஐ.ஜே.கே | 534 |
9 | P. மணி | சுயேச்சை | 271 |
10 | M. திருப்பதி | சுயேச்சை | 156 |
11 | C. செல்லசாமி | சுயேச்சை | 146 |
12 | S. முத்துமாலை | சுயேச்சை | 136 |
13 | A. நந்தகுமார் | சுயேச்சை | 125 |
14 | C. அறிகோபாலகிருஷ்ணன் | சுயேச்சை | 104 |
15 | V. சிதம்பரம் | சுயேச்சை | 97 |
16 | A. சித்திரலிங்கம் | சுயேச்சை | 70 |
146141 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT