Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM
திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சாத்தனூர் அணை அமைந்துள்ளது. மேலும், செய்யாற்றில் தண்ணீர் வழிந்தோடுவதற்காக கட்டப்பட்ட குப்பனத்தம் அணையும் உள்ளது. மேலும் ரிஷபேஸ்வரர் கோயில், வேணுகோபால பார்த்தசாரதி கோயில், தாழைமடுவு காளியம்மன் கோயில் அமைந்துள்ளது.
விவசாயிகள், கூலி தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளனர். கறவை மாடு மூலம் பால் உற்பத்தி விவசாயிகளும் வசிக்கின்றனர். வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர்கள் எண்ணிக்கை அதிகம். செங்கம் நகரில் வியாபாரிகள் உள்ளனர். நெல், கரும்பு, சிறுதானியங்கள், மலர்கள் மற்றும் தோட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
மேல்செங்கத்தில் முடங்கி கிடக்கும் 11 ஆயிரம் பரப்பளவு உள்ள மத்திய மாநில அரசுகளின் விதை பண்ணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். சாத்தனூர் அணை மற்றும் குப்பனத்தம் அணையை தூர் வார வேண்டும். மேலும், குப்பனத்தம் அணையை சுற்றுலா தலமாக அறிவிக்க வேண்டும். செங்கம் பேருந்து நிலையத்தின் தரத்தை மேம்படுத்த வேண்டும். அரசு கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். மேலும், 50 ஆண்டுகளுக்கு மேலாக தனி தொகுதியாக உள்ள செங்கம் தொகுதியை பொது தொகுதியாக மாற்ற வேண்டும்.
செங்கம் சட்டபேரவை தொகுதியில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்ற 12 தேர்தலில் திமுக மற்றும் அதிமுக தலா 4 முறையும், காங்கிரஸ் 2 முறையும், தேமுதிக மற்றும் ஜனதா கட்சி தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2011-ல் நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவை சேர்ந்த சுரேஷ்குமார் வெற்றி பெற்றார். அதிமுக ஆதரவு எம்எல்ஏவாக 3 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தவர், அதிமுகவில் கடந்த மாதம் இணைந்தார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | எம்.தினகரன் | அதிமுக |
2 | மு.பெ.கிரி | தி.மு.க |
3 | அ.கலையரசி | தேமுதிக |
4 | சி.முருகன் | பாமக |
5 | வ.கருப்பன் | பாஜக |
6 | சீ.வெண்ணிலா | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
செங்கம் வட்டம் (பகுதி)
குப்பநத்தம், பரமனந்தல், தீத்தாண்டப்பட்டு, வளயெம்பட்டு, புதுப்பட்டு, ஆலப்புத்தூர், குயிலம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், பக்கிரிப்பாளையம், அரசன்கன்னி, மேல்செங்கம், மேல்செங்கம் (ஆர்.எப்), அந்தனூர், மேல்புழதியூர், பெரும்பட்டம், மண்மலை, கரியமங்கலம், பிஞ்சூர், வேடங்குப்பம், மேல்பள்ளிப்பட்டு, மேல்வணக்கம்பாடி, ஆனந்தவாடி (ஆர்.எப்), ஆனந்தவாடி, கட்டமடுவு, நரடாப்பட்டு, மேல்ராவந்தவாடி, கரியமலைப்பாடி, ஆணடிப்பட்டி, தம்புநாய்க்கன்பட்டி, மண்ணாண்டிப்பட்டி, பொரசப்பட்டு, தாழையூத்து, அரட்டவாடி, அரியாகுஞ்சூர், சொரப்பனந்தல், மேல்பொஎன்னாத்தூர், உச்சிமலைக்குப்பம், விண்ணவனுர், பாய்ச்சல், நல்லூர், கண்ணக்குருக்கை, சின்னகோளப்பாடி, பாலியப்பட்டு, அஸ்வனகாசுருணை, பெரியகோளப்பாடி, பீமானந்தல், மேல்கரிப்பூர், கோழுந்தம்பட்டு, சாத்தனூர், சாத்தனூர் அணை, நீப்பத்துறை, வெள்ளாலம்பட்டி, இளங்குன்னி, குருமப்பட்டி, கல்லடாவி, மணிக்கல், புளியம்பட்டி, கருங்காலிப்பாடிபட்டி, வேப்பூர்செக்கடி, வீரணம், தரடாப்பட்டு, கணக்கந்தல், நெடுங்கவாடி, செ.அகரம், பெரும்பாக்கம், சேரந்தாங்கல், கீழ்வணக்கம்பாடி, தண்டராம்பட்டு, கீழ்ராவந்தவாடி, ஓலகலப்பாடி, கொலமஞ்சனூர், மலமஞ்சனூர் டி.வேளுர், செ.ஆண்டாப்பட்டு, தானிப்பாடி, சின்னியம்பேட்டை, ரெட்டியாபாளையம், மலையனூர்செக்கடி, கீழ்பாச்சார், மேல்பாச்சார், மோத்தல்க்கல், மேல்முத்தனூர், ஆத்திப்பாடி, புதுர்செக்கடி, ஜம்போடை, போந்தை, நாராயணக்குப்பம், அப்புநாய்க்கன்பாளையம், திருவிடத்தனூர், எடத்தனூர், தென்முடியனூர், அகரம்பள்ளிப்பட்டு, அல்லப்பனூர், ராயண்டபுரம், புத்தூர்செக்கடி, பீமரப்பட்டி, மேல்மலச்சி, அக்கரப்பட்டி, செம்மம்பட்டி, பெருங்கொளத்தூர், தொண்டமானூர், சதக்குப்பம், உண்ணாமலைப்பாளையம், வாழவச்சனூர், கோட்டையூர், பெலாமரத்தூர், வண்ணாங்குட்டை, பண்டீரேவ், படபஞ்சமரத்தூர், மேல்சிலம்படி, கீழ்தட்டீயாப்பட்டு, மேல்தட்டீயாப்பட்டு, புலியூர், ஊர்கவுண்டனூர், கிளையூர், எருகம்பட்டு நெல்லிவாய், அத்திப்பட்டு, பெருமுட்டம், கல்லாத்தூர், மேல்பட்டு, சின்னகீழ்பட்டு மற்றும் கீழ்பட்டு கிராமங்கள், செங்கம் (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,25,011 |
பெண் | 1,24,801 |
மூன்றாம் பாலினத்தவர் | 2 |
மொத்த வாக்காளர்கள் | 2,49,814 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1951 | இராமசாமி கவுண்டர் | பொது நலக்கட்சி | 13413 |
1957 | டி. காரிய கவுண்டர் | காங்கிரஸ் | 20079 |
1962 | சி. கே. சின்னராஜி கவுண்டர் | திமுக | 34374 |
1967 | பி. எஸ். சந்தானம் | திமுக | 29828 |
1971 | சி. பாண்டுரங்கம் | திமுக | 32260 |
1977 | டி. சாமிகண்ணு | அதிமுக | 22789 |
1980 | டி. சாமிகண்ணு | அதிமுக | 26823 |
1984 | டி. சாமிகண்ணு | அதிமுக | 45770 |
1989 | எம். சேது | ஜனதா கட்சி | 26256 |
1991 | பி. வீரபாண்டியன் | அதிமுக | 54611 |
1996 | கே. வி. நன்னன் | திமுக | 58958 |
2001 | போளூர் வரதன் | காங்கிரஸ் | 54145 |
2006 | போளூர் வரதன் | காங்கிரஸ் | 53366 |
2011 | டி.சுரேஷ் குமார் | தேமுதிக | 83722 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1951 | முத்துகிருசுண செட்டியார் | காங்கிரஸ் | 8804 |
1957 | ஆர். வெங்கடாசல முதலியார் | சுயேச்சை | 12806 |
1962 | ஒய். சண்முகம் | காங்கிரஸ் | 25008 |
1967 | எ. ஆறுமுகம் | காங்கிரசு | 18773 |
1971 | எ. ஆறுமுகம் | ஸ்தாபன காங்கிரஸ் | 16705 |
1977 | என். பூ சங்கர் | திமுக | 11877 |
1980 | எ. ஆறுமுகம் | காங்கிரஸ் | 25987 |
1984 | பி. அன்பழகன் | ஜனதா கட்சி | 21039 |
1989 | பி. வீரபாண்டியன் | அதிமுக (ஜெ) | 22344 |
1991 | கே. முனுசாமி | ஜனதா தளம் | 16994 |
1996 | சி. கே. தமிழரசன் | அதிமுக | 32325 |
2001 | ஆர். சாமளா | மக்கள் தமிழ் தேசம் | 41868 |
2006 | பி. சக்திவேல் | விடுதலை சிறுத்தைகள் கட்சி | 43166 |
2011 | செல்வ பெருந்தகை | காங்கிரஸ் | 72225 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | M. போளூர் வரதன் | காங்கிரஸ் | 53366 |
2 | P. சக்திவேல் | வி.சி.கே | 43166 |
3 | T. சுரேஷ் | தே.மு.தி.க | 15808 |
4 | V. திருப்பதி | பி.ஜே.பி | 4009 |
5 | R. ஜாகநாதன் | பி.எஸ்.பி | 2631 |
6 | V. ராமசாமி | சுயேச்சை | 2576 |
7 | R. ஷாமலா | எஸ்.பி | 1792 |
8 | B. சரோஜா | சுயேச்சை | 1494 |
124842 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | T. சுரேஷ் குமார் | தே.மு.தி.க | 83722 |
2 | K. செல்வபெருந்தகை | காங்கிரஸ் | 72225 |
3 | R. சுரேஷ் குமார் | சுயேச்சை | 8543 |
4 | A. ஜெயராமன் | பி.ஜே.பி | 4465 |
5 | R. குமார் | சுயேச்சை | 2511 |
6 | M. மணி | ஐ.ஜே.கே | 1670 |
7 | V. சுப்பிரமணியன் | பி.எஸ்.பி | 1636 |
8 | K. சங்கர் | சுயேச்சை | 1364 |
9 | T. சுரேஷ் | சுயேச்சை | 1347 |
10 | P.G. அன்பழகன் | சுயேச்சை | 842 |
178325 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT