Published : 05 Apr 2016 03:57 PM
Last Updated : 05 Apr 2016 03:57 PM
செய்யாறு அருகே உள்ள பிரம்மதேசம் கிராமத்துக்கு ஆயிரம் ஆண்டு கால வரலாறு உள்ளது. மாமன்னன் ராஜேந்திர சோழனின் நினைவு கல்லறை உள்ளது. மேலும், செய்யாறில் வேதபுரீஸ்வரர் கோயில், மாமண்டூரில் குடைவரை கோயில் போன்றவை பிரசித்தி பெற்றவை. தொழில் வளர்ச்சிக்கு சிப்காட், கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் நிறைந்த பகுதியாகும். வன்னியர்கள், ஆதிதிராவிடர்கள் அதிகம் வசிக்கின்றனர். முதலியார்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்களும் உள்ளிட்ட பிற சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர்.
செய்யாறு அருகே ஜடேரி கிராமத்தில் நாமக்கட்டி தயாரிக்கப்படுகிறது. அந்த நாமக்கட்டித்தான், நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாமக்கட்டி தயாரிக்கும் தொழிலாளர்கள், கூட்டுறவு சங்கம் அமைத்து குறைந்த வட்டியில் கடனுதவி வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்துகின்றனர். திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி, செய்யாறு வழியாக ஆந்திர மாநிலம் நகரி இடையே ரயில் பாதை அமைக்கும் பணியை தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். செய்யாறு நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை கொண்டு வர வேண்டும். செய்யாற்றில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து நிறுத்தி, நகருக்கு ஒதுக்குபுறமான இடத்தை தேர்வு செய்து குப்பை கொட்ட வேண்டும்.
செய்யாறு அருகே உள்ள தூசி கிராமத்தில் இருந்து மாவட்ட தலைநகரான திருவண்ணாமலைக்கு வர வேண்டும் என்றால் 140 கி.மீ., தூரம் பயணம் செய்ய வேண்டும். அதனால், செய்யாறை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும். அரசு மகளிர் கலைக் கல்லூரி தொடங்க வேண்டும். நெல், கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. அதனால், தென்தண்டலம் கிராமத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நவீன இயந்திரங்களை பயன்படுத்தி வேண்டும். மேலும், எத்தனால் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். செய்யாறில் இருந்து சிப்காட் செல்ல அரசு பேருந்து வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.
செய்யாறு சட்டபேரவை தொகுதியில் கடந்த 1962-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடைபெற்ற 12 தேர்தலில் திமுக 7 முறையும், அதிமுக 3 முறையும், பாமக, காங்கிரஸ் ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது. கடைசியாக 2011-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த முக்கூர் சுப்ரமணியன் வெற்றி பெற்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக உள்ளார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | கி.மோகன் | அதிமுக |
2 | எம்.கே.விஷ்ணுபிரசாத் | காங்கிரஸ் |
3 | ப.சரவணன் | தேமுதிக |
4 | க.சீனுவாசன் | பாமக |
5 | ப.பாஸ்கரன் | பாஜக |
6 | செ.ராஜேஷ் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
செய்யாறு வட்டம் (பகுதி)
அரியூர், பணமுகை, பிரம்மதேசம், சீவரம், சிறுநாவல்பட்டு, வடஇலுப்பை, செய்யனூர், வெங்கலத்தூர், உமையான்புரம், அரசங்குப்பம், செட்டித்தாங்கல், ஒழுக்கவாக்கம், தாளிக்கல், வெள்ளக்குளம, திருப்பனங்காடு, வெம்பாக்கம், கூத்தனூர், நாட்டேரி, சோணைப்பட்டு, புலிவளம், பூந்தண்டலம், சட்டுவந்தாங்கல், தென்னம்பட்டு, தண்டப்பந்தாங்கல் (ஆர், எப்), அழிவிடைதாங்கி, சேலேரி, திருப்பனமூர், பில்லாந்தாங்கல், நமண்டி, வடமாவந்தல், அப்துல்லாபுரம், சூரங்கனில்முட்டம், பல்லாவரம, கனிக்கிலுப்பை, சேனியநல்லூர், குண்டியாந்தண்டலம, கருட்டல், பூனைத்தாங்கல், மேனல்லூர், கிரிஜாபுரம், கீழ்நாய்க்கன்பாளையம், வடகல்பாக்கம், வாழவந்தல், மாமண்டூர், ஹரிஹரபாக்கம், திருவடிராயபுரம், கீழ்நெல்லி, கரந்தை, சுமங்கலி, ஆலந்தாங்கல், கொடையம்பாக்கம், பெருங்கட்டூர், பெருமாந்தாங்கல், தண்டப்பந்தாங்கல், வடமணப்பாக்கம், மேல்பூதேரி, மோரணம், தளரப்பாடி, புளிந்தை, புள்ளவாக்கம், கம்மந்தாங்கல், பூதேரி, ஆராதிரிவேளுர், அசனம்பேட்டை, தென்கழனி, குன்னத்தூர், காகனம், சித்தாத்தூர், கனகம்பாக்கம், பெரும்புலிமேடு, செல்லப்பெரும்புலிமேடு, அழிஞ்சல்பட்டு, நரசம்ங்கலம், மாத்தூர், சோதியம்பாக்கம், பகவந்தபுரம், எழாக்சேரி, சித்தாலபாக்கம், வயலாத்தூர், அரசாணிப்பாலை, புன்னை, தர்மச்சேரி, பாவூர், உக்கம்பெரும்பாக்கம், மாங்கால், மகாஜனப்பாக்கம், நாவல், கழனிப்பாக்கம், வாழ்குடை.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,19,603 |
பெண் | 1,23,415 |
மூன்றாம் பாலினத்தவர் | 3 |
மொத்த வாக்காளர்கள் | 2,43,021 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1951 | தர்மலிங்க நாயக்கர் | பொது நல கட்சி | 25586 |
1957 | பி. இராமச்சந்தரன் | காங்கிரஸ் | 26018 |
1962 | கே. கோவிந்தன் | திமுக | 23250 |
1967 | கே. கோவிந்தன் | திமுக | 37068 |
1971 | கே. கோவிந்தன் | திமுக | 39978 |
1977 | புலவர் கோவிந்தன் | திமுக | 33338 |
1980 | பாபு ஜனார்த்தனம் | திமுக | 43341 |
1984 | கே. முருகன் | அதிமுக | 53945 |
1989 | வி. அன்பழகன் | திமுக | 46376 |
1991 | எ. தேவராஜ் | அதிமுக | 66061 |
1996 | வி. அன்பழகன் | திமுக | 71416 |
2001 | பி. எசு. உலகரசன் | பாமக | 62615 |
2006 | எம். கே. விசுனுபிரசாத் | காங்கிரஸ் | 60109 |
2011 | முக்கூர் என். சுப்பிரமணியன் | அதிமுக | 96180 |
ஆண்டு | 2ம் இடம்பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1951 | பி. இராமச்சந்திரன் | காங்கிரஸ் | 19709 |
1957 | வி. தர்மலிங்க நாயகர் | சுயேச்சை | 24761 |
1962 | வி. தர்மலிங்க நாயக்கர் | காங்கிரஸ் | 22892 |
1967 | கே. எம். கனகன் | காங்கிரஸ் | 17395 |
1971 | பெருமாள்சாமி நாயக்கர் | ஸ்தாபன காங்கிரஸ் | 31677 |
1977 | கே. சண்முகசுந்தரம் | அதிமுக | 21419 |
1980 | கே. எ. விழி வேந்தன் | அதிமுக | 35091 |
1984 | பாபு ஜனார்த்தனம் | திமுக | 37405 |
1989 | எம். கிருஷ்ணசாமி | காங்கிரஸ் | 22993 |
1991 | வி. அன்பழகன் | திமுக | 30106 |
1996 | பி. சந்திரன் | அதிமுக | 33930 |
2001 | ஆர். கே. பி. இராசராசன் | திமுக | 50530 |
2006 | ஆர். பாவை | அதிமுக | 55319 |
2011 | எம். கே. விஷ்ணுபிரசாத் | காங்கிரஸ் | 70717 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | எம் கே. விஷ்ணுபிரசாத் | காங்கிரஸ் | 60109 |
2 | R. பாவை | அ.தி.மு.க | 55319 |
3 | D. சுபமங்கலம் | தே.மு.தி.க | 13655 |
4 | V. ரவிச்சந்திரன் | சுயேச்சை | 2363 |
5 | G. லக்ஷ்மணன் | பி.ஜே.பி | 1502 |
6 | வெங்கடேசன் | சுயேச்சை | 770 |
7 | T. தமிழினியன் | சுயேச்சை | 586 |
8 | N. பார்த்தசாரதி | சுயேச்சை | 537 |
9 | M. துரைகண்ணன் | சுயேச்சை | 411 |
10 | U. தாஸ் | சுயேச்சை | 256 |
135508 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | N. சுப்பிரமணியன் | அ.தி.மு.க | 96180 |
2 | M.K. விஸ்ணுபிரசாத் | காங்கிரஸ் | 70717 |
3 | D. விஸ்வநாதன் | சுயேச்சை | 3022 |
4 | E. ராஜேந்திரன் | சுயேச்சை | 2208 |
5 | D. தமிழரசி | பி.ஜே.பி | 2179 |
6 | K.P. இளங்கோவன் | புபா | 1759 |
7 | C. பன்னீர்செல்வம் | பி.எஸ்.பி | 858 |
8 | A. சிங்காரவேலு | சுயேச்சை | 649 |
9 | A. ராஜி | ஐ.ஜே.கே | 586 |
10 | E. பொன்முடி | சுயேச்சை | 546 |
11 | K. சரவணன் | சுயேட்சை | 517 |
179221 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT