Published : 05 Apr 2016 04:03 PM
Last Updated : 05 Apr 2016 04:03 PM

146 - துறையூர் (தனி)

2006 பொதுத் தேர்தல் வரை உப்பிலியபுரம் (பழங்குடியினர்) தொகுதியாக இருந்து, மறுசீரமைப்பில் துறையூர் (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது.

துறையூர் தொகுதியின் முதல் எம்எல்ஏ அதிமுகவைச் சேர்ந்த டி.இந்திராகாந்தி.

மலைக்கிராமங்கள் நிறைந்த இந்தத் தொகுதியில் விவசாயிகள் அதிகம். குறிப்பிடும்படியான தொழிற்சாலை எதுவும் இல்லை.

உப்பிலியபுரம் தொகுதியில் ஏற்கனவே இருந்த பகுதிகளுடன் முசிறி வட்டத்துக்குட்பட்ட சில கிராமங்கள் இணைக்கப்பட்டு, 57 ஊராட்சிகளுக்குட்பட்ட 427 கிராமங்கள் இந்தத் தொகுதியில் வருகின்றன.

திருச்சி மாவட்ட மக்களின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான புளியஞ்சோலை, பச்சைமலை ஆகியன இந்தத் தொகுதிக்குள் வருகின்றன. குறிப்பாக, திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மாவட்ட பகுதிகள் அடங்கிய பச்சைமலையில் மரவள்ளி கிழங்கு, தேன் எடுத்தல் ஆகிய பிரதான தொழில்கள்.

தற்போது வனத் துறை சார்பில் பச்சைமலையில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பழங்குடியினர் மத்தியில் எதிர்ப்பும் உள்ளது. பல்லாண்டுகளாக வசித்து வரும் வனப் பகுதிகளுக்கு அவர்கள் பட்டா கோரி வருகின்றனர்.

துறையூரின் அடையாளங்களுள் ஒன்றான சின்ன ஏரி, தற்போது கழிவுநீர் குளமாக மாறியுள்ளது.

இந்தத் தொகுதியில் 1962 முதல் இதுவரை காங்கிரஸ் 2 முறையும், அதிமுக (ஜெ) அணி ஒரு முறையும், திமுக 4 முறையும், அதிமுக 5 முறையும் வெற்றி பெற்றுள்ளன.

கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் அதிமுக சார்பில் டி.இந்திராகாந்தி (75,228 வாக்குகள்) போட்டியிட்டு வெற்றி பெற்றார். திமுகவின் எஸ்.பரிமளாதேவி (64,293 வாக்குகள்) 2-ம் இடம் பிடித்தார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

ஏ. மைவிழி

அதிமுக

2

எஸ். ஸ்டாலின் குமார்

திமுக

3

எல்.ஆர். சுஜாதேவி

விசிக

4

வி. ஆனந்தன்

ஐஜேகே

5

எஸ். சத்யா

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

துறையூர் தாலுக்கா

முசிறி தாலுக்கா (பகுதி)

கோட்டாத்தூர், புத்தனாம்பட்டி மற்றும் அபினிமங்கலம் கிராமங்கள்

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,02,371

பெண்

1,08,059

மூன்றாம் பாலினத்தவர்

1

மொத்த வாக்காளர்கள்

2,10,431



2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

இந்திரகாந்தி.T

அதிமுக

75228

2

பரிமளாதேவி.S

திமுக

64293

3

ரெங்கராஜி.S

பாஜக

1828

4

கணேசன்.V

சுயேச்சை

1753

5

தர்மலிங்கம்.A

சுயேச்சை

1295

6

அறிவழகன்.M

பகுஜன் சமாஜ் கட்சி

1289

7

சுமதி.S

சுயேச்சை

945

8

செந்தில்குமார்.J.K

சுயேச்சை

118

9

சம்பத்குமார்.P

தமுமுக

630

10

சிங்காரம்.K

சுயேச்சை

380

148452

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x