Published : 05 Apr 2016 04:03 PM
Last Updated : 05 Apr 2016 04:03 PM
திருச்சியிலிருந்து நாமக்கல் செல்லும் வழியில் காவிரிக்கரையோரம் அமைந்திருக்கிறது முசிறி. முழுக்க, முழக்க கிராமப்புறங்களைக் கொண்டுள்ள இத்தொகுதியில் தொட்டியம், முசிறி, தாத்தையங்கார்பேட்டை, மோருபட்டி ஆகிய பேரூராட்சிகளும், பிள்ளபாளையம், கரிகாலி, கார்குடி, வலையெடுப்பு, சேர்குடி, பூலாஞ்சேரி, தும்பலம், சூரம்பட்டி, மாவிலிப்பட்டி, செவந்திலிங்கபுரம், வெள்ளுர், உமையாள்புரம் உள்ளிட்ட கிராமங்களும், அதனை சார்ந்த ஏராளமான கிராமங்களும் அடங்கியுள்ளன. இவற்றில் 1,04,245 ஆண்கள், 1,07,267 பெண்கள் என 2,11,512 வாக்காளர்கள் உள்ளனர். விவசாயமே பிரதான தொழிலாக விளங்கும் இத்தொகுதியில் முசிறி, தொட்டியம் பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு காவிரி நீர், கடைமடை வரை போய் சேருவதில்லை. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. தாத்தையங்கார்பேட்டை பகுதி விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தையே நம்பி உள்ளதால், மழை இல்லாத காலங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. இவர்களின் வாழ்க்கையை வளம்பெறச் செய்வதற்காக புளியஞ்சோலையிலிருந்து மகாதேவி ஏரி வரையிலான உபரி நீர் கால்வாய் திட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
அத்துடன், முசிறி பகுதியில் விளையும் கோரைப்பயிரை கொண்டு தரமான பாய்கள் தயாரிக்கும் வகையில், பாய் தொழிற்சாலைகளை அரசே தொடங்க வேண்டும். தனிநபர்களுக்கு அதிகளவில் மானியக் கடன் அளித்து வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இருந்து வருகிறது. அகண்ட காவிரி ஓடும் இப்பகுதியில், ஆற்றுமணல் கொள்ளை நடைபெறுவதைத் தடுக்க இப்பகுதி மக்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் மணல் லாரிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இவற்றுடன், காவிரி கரையோரமுள்ள தங்களுக்கு தினமும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் வழங்க வேண்டும், முசிறியில் மகளிர் தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும், தொட்டியத்தில் வாழைப்பழ ஜாம் தொழிற்சாலை அமைக்க வேண்டும், திருச்சி - நாமக்கல் சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும், தாத்தையங்கார்பேட்டை பகுதியில் கைத்தறி தொழில் மேம்பாட்டு தொழற்சாலை அமைத்திட வேண்டும் என்ற கோரிக்கைகளும் நீண்டகாலமாக கிடப்பிலேயே இருப்பதாக இத்தொகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இத்தொகுதியில் 1951-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தங்கவேலு என்பவர் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அதன்பின் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 2 முறை, திமுக 4 முறை, அதிமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இங்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுகவைச் சேர்ந்த செல்வராஜ் வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற என்.ஆர்.சிவபதி, ஜெயலலிதா அமைச்சரவையில் 2 முறை அமைச்சராக சேர்க்கப்பட்டு, பின்னர் சிறிது காலங்களிலேயே நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | எம். செல்வராசு | அதிமுக |
2 | எஸ். விஜயா பாபு | காங்கிரஸ் |
3 | எம். ராஜசேகரன் | தமாகா |
4 | எஸ். ராகவன் | பாமக |
5 | கே. ராயதுரை | ஐஜேகே |
6 | இ. ஆசைத்தம்பி | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
தொட்டியம் வட்டம்
முசிறி வட்டம் (பகுதி)
பிள்ளபாளையம், கரிகாலி, வடமலைப்பட்டி, கார்குடி, ஊரக்கரை, மகாதேவி, ஐம்புமடை, வாலசிராமணி, அஞ்சலம், கோணப்பம்பட்டி, தேவனூர், ஆராய்ச்சி, வலையெடுப்பு, பையித்தம்பாறை, சேர்குடி, பூலாஞ்சேரி, சூரம்பட்டி, மாவிலிப்பட்டி, தும்பலம், சிட்டிலவை, முத்தம்பட்டி, எம்.புதுப்பட்டி (மேற்கு), எம்.புதுப்பட்டி (கிழக்கு), காமாட்சிப்பட்டி, டி.புத்தூர், மூவேலி, செவந்திலிங்கபுரம், உமையாள்புரம் மற்றும் வெள்ளூர் கிராமங்கள்,
மோருபட்டி (பேரூராட்சி), தாத்தையாங்கார்பேட்டை (பேரூராட்சி) மற்றும் முசிறி (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,04,402 |
பெண் | 1,08,242 |
மூன்றாம் பாலினத்தவர் | 11 |
மொத்த வாக்காளர்கள் | 2,12,655 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | தங்கவேலு | சுயேச்சை | 18427 | 42.23 |
1957 | வி. எ. முத்தையா | காங்கிரஸ் | 34427 | 21.73 |
1962 | எஸ். இராமலிங்கம் | காங்கிரஸ் | 32155 | 50.79 |
1967 | முத்து செல்வன் | திமுக | 32615 | 51.48 |
1971 | பி. எஸ். முத்து செல்வன் | திமுக | 35091 | 54.29 |
1977 | பி. கோதண்டராமன் என்கிற முசிறி புத்தன் | அதிமுக | 34569 | 39.27 |
1980 | எம். கே. ராசமாணிக்கம் | அதிமுக | 53697 | 52.2 |
1984 | எஸ். இரத்தினவேலு | அதிமுக | 65759 | 59.75 |
1989 | எம். தங்கவேல் | அதிமுக (ஜெ) | 49275 | 39.05 |
1991 | எம். தங்கவேல் | அதிமுக | 70812 | 62.83 |
1996 | எம். என். ஜோதி கண்ணன் | திமுக | 67319 | 51.04 |
2001 | சி. மல்லிகா | அதிமுக | 47946 | 34.83 |
2006 | என். செல்வராசு | திமுக | 74311 | --- |
2011 | என். ஆர். சிவபதி | அதிமுக | 82631 | 55 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | எம். பி. கிருசுணசாமி | காங்கிரஸ் | 16316 | 37.4 |
1957 | டி. வி. சன்னாசி | காங்கிரஸ் | 32844 | 20.73 |
1962 | எ. துரைராசு | திமுக | 27661 | 43.69 |
1967 | கே. வி. கே. ரெட்டியார் | காங்கிரஸ் | 27750 | 43.8 |
1971 | எ. ஆர். முருகையா | ஸ்தாபன காங்கிரஸ் | 24232 | 37.49 |
1977 | வி. எஸ். பெரியசாமி | திமுக | 20567 | 23.36 |
1980 | ஆர். நடராசன் | திமுக | 49171 | 47.8 |
1984 | ஆர். நடராசன் | திமுக | 42086 | 38.24 |
1989 | என். செல்வராஜ் | திமுக | 47826 | 37.9 |
1991 | ஆர். நடராசன் | திமுக | 39568 | 35.11 |
1996 | மல்லிகா சின்னசாமி | அதிமுக | 39551 | 29.99 |
2001 | எஸ். விவேகானந்தன் | திமுக | 45952 | 33.38 |
2006 | டி. பி. பூனாட்சி | அதிமுக | 63384 | --- |
2011 | ராஜசேகரன்.என் | காங்கிரஸ் | 38840 | 26 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | செல்வராஜ்.N | திமுக | 74311 |
2 | பூனாட்சி.T.P | அதிமுக | 63384 |
3 | ராஜலிங்கம்.M | தேமுதிக | 10538 |
4 | விஸ்வநாதன்.S | சுயேச்சை | 2037 |
5 | நாகலிங்கம்.C | பாஜக | 1723 |
6 | கணேசன்.S | சுயேச்சை | 643 |
7 | செந்தில் குமார்.N | சுயேச்சை | 557 |
8 | இளங்கோ வள்ளல்.P | சுயேச்சை | 533 |
153726 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | சிவபதி.N.R | அதிமுக | 82631 |
2 | ராஜசேகரன்.M | காங்கிரஸ் | 38840 |
3 | கண்ணையன்.K | சுயேச்சை | 19193 |
4 | ராஜேந்திரன்.SP | பாஜக | 2743 |
5 | பன்னிர்செல்வம்.K | இந்திய ஜனநாயக கட்சி | 1761 |
6 | பாலகிருஷ்ணன்.M | சுயேச்சை | 1655 |
7 | தமிழ்செல்வன்.P | சுயேச்சை | 1350 |
8 | நீதி முத்து மனல்.N.M | சுயேச்சை | 1086 |
9 | செந்தில்வேல்.P | சுயேச்சை | 788 |
10 | குருமூர்த்தி.P | சுயேச்சை | 405 |
11 | அப்பாவு.D | சுயேச்சை | 356 |
150808 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT