Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM

113 - திருப்பூர் (வடக்கு)

திருப்பூர் வடக்கு சட்டப்பேரவை தொகுதி மறுசீரமைப்புக்கு பிறகு கடந்த 2011-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

இதில், திருப்பூர் வட்டம் சொக்கனூர், மேற்குபதி, தொரவலூர், பட்டம்பாளையம், பெருமாநல்லூர், வள்ளிபுரம், ஈட்டிவீராம்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், மண்ணரை ஆகிய கிராமப்பகுதிகளும் செட்டிபாளையம், நெரிப்பெரிச்சல், தொட்டிபாளையம், 15 வேலம்பாளையம் என நகர்ப்புறப்பகுதிகளும் வடக்கு சட்டப்பேரவைக்குள் வருகின்றன.

தொகுதியில், திருப்பூர் மாநகராட்சியின் 29 வார்டுகள் இடம்பெற்றுள்ளன. காந்திநகர், அனுப்பர்பாளையம், பெரியார் காலனி, குமார் நகர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கிய மாவட்டத்தின் பெரியதொகுதி ஆகும். அதிகளவில் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. தொகுதியில், பிரதானத் தொழிலாக பின்னலாடை உற்பத்தி மற்றும் விவசாயம் உள்ளது. கொங்கு வேளாளர், முதலியார் மற்றும் சிறுபான்மையின மக்கள் இத்தொகுதியில் அதிகம் வசிக்கின்றனர். தொகுதிக்குள், நலத்திட்டங்கள் தாண்டிய வளர்ச்சிப்பணிகளில் ஆதரவு மற்றும் எதிர்ப்பு என இருவேறு கருத்துக்கள் உள்ளன.

திருப்பூர் மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. கலை, அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று, தேர்தல் நேரத்தில் அறிவிக்கப்பட்டது. 4-வது குடிநீர்த்திட்டம் நிறைவேற்றப்படவில்லை. பெருமாநல்லூர் பகுதியில் கூடுதலாக பேருந்து நிலையம் அமைக்கவில்லை. மாநகராட்சியுடன் புதிதாக இணைந்த ஊராட்சிப் பகுதிகளில், துப்புரவுப்பணியாளர்கள் சரிவர நியமிக்கப்படவில்லை. இதனால், சுகாதாரப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது போன்ற புகார்கள் தொகுதியில் நிறைய உள்ளது..

செட்டிபாளையம் பகுதியில் பின்னலாடைத் தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, இ.எஸ்.ஐ., மருத்துவமனை மற்றும் வடக்கு பகுதிக்கென தனியாக அரசு மருத்துவமனை அமைக்க வேண்டும். நகரப்பகுதிகளில், மேட்டுப்பாளையம் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தப்பட வேண்டும். பின்னலாடைத் தொழில் துறையினர் சார்பில், வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதிகள், மகளிர் தங்கும் விடுதிகள் அமைத்து கொடுக்கப்பட வேண்டும். பாதாள சாக்கடை திட்டம், ஊத்துக்குளி சாலை, கொங்கு பிரதான சாலையில் போக்குவரத்து சீரமைப்பு, தேங்கிக் கிடக்கும் மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதெல்லாம் நீண்ட நாள் மக்கள் கோரிக்கை. 2011ல் தமிழக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வெற்றி பெற்ற தொகுதி.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

க.நா. விஜயகுமார்

அதிமுக

2

மு.பெ.சாமிநாதன்

திமுக

3

எம்.சுப்பிரமணியம் (எ) ரவி

இந்தி கம்யூ

4

எம்.சுப்பிரமணியம்

பாமக

5

ரா.சின்னச்சாமி

பாஜக

6

ப. சிவக்குமார்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருப்பூர் தாலுகா (பகுதி) பட்டம்பாளையம், சொக்கனூர், மேற்குபதி, தொரவலூர், வள்ளிபுரம், பெருமாநல்லூர், எட்டிவீராம்பாளையம், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், காளிபாளையம், மற்றும் மண்ணரை கிராமங்கள்,

செட்டிபாளையம் (சென்சஸ் டவுன்), நெரிப்பெரிச்சல் (சென்சஸ் டவுன்), தொட்டிபாளையம் (சென்சஸ் டவுன்) மற்றும் வேலம்பாளையம் (பேரூராட்சி), திருப்பூர் (மாநகராட்சி) வார்டு எண். 1 முதல் 20 வரை

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:



ஆண்

1,70,178

பெண்

1,59,575

மூன்றாம் பாலினத்தவர்

80

மொத்த வாக்காளர்கள்

3,29,833

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

அனந்தன்.M.S.M

அதிமுக

113640

2

கோவிந்தசாமி.C

திமுக

40369

3

பார்த்திபன்.A

பாஜக

3009

4

கிருஷ்ணசாமி.P

சுயேச்சை

1595

5

முருகேசன்.D

சுயேச்சை

847

6

செந்தில்குமார்.S

பகுஜன் சமாஜ் கட்சி

366

7

சிவகுமார்.K.R

சுயேச்சை

349

8

சந்திரசேகர்.P

லோக் சட்ட கட்சி

342

9

சக்திவேல்.P

சுயேச்சை

213

10

சக்திவேல்.C

சுயேச்சை

177

160907

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x