Published : 05 Apr 2016 03:56 PM
Last Updated : 05 Apr 2016 03:56 PM
திருவள்ளூர் சட்டப்பேரவை தொகுதி, மாவட்ட தலைநகரான திருவள்ளூர், திருவள்ளூர் வட்டத்தின் பெரும்பகுதி மற்றும் திருத்தணி வட்டத்தின் திருவாலங்காடு ஊராட்சி ஒன்றிய பகுதிகள் அடங்கியது.
திருவள்ளூர் நகராட்சி மற்றும் 108 வைணவ தலங்களில் ஒன்றான வீரராகவ பெருமாள் கோயில், மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் துறை அலுவலகம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை உள்ளிட்டவைகளை தன்னகத்தே கொண்டுள்ளது திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி.
அதுமட்டுமல்லாமல், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், சென்னையின் குடிநீர் தேவையை கணிசமாக தீர்க்கக் கூடிய பூண்டி நீர்த்தேக்கம் ஆகியவையும் இத்தொகுதியில்தான் உள்ளது.
தலித் மற்றும் வன்னியர் சமூகத்தினர் கணிசமாக வசித்து வரும் திருவள்ளூர் தொகுதியின் ஒரு பகுதி, நகர் பகுதியாக உள்ளதால் வணிக நிறுவனங்கள், தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.
அதே நேரத்தில், இத்தொகுதியின் முக்கிய தொழிலாக விவசாயமே திகழ்கிறது.
மாவட்ட தலைநகராக விளங்கும் திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக பாதாள சாக்கடைத் திட்டம் நடந்து வருகிறது. இன்னும் முடிந்த பாடில்லை.
அதே போல், நாள் தோறும் திருவள்ளூர் நகருக்கு வந்து செல்லும் பொதுமக்களின் வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அனைத்து வசதிகளுடன் கூடிய பஸ் நிலையம் உருவாக்கப்படும் என, அரசு ஏற்கனவே அறிவித்ததோடு சரி. ஆண்டுகள் பல கடந்தும் அது செயல்பாட்டுக்கு வரவில்லை.
அதே போல், மாவட்டத் தலை நகரை இணைக்கக் கூடிய செங்குன்றம்- திருவள்ளூர் சாலை மற்றும் திருவள்ளூர் ஜி.வி., நாயுடு சாலை உள்ளிட்டவை பல ஆண்டுகளாக பல்லைக் காட்டி சிரித்துக் கொண்டே இருக்கின்றன என பொதுமக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், மாவட்ட தலைநகரான திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் அரசு கலைக்கல்லூரி அமைக்கவேண்டும், பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றுலா தலமாக ஆக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நீண்ட காலமாக கோரிக்கைகளாகவே தொடர்ந்து வருகிறது எனவும் தொகுதிவாசிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
கடந்த 1951 முதல் 2011 வரை நடந்த 14 தேர்தல்களில், 5 முறை அதிமுகவும், 5 முறை திமுகவும், 2 முறை காங்கிரஸும், ஒரு முறை தமாகாவும், ஒரு முறை கிசான் மஸ்தூர் பிரஜா கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக வேட்பாளர் பி.ரமணா(முன்னாள் அமைச்சர்) 91, 337 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் இ.எ.பி. சிவாஜி 67, 689 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | அ.பாஸ்கரன் | அதிமுக |
2 | வி.ஜி.ராஜேந்திரன் | திமுக |
3 | அ.பாலசுப்பிரமணி | விசிக |
4 | வ.பாலயோகி | பாமக |
5 | கி.சீனிவாசன் | (இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்- பாஜக) |
6 | கு.செந்தில்குமார் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கும் பகுதிகள்
திருத்தணி வட்டம்
அருங்குளம், மாமண்டூர், அரும்பாக்கம், குப்பம், ஆற்காடு, நெடம்பரம், பணப்பாக்கம், கூளூர், காஞ்சிப்பாடி, முத்துகொண்டபுரம், இலுப்பூர், நாபளூர், ராமாபுரம், காவேரிராஜபுரம், அத்திப்பட்டு, வேணுகோபாலபுரம், வீரராகவபுரம், திருவாலங்காடு, வியாசாபுரம், பழையனூர், ஜாகீர்மங்கலம், ராஜபத்மபுரம், மணவூர், கபுலகண்டிகை, மருதவள்ளிபுரம், அரிச்சந்திரபுரம், ஜே.எஸ்.ராமபுரம், பெரிகளகத்தூர், ஒரத்தூர், லக்ஷ்மிவிலாஸபுரம், பாகசாலை, சின்னமண்டலி மற்றும் களம்பாக்கம் கிராமங்கள்.
திருவள்ளூர் வட்டம்
அட்சன்புரம், பிளேஸ்பாலயம், கெங்குளுகண்டிகை, அல்லிக்குழி, கிரீன்வேல்நத்தம், சென்றாயன்பாலயம், தோமூர், திருப்பேர், அரும்பாக்கம், ரங்காபுரம், கிருஷ்ணாபுரம், பூண்டி, கண்ணம்மாபேட்டை, மூவூர், நெய்வேலி, இராமதண்டலம், செயஞ்சேரி, எறையூர், மொன்னவேடு, சித்தம்பாக்கம், ராமஞ்சேரி, காரநிசாம்பேட்டை, குன்னவலம், பட்டரைபெரும்புதூர், கனகவல்லிபுரம், பாண்டூர், திருப்பாச்சூர், திருவள்ளூர், பிரையாங்குப்பம், பள்ளியரைக்குப்பம், காரணை, ஆட்டுப்பாக்கம், நெமிலியகரம், கீழ்விளாகம், மேல்விளாகம், கலியனூர், விடையூர், வெண்மனம்புதூர், கடம்பத்தூர், ஏகாட்டூர், மேல்நல்லாத்தூர், கொப்பூர், நயம்பாக்கம், பாப்பரம்பாக்கம், வலசைவெட்டிக்காடு, எல்லுப்பூர், போளிவாக்கம், நுங்கம்பாக்கம், பிஞ்சிவாக்கம், கசவநல்லாத்தூர், அலரம், பானம்பாக்கம், ராமன் கோயில், மடத்துக்குப்பம், செஞ்சி, தென்காரணை, சிட்ரம்பாக்கம், காவாங்கொளத்தூர், புதுமாவிலங்கை, சத்தரை, எறையாமங்கலம், அழிஞ்சிவாக்கம், மப்பேடு, கீழ்ச்சேரி, கொண்டஞ்சேரி, பேரம்பாக்கம், நரசிங்கபுரம், இருளஞ்சேரி, குமாரஞ்சேரி, கூவம், பிள்ளையார்க்குப்பம், கோவிந்தமேடு, உளுந்தை, தொடுகாடு, வயலூர், கோட்டையூர், காரணை, கல்லம்பேடு, உத்தரம்பாக்கம், கண்ணூர், புதுப்பட்டு, சேலை மற்றும் திருப்பந்தியூர் கிராமங்கள்.
திருவள்ளூர் நகராட்சி மற்றும் வெங்கத்தூர் சென்சஸ் டவுன்
29/4/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 126397 |
பெண் | 131044 |
மூன்றாம் பாலினித்தவர் | 21 |
மொத்த வாக்காளர்கள் | 257462 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
திருவள்ளூர் தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | எம். தர்மலிங்கம் | கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி | 32599 | 26.65 |
1957 | ஏகாம்பர முதலியார் | காங்கிரஸ் | 40214 | 33.72 |
1962 | வி. எஸ். அருணாச்சலம் | காங்கிரஸ் | 21609 | 50.19 |
1967 | எஸ். எம். துரைராஜ் | திமுக | 40687 | 66.06 |
1971 | எஸ். எம். துரைராஜ் | திமுக | 36496 | 62.81 |
1977 | எஸ். பட்டாபிராமன் | அதிமுக | 30670 | 45.38 |
1980 | எஸ். பட்டாபிராமன் | அதிமுக | 30121 | 41.49 |
1984 | எஸ். பட்டாபிராமன் | அதிமுக | 44461 | 51.73 |
1989 | எஸ். ஆர். முனிரத்தினம் | திமுக | 45091 | 47.18 |
1991 | சக்குபாய் தேவராஜ் | அதிமுக | 54267 | 56.91 |
1996 | சுப்பரமணி என்கிற சி. எஸ். மணி | திமுக | 65432 | 60.78 |
2001 | டி. சுதர்சனம் | தமாகா | 47899 | 42.9 |
2006 | இ. ஏ. பி. சிவாஜி | திமுக | 64378 | --- |
2011 | ரமணா பி.வி | அதிமுக | 91337 | --- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | வி. கோவிந்தசாமி நாயுடு | கிசான் மஜ்தூர் பிரஜா கட்சி | 228462 | 23.26 |
1957 | வி. எஸ். அருணாச்சலம் | காங்கிரசு | 34689 | 29.09 |
1962 | எஸ். எம். துரைராசு | திமுக | 17175 | 39.89 |
1967 | வி. எஸ். அருணாச்சலம் | காங்கிரசு | 19030 | 30.9 |
1971 | வி. எஸ். அருணாச்சலம் | நிறுவன காங்கிரசு | 17759 | 30.56 |
1977 | முனிரத்தினம் நாயுடு | ஜனதா கட்சி | 22368 | 33.09 |
1980 | ஆர். புருசோத்தமன் | காங்கிரசு | 24585 | 33.87 |
1984 | எஸ். ஆர். முனிரத்தினம் | திமுக | 39908 | 46.43 |
1989 | எம். செல்வராஜ் | அதிமுக (ஜெ) | 22852 | 23.91 |
1991 | சி. சுப்பரமணி | திமுக | 27847 | 29.2 |
1996 | ஜி. கனகுராஜ் | அதிமுக | 32178 | 29.89 |
2001 | வி. ஜி. இராசேந்திரன் | புதிய நீதி கட்சி | 27948 | 25.03 |
2006 | பி. இரமணா | அதிமுக | 55454 | |
2011 | இ.ஏ.பி.சிவாஜி | திமுக | 67689 | --- |
2006 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | இ.ஏ.பி.சிவாஜி | திமுக | 64378 |
2 | B.ரமணா | அதிமுக | 55454 |
3 | B.பார்த்தசாரதி | தேமுதிக | 8048 |
4 | S.ஜெகஜீவன்ராம் | சுயேச்சை | 1413 |
5 | R.S.வீரமணி | பிஜேபி | 1092 |
6 | M.வாசன் | சுயேச்சை | 885 |
7 | D.ஸ்ரீனிவாசன் | பிஎஸ்பி | 722 |
8 | S.சிதம்பரம் | சுயேச்சை | 504 |
9 | M.வெங்கடேசன் | சுயேச்சை | 375 |
10 | N.சூர்யகுமார் | எஸ் பி | 232 |
11 | L.மணி | சுயேச்சை | 200 |
12 | D.சகாரியா | சுயேச்சை | 123 |
13 | M.செந்தில் குமார் | எல்ஜேபி | 122 |
14 | V.அன்பு | சுயேச்சை | 98 |
15 | D.ராதாகிருஷ்ணன் | சுயேச்சை | 86 |
133732 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | பி.வி.ரமணா | அதிமுக | 91337 |
2 | இஏபி.சிவாஜி | திமுக | 67689 |
3 | ஜேம்ஸ்.இ | பு பா | 2220 |
4 | ஆர்.எம்.ஆர்.ஜானகி ராமன் | பிஜேபி | 1869 |
5 | டி.ஏ.தெய்வசிகாமணி | ஆர்ஜேடி | 1080 |
6 | சாந்தகுமார்.வி | பிஎஸ்பி | 1039 |
7 | யு.பராச்சலம் . | சுயேச்சை | 651 |
8 | சி.தினகரன் | சுயேச்சை | 496 |
9 | ஜி.ராகவன் | சுயேச்சை | 478 |
10 | பி.சரவணன் | சுயேச்சை | 423 |
11 | என்.ஜெகன் | சுயேச்சை | 415 |
12 | சி.ஜெ.ஸ்ரீநிவாசன் | சுயேச்சை | 381 |
13 | டி.ஜெயகுமார் | சுயேச்சை | 297 |
14 | ஜி.ஜெயவேல் | சுயேச்சை | 261 |
15 | எஸ்.தேவாசீர்வாதம் | ஆர்பிஐ | 238 |
16 | சி.சுப்ரமணியன் | சுயேச்சை | 231 |
17 | வி.ராமன் | சுயேச்சை | 227 |
18 | பி.ரமேஷ் | சுயேச்சை | 216 |
19 | டி.இளங்கோவன் | சுயேச்சை | 202 |
20 | ஆர்.சக்திதாசன் | சுயேச்சை | 133 |
21 | இ.டி.சசிகுமார் | சுயேச்சை | 120 |
22 | பி.கோபால் | சுயேச்சை | 112 |
11570 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT