Published : 23 Apr 2016 03:51 PM
Last Updated : 23 Apr 2016 03:51 PM
1. பூவிருந்தவல்லியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
2. பூவிருந்தவல்லி சாலை குமணன் சாவடியிலிருந்து குறுக்கு வழிச்சாலை வரை மேம்பாலம் அமைக்கப்படும்.
3. பூவிருந்தவல்லி ஒன்றியம் கூடபாக்கம் ஊராட்சி கலெக்டர் நகர் பகுதியில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.
4. பூவிருந்தவல்லி ஒன்றியம் சென்னீர்குப்பம் ஊராட்சி குமரன்நகர், செல்வகணபதி நகர், லீலாவதி நகர், ஜெ.ஜெ நகர் பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும்.
5. திருவேற்காடு நகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்.
6. திருவேற்காடு பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்படும்.
7. பெங்களூரு நெடுஞ்சாலை சூழ 4 நசரத்பேட்டை கூட்டுரோட்டில் மேம்பாலம் அமைக்கப்படும்.
8. சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் திருமழிசையில் மேம்பாலம் அமைக்கப்படும்
9. திருவாலங்காடு இரயில் நிலையம் அருகே மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
10. சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் ஊராட்சியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படும்.
11. செங்குன்றம் புறவழிச்சாலையில் வடகரை சந்திப்பு , சோத்துபாக்கம் சாலை சந்திப்பு ஆகிய இடங்களில் மேம்பாலம் அமைக்கப்படும்.
12. நத்தம்மேடு ஊராட்சி அண்ணா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு பட்டா வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும்.
13. திருநின்றவூரில் பாதாள சாக்கடை அமைக்கப்படும்.
14. ஆரணி ஆற்றின் குறுக்கே ஊத்துக்கோட்டையில் மேம்பாலம் அமைக்கப்படும்.
15. பொன்னேரியில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
16. பொன்னேரி, மீஞ்சூர், ஆரணி ஆகிய நகரங்களில் பாதாள சாக்கடை அமைக்கப்படும்.
17. மீஞ்சூர் பேரூராட்சியில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
18. பொன்னேரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்படும்.
19. திருத்தணி நகரில் புறவழிச்சாலை அமைக்கப்படும்.
20. திருத்தணி அரசுப் பொது மருத்துவமனை 24 மணிநேர அவசர சிகிச்சைப் பிரிவுடன் தரம் உயர்த்தப்படும்.
21. திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் மீஞ்சூர் - பொன்னேரி அருகே வெளிவட்டச் சாலை அமைக்கப்படும்.
22. செங்குன்றம் ஆரம்ப சுகாதார நிலையம் பொது மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும்.
23. செங்குன்றம் புறவழிச்சாலை சூழ 5 மாதவரம் நெடுஞ்சாலை சேருமிடத்தில் மேம்பாலம் அமைக்கப்படும்.
24. புழல் ஒன்றியத்தில் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
25. வில்லிவாக்கம் ஒன்றியம் அயப்பாக்கம் அருகிலிலுள்ள அஞ்சுகம் நகர் காயிதே மில்லத் நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வரும் மக்களுக்குப் பட்டா வழங்குவது குறித்துப் பரிசீலிக்கப்படும்.
26. மீஞ்சூர் இரயில்வே கேட்டில் ஒரு மேம்பாலம் அமைக்கப்படும்.
27. பொன்னேரி வட்டம் பூங்குலம் ஊராட்சி அருகில் சிரவக் கால்வாயில் பாலம் அமைக்கப்படும்.
28. பழவேற்காடு பசியாவரம் இடையே மேம்பாலம் அமைக்கப்படும்.
29. திருத்தணி கீழ் பஜாரில் அரசு மருத்துவமனைக்குச் செல்ல ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
30. பொன்னேரி பகுதியில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் கட்டப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT