Published : 05 Apr 2016 03:56 PM
Last Updated : 05 Apr 2016 03:56 PM
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் சட்டப்பேரவை தொகுதி, திருவொற்றியூர் வட்டத்தின் பெரும்பகுதிகள் அடங்கியுள்ள தொகுதியாகும்.
சென்னை மாநகராட்சியின் 1- வது மண்டலமாக விளங்கும் திருவொற்றியூர், எர்ணாவூர், எண்ணூர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் 2- வது மண்டலமான மணலி, சின்னசேக்காடு பகுதிகள் அடங்கிய தொகுதியாக திருவொற்றியூர் விளங்குகின்றன.
பிரசித்திப் பெற்ற திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் மற்றும் சென்னை உரத் தொழிற்சாலை, சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளை தன்னகத்தே கொண்டுள்ள இத்தொகுதியில் நாடார், மீனவர், முதலியார் சமூகத்தினர் கணிசமாக வசிக்கின்றனர்.
மீன்பிடித் தொழில் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் இத்தொகுதியில் நடக்கின்றன.
திருவொற்றியூர் நகராட்சியாக இருந்த போது தொடங்கப்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலை விரிவு படுத்தும் பணி இன்னும் முடிவுக்கு வரவில்லை.
சென்னை துறைமுகத்துக்கு செல்லும் கண்டய்னர் லாரிகளால் திருவொற்றியூர் கடற்கரை சாலையில் எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது. 8 ஆண்டுகளுக்கு முன்பு திருவொற்றியூர் தொகுதியில் தொடங்கப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் பல ஆண்டுகளாக கிடப்பில் கிடக்கிறது என, பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல், மணலி பகுதியில் செயல்பட்டும் உரத் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கும் பொதுமக்கள், திருவொற்றியூரை ஒட்டியுள்ள பகுதிகளில் பல ஆண்டுகளாக குடிநீர் தட்டுபாடு நீடித்து வருகிறது என குமுறுகிறார்கள்.
எண்ணூர் பகுதியில், கடலரிப்பை தடுக்க ஏதுவாக தூண்டில் வளைவு அமைக்கவேண்டும் உள்ளிட்ட பல நீண்ட கால கோரிக்கைகளை திருவொற்றியூர் தொகுதிவாசிகள் முன் வைக்கின்றனர்.
திருவொற்றியூர் தொகுதியில் கடந்த 1967 முதல் 2011 வரை நடந்த 11 தேர்தல்களில், 5 முறை திமுகவும், 4 முறை அதிமுகவும், ஒரு முறை காங்கிரஸும், ஒரு முறை காந்தி காமராஜர் தேசிய காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக வேட்பாளர் குப்பன் 93,944 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கே.கே.பி.சாமி 66, 653 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | பி.பால்ராஜ் | அதிமுக |
2 | கே.பி.பி.சாமி | திமுக |
3 | எ.வி.ஆறுமுகம் | தேமுதிக |
4 | ர.வசந்தகுமாரி | பாமக |
5 | மு.சிவகுமார் | பாஜக |
6 | ர.கோகுல் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
அம்பத்தூர் வட்டம்
கத்திவாக்கம் நகராட்சி, திருவொற்றியூர் நகராட்சி, மணலி பேரூராட்சி மற்றும் சின்னசேக்காடு பேரூராட்சி
29/4/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 141142 |
பெண் | 142706 |
மூன்றாம் பாலினித்தவர் | 89 |
மொத்த வாக்காளர்கள் | 283937 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள்
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1967 | எ. பி. அரசு | திமுக | 51437 | 61.23 |
1971 | எம். வி. நாராயணசாமி | திமுக | 51487 | 53.74 |
1977 | பி. சிகாமணி | அதிமுக | 26458 | 31.29 |
1980 | குமரி ஆனந்தன் | காந்தி காமராசு தேசிய காங்கிரசு | 48451 | 47.36 |
1984 | ஜி. கே. ஜெ. பாரதி | காங்கிரசு | 65194 | 54.26 |
1989 | டி. கே. பழனிசாமி | திமுக | 67849 | 45.53 |
1991 | கே. குப்பன் | அதிமுக | 85823 | 56.54 |
1996 | டி. சி. விசயன் | திமுக | 115939 | 64.19 |
2001 | டி. ஆறுமுகம் | அதிமுக | 113808 | 54.94 |
2006 | கே. பி. பி. சாமி | திமுக | 158204 | --- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1967 | வி. வெங்கடேசுவரலு | காங்கிரஸ் | 32564 | 38.77 |
1971 | வெங்கடேசுவரலு நாயுடு | நிறுவன காங்கிரசு | 35391 | 36.94 |
1977 | எம். வி. நாராயணசாமி | திமுக | 23995 | 28.37 |
1980 | டி. லோகநாதன் | காங்கிரஸ் | 44993 | 43.98 |
1984 | டி. கே. பழனிசாமி | திமுக | 53684 | 44.68 |
1989 | ஜெ. இராமச்சந்திரன் | அதிமுக (ஜெ) | 46777 | 31.42 |
1991 | டி. கே. பழனிசாமி | திமுக | 58501 | 38.54 |
1996 | பி. பால்ராசு | அதிமுக | 40917 | 22.65 |
2001 | குமரி அனந்தன் | சுயேச்சை | 79767 | 38.5 |
2006 | வி. மூர்த்தி | அதிமுக | 154757 | --- |
2006 – தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K.P.P. சாமி | திமுக | 158204 |
2 | மூர்த்தி | அதிமுக | 154757 |
3 | முருகன் | தேமுதிக | 21915 |
4 | கணேசன் | பிஜேபி | 2977 |
5 | புவனேஸ்வரன் | சுயேச்சை | 1053 |
6 | சண்முகம் | சுயேச்சை | 760 |
7 | ராஜேந்திரன் | பா பி | 603 |
8 | சுரேஷ் | சுயேச்சை | 453 |
9 | ராஜேந்திரன் .N | சுயேச்சை | 257 |
10 | ராஜேந்திரன் V .S | சுயேச்சை | 234 |
11 | அருள்தாஸ் | சுயேச்சை | 189 |
341402 |
2011 – தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | குப்பன்.கே | அதிமுக | 93944 |
2 | K.P.P. சாமி | திமுக | 66653 |
3 | வேங்கடகிருஷ்ணன் | பிஜேபி | 1719 |
4 | பாண்டியன் | சுயேச்சை | 649 |
5 | சுரேஷ் | பி எஸ் பி | 464 |
6 | உடையார் | ஜே எம் எம் | 343 |
7 | தணிகாசலம் | சுயேச்சை | 252 |
8 | ஜான்சன் | பு பா | 197 |
9 | குப்பன்.கே | சுயேச்சை | 172 |
10 | குப்பன்.டி | சுயேச்சை | 164 |
11 | செல்வராஜ்குமார் | சுயேச்சை | 159 |
164716 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT