Published : 05 Apr 2016 03:56 PM
Last Updated : 05 Apr 2016 03:56 PM
திருவள்ளூர் மாவட்டத்தில், ஆந்திர மாநிலத்தை ஒட்டியுள்ள மற்றொரு சட்டப்பேரவை தொகுதி திருத்தணி. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு ஆந்திர பகுதிக்கு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டு, தமிழகத்துக்கு வந்த பகுதிதான் திருத்தணி. இந்த தொகுதியில், திருத்தணி வட்டத்தின் இரு ஊராட்சி ஒன்றியங்களில், திருத்தணி ஊராட்சி ஒன்றியப் பகுதிகள் மற்றும் பள்ளிப்பட்டு வட்டப்பகுதிகள் அடங்கியுள்ளன.
திருத்தணி நகராட்சி மற்றும் பள்ளிப்பட்டு, பொதட்டூர்பேட்டை பேரூராட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ள திருத்தணி தொகுதியில்தான், முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது.
திருத்தணி சுப்ரமணிய சுவாமி அரசு கலைக்கல்லூரி மற்றும் 40-க்கும் மேற்பட்ட தனியார் அரிசி ஆலைகள், பள்ளிப்பட்டு வட்டம் மற்றும் திருத்தணி வட்டப்பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் விசைத்தறிகள் கொண்ட தொகுதி திருத்தணி.
வன்னியர், செங்குந்தர், தலித் மற்றும் தெலுங்கு மொழி பேசும் சமூகத்தினர் கணிசமாக இத்தொகுதியில் வசித்து வருகின்றனர்.
கரும்பு, வேர்க்கடலை, நெல் மற்றும் பூக்கள் உள்ளிட்ட தோட்டப்பயிர்கள் சாகுபடி என தொடரும் விவசாயம் மற்றும் கைலி உள்ளிட்டவை தயாரிக்கும் நெசவு தொழில்கள் திருத்தணி தொகுதியின் பிரதான தொழில்களாக விளங்குகின்றன.
ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக, இடைத்தரகர்களின் பிடியில் நெசவுத் தொழில் சிக்கி தவிப்பதால் திருத்தணி தொகுதியில் வசிக்கும் நெசவாளர்கள் கடும்பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
வறண்ட மலைக்குன்றுகள் கணிசமாக உள்ள திருத்தணி தொகுதியில் ஆண்டுத் தோறும் கோடைக்காலங்களில் குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுவது தொடர்கதை.
ஆர்.கே.பேட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் உப்புநீராகவே உள்ளதால், பள்ளிப்பட்டு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கோரிக்கை.
ஆர்.கே.பேட்டையில் போதிய வங்கிகள் அமைக்கவேண்டும், புதூர் பகுதியில் அரசு மருத்துவமனை அமைக்கவேண்டும், திருத்தணி தொகுதியில் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கவேண்டும், பள்ளிப்பட்டு வட்டத்தை 2 ஆக பிரிக்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஒவ்வொரு தேர்தலிலும் வைக்கப்பட்டு வருவதாக தொகுதிவாசிகள் தெரிவிக்கிறார்கள்.
கடந்த 1951 முதல் 2011 வரை நடந்த 13 தேர்தல்களில், 5 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும், 2 முறை காங்கிரஸும், ஒரு முறை சுயேட்சையும், ஒரு முறை பாமகவும், ஒரு முறை தேமுதிகவும் வெற்றி பெற்றுள்ளன. இதில், கடந்த 2011-ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகித்த தேமுதிக வேட்பாளர் அருண்சுப்ரமணியன் 95, 918 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ராமன் 71, 988 வாக்குகள் பெற்று 2-ம் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | பி.எம்.நரசிம்மன் | அதிமுக |
2 | அ.கா. சிதம்பரம் | காங்கிரஸ் |
3 | டி. கிருஷ்ணமூர்த்தி | தேமுதிக |
4 | டாக்டர் அ.வைத்திலிங்கம் | பாமக |
5 | எம்.சக்ரவர்த்தி | பாஜக |
6 | சு.பிரபு | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
பள்ளிப்பட்டு வட்டம் திருத்தணி வட்டம் தாழவேடு, பொன்பாடி, அலமேலுமங்காபுரம், மத்தூர், கிருஷ்ணசமுத்திரம், சிறுங்குவி, வீரகநல்லூர், சூரியநகரம், அகூர், கோரமங்கலம், தாடூர், வீரகாவேரிராஜபுரம், பீரகுப்பம், டி.சி.கண்டிகை, வி.கே,என்.கண்டிகை, எஸ்.அக்ரஹாரம், செருக்கனூர், சின்னகடம்பூர், பெரியகடம்பூர், கார்த்திகேயபுரம், திருத்தணி, முருக்கம்பட்டு, தரணிவராகபுரம், வேலஞ்சேரி, சத்ரஞ்செயபுரம், கொல்லகுப்பம் பூனிமாங்காடு, நல்லாட்டூர், சிவ்வடா, நெமிலி பட்டாபிராமபுரம் மற்றும் சந்தானகோபாலபுரம்
29/4/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 134574 |
பெண் | 139056 |
மூன்றாம் பாலினித்தவர் | 30 |
மொத்த வாக்காளர்கள் | 273660 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
திருத்தணி சட்டமன்றத் தொகுதி கடந்த வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | எம். துரைக்கண்ணு | காங்கிரசு | 24312 | 19.57 |
1962 | சி. சிரஞ்சீவலு நாயுடு | சுயேச்சை | 36884 | 50.51 |
1967 | கே. வினாயகம் | காங்கிரசு | 27123 | 40.34 |
1971 | இ. எஸ். தியாகராசன் | திமுக | 43436 | 61.72 |
1977 | ஆர். சண்முகம் | அதிமுக | 29070 | 43.68 |
1980 | ஆர். சண்முகம் | அதிமுக | 35845 | 49.6 |
1984 | ஆர். சண்முகம் | அதிமுக | 41669 | 50.48 |
1989 | பி. நடராசன் | திமுக | 35555 | 41.88 |
1991 | இராசன்பாபு என்கிற தணிகை பாபு | அதிமுக | 50037 | 53.2 |
1996 | இ. ஏ. பி. சிவாஜி | திமுக | 58049 | 53.9 |
2001 | ஜி. இரவிராசு | பாமக | 58549 | 50.01 |
2006 | ஜி. ஹரி | அதிமுக | 52871 | --- |
2011 | மு.அருண் சுப்பிரமணியம் | தேமுதிக | 95918 | --- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | கிடம்பை வரதாச்சாரி | காங்கிரஸ் | 21125 | 17 |
1962 | இ. எஸ். தியாகராசன் | காங்கிரஸ் | 34176 | 46.81 |
1967 | வி. கே. குப்புசாமி | திமுக | 25337 | 37.68 |
1971 | எ. ஏகாம்பர ரெட்டி | நிறுவன காங்கிரஸ் | 26938 | 38.28 |
1977 | எ. பி. இராமச்சந்திரன் | திமுக | 22 | 2.2 |
1980 | டி. நமச்சிவாயம் | காங்கிரஸ் | 25754 | 35.64 |
1984 | சி. சிரஞ்சீவலு நாயுடு | ஜனதா கட்சி | 37740 | 45.72 |
1989 | முனு ஆதி | அதிமுக (ஜெ) | 26432 | 31.14 |
1991 | சி. சிரஞ்சீவலு நாயுடு | ஜனதா தளம் | 27845 | 29.61 |
1996 | ஜி. ஹரி | அதிமுக | 28507 | 26.47 |
2001 | இ. எ. பி. சிவாஜி | திமுக | 44675 | 38.16 |
2006 | ஜி. இரவிராசு | பாமக | 51955 | |
2011 | டாக்டர் இ.எஸ்.எஸ்.ராமன், | காங்கிரஸ் | 71988 | --- |
1951 இல் இத்தொகுதிக்கு இரு உறுப்பினர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். ஆதலால் காங்கிரசின் துரைக்கண்ணு & கிடம்பை வரதாச்சாரி இருவரும் சட்டமன்றத்துக்கு தேர்வானார்கள்.
1967இல் சுயேச்சை தேசப்பன் 14777 (21.98%) வாக்குகள் பெற்றார்.
1977இல் ஜனதாவின் சுப்பராயலு 13540 (20.35%) வாக்குகள் பெற்றார்.
1980இல் ஜனதாவின் (ஜெயப்பிரகாசு நாராயணன் பிரிவு) சி. சிரஞ்சீவலு நாயுடு 8967 ( 12.41%) வாக்குகள் பெற்றார்.
1989இல் காங்கிரசின் மணலி ராமகிருசுணன் 15329 (18.06%) வாக்குகள் பெற்றார்.
1991 இல் பாமகவின் மூர்த்தி 12808 (13.62%) வாக்குகள் பெற்றார்.
1996 இல் பாமகவின் ஜி. ரவிராசு 12896 (11.98%) வாக்குகள் பெற்றார்.
2006 இல் தேமுதிகவின் சேகர் 11293 வாக்குகள் பெற்றார்.
2006 – தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | ஜி.ஹரி | அதிமுக | 52871 |
2 | ஜி.இரவிராஜ் | பாமக | 51955 |
3 | ஆர். சேகர் | தேமுதிக | 11293 |
4 | டி.ராஜபாண்டியன் | சுயேச்சை | 1965 |
5 | பி.சிரஞ்சீவிலு | பாஜக | 1051 |
6 | ஜி.ரகு | சுயேச்சை | 874 |
7 | சி.ஹரி | சுயேச்சை | 730 |
8 | ஜெ.புருஷோத்தமன் | சுயேச்சை | 499 |
9 | ஜி.வி.ரவி | சுயேச்சை | 343 |
10 | ஜி.சதிஷ்குமார் | சுயேச்சை | 326 |
11 | டி.ஜெயராஜ் | பகுஜன் | 303 |
12 | ஜி.அற்புதம்மாள் | சுயேச்சை | 172 |
13 | ஆர்.கலைவண்ணன் | சுயேச்சை | 156 |
14 | தேவிகுமாரி | சுயேச்சை | 149 |
122687 |
2011 – தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | M .அருண் சுப்ரமணியன் | தேமுதிக | 95918 |
2 | E.S.S. ரமணன் | காங்கிரஸ் | 71988 |
3 | A.K.சுப்பிரமணி | ஜேஎம்எம் | 9760 |
4 | S.ராம்பாய் | சுயேச்சை | 3232 |
5 | D.தாஸ் | பிஎஸ்பி | 1859 |
6 | M.ரமேஷ் குமார் | சுயேச்சை | 1524 |
7 | J.பாபு | பிஜேபி | 1450 |
8 | J. ரமேஷ் | பு பா | 1296 |
9 | N.D.சுரேஷ் பாபு | சுயேச்சை | 1242 |
10 | M.D.தனிகைமலை | ஐஜேகே | 1135 |
11 | எம்.சின்னப்பன் | சுயேச்சை | 710 |
12 | சேது | சுயேச்சை | 591 |
13 | M.சண்முகம் | சுயேச்சை | 532 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT