Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம் கடந்த 2011ம் ஆண்டு சட்டப்பேரவை தொகுதி மறு சீரமைப்பின்போது,வெள்ளக்கோவில் தொகுதி, காங்கயம் சட்டமன்ற தொகுதியுடன் இணைக்கப்பட்டது.
இத்தொகுதியில், விவசாயம், அரிசி ஆலை, தேங்காய் எண்ணெய் ஆலை, தேங்காய் பருப்பு உலர் களம், கைத்தறி நெசவு, விசைத்தறி நெசவு ஆகியவை முக்கிய தொழிலாக உள்ளது. கீழ்பவானி பாசனம் மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனம் வாயிலாக விவசாயம் நடைபெறுகிறது. காங்கயத்தில் 700-க்கும் மேற்பட்ட தேங்காய் எண்ணெய் உற்பத்தி ஆலைகள் மற்றும் தேங்காய் பருப்பு உலர்களம், 300-க்கும் மேற்பட்ட அரிசி உற்பத்தி ஆலைகள் உள்ளது.
வெள்ளகோவில் பகுதியிலும் கணிசமான எண்ணிக்கையில் தேங்காய் உலர்களங்களும் 5,000-கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களும் உள்ளன. சென்னிமலை பகுதியில் 10,000-கும் மேற்பட்ட கைத்தறி கூடம், 300-க்கும் மேற்பட்ட கைத்தறி கூட்டுறவு சங்கம், 10,000-கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன. முக்கிய தொழில்களாக, கொப்பரை தேங்காய் மற்றும் தேங்காங் எண்ணெய் உற்பத்தி உள்ளது. தமிழகம் மட்டுமின்றி, வெளிமாநிலங்களிலும் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுகிறது.
இத்தொகுதியில், தேங்காய் எண்ணெய் தயாரிப்பு தொழிலில், தமிழக அரசு விதித்துள்ள 5 சதவீத வாட் வரி மற்றும் 1 சதவீத செஸ் வரியால் தேங்காய் பருப்பு மற்றும் தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழில் நசிவடைந்துள்ளது. இத்தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கைத்தறி மற்றும் விசைத்தறி தொழில் நலிவை தடுக்கவும், அதனை மேம்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கயம் மற்றும் வெள்ளகோவில் பகுதி கிராம பொருளாதாரத்தின் மிக முக்கிய அம்சமாக விளங்கும் கிராம சந்தைகளில் தேவையான அடிப்படை வசதிகளை செய்து வேண்டும். காங்கயத்தில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அல்லது சுற்றுச்சாலை அமைக்க வேண்டும். நகரின் விரிவாக்கப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். நகராட்சி நிர்வாகத்தை தரம் உயர்த்த வேண்டும் என்பதும் அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளது.
இதன் தற்போதைய சட்டப் பேரவை உறுப்பினராக என்.எஸ்.என்.நடராஜன்(அதிமுக) உள்ளார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | உ.தனியரசு | அதிமுக (கொங்கு இளைஞர் பேரவை) |
2 | பி.கோபி | காங்கிரஸ் |
3. | கே.ஜி.முத்துவேங்கடேஸ்வரன் | தேமுதிக |
4. | வ.அமிர்தவள்ளி | பாமக |
5. | மு.உஷாதேவி | பாஜக |
6. | வ.ப.சண்முகம் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
காங்கேயம் வட்டம்
பெருந்துறை வட்டம் (பகுதி)
முருங்கத்தொழுவு, புதுப்பாளையம், நஞ்சைப் பாலத்தொழுவு, புஞ்சைப் பாலத்தொழுவு, கொடுமணல், ஒரத்துப்பாளையம், எல்லை கிராமம்,எட்டக்காம்பாளையம், பசுவபட்டி மற்றும் குப்பிச்சி பாளையம் கிராமங்கள்.
முகாசி பிடாரியூர் (செசன்ஸ் டவுன்), ஒட்டப்பாறை (செசன்ஸ் டவுன்) மற்றும் சென்னிமலை (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,14,996 |
பெண் | 1,18,749 |
மூன்றாம் பாலினத்தவர் | 18 |
மொத்த வாக்காளர்கள் | 2,33,763 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1952 | ஏ. கே. சுப்பராய கவுண்டர் | காங்கிரஸ் | -- |
1957 | கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர் | காங்கிரஸ் | 17952 |
1962 | கே. எஸ். நடராச கவுண்டர் | காங்கிரஸ் | 41006 |
1967 | ஏ. எஸ் கவுண்டர் | காங்கிரஸ் | 24800 |
1971 | கோவை செழியன் | திமுக | 42461 |
1977 | ஆர். கே. எஸ் தண்டபாணி | அதிமுக | 31665 |
1980 | கே. ஜி. கிருஷ்ணசாமி | அதிமுக | 45950 |
1984 | கே. சி. பழனிசாமி | அதிமுக | 54252 |
1989 | பி. மாரப்பன் | அதிமுக (ஜெ) | 43834 |
1991 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 69050 |
1996 | என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார் | திமுக | 63801 |
2001 | எம். செல்வி | அதிமுக | 58700 |
2006 | எஸ். சேகர் | காங்கிரஸ் | 56946 |
2011 | என். எஸ்.என். நடராஜன். | அதிமுக | 96005 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1952 | -- | -- | -- |
1957 | பி. முத்துசாமி கவுண்டர் | சுயேச்சை | 10209 |
1962 | எம். பழனிசாமி கவுண்டர் | திமுக | 24711 |
1967 | வேலுசாமி | திமுக | 24654 |
1971 | கே. ஜி. பழனிசாமிக்கவுண்டர் | சுயேச்சை | 20419 |
1977 | எம். சிவசபாபதி | திமுக | 18498 |
1980 | எம். சிவசபாபதி | திமுக | 34341 |
1984 | எம். சிவசபாபதி | திமுக | 37495 |
1989 | ஆர். இரத்தினசாமி | திமுக | 36163 |
1991 | என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார் | திமுக | 35759 |
1996 | என். இராமசாமி | அதிமுக | 37792 |
2001 | என். எஸ். ராஜ்குமார் மன்றாடியார் | திமுக | 47426 |
2006 | என். எம். எஸ். பழனிசாமி | அதிமுக | 49650 |
2011 | விடியல் சேகர் | காங்கிரஸ் | 54240 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | சேகர்.S | காங்கிரஸ் | 56946 |
2 | பழனிசாமி.N.M.S | அதிமுக | 49650 |
3 | குமாரசாமி.P | தேமுதிக | 11354 |
4 | சுப்பிரமணியம்.K | ஐக்கிய ஜனதா தளம் | 1883 |
5 | ராஜேந்திரன்.P | சுயேச்சை | 1443 |
6 | பெருமாள்.K | பகுஜன் சமாஜ் கட்சி | 1081 |
7 | பழனிசாமி.K | சுயேச்சை | 665 |
8 | சேகர்.M | சுயேச்சை | 292 |
9 | காமாட்சிதேவி.S | சுயேச்சை | 245 |
123559 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | நடராஜன்.NSN | அதிமுக | 96005 |
2 | விடியல் சேகர்.S | காங்கிரஸ் | 54240 |
3 | பொன்னுசாமி.C | பாஜக | 1884 |
4 | ராஜமாணிக்கம். | சுயேச்சை | 1802 |
5 | பெரியசாமி.P.K | சுயேச்சை | 1165 |
6 | பெருமாள்.K | பகுஜன் சமாஜ் கட்சி | 1129 |
7 | கிருஷ்ணமூர்த்தி.V | சுயேச்சை | 525 |
8 | ராமசாமி.R | சுயேச்சை | 464 |
9 | செல்லமுத்து.P | சுயேச்சை | 427 |
10 | சுகுமாரன்.N | சுயேச்சை | 388 |
11 | மணி.M.R | சுயேச்சை | 309 |
158338 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT