Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 8 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்று தாராபுரம் (தனி) தொகுதி. திருப்பூர் மாவட்டத்தில் 2-வது தனித்தொகுதி.
இத்தொகுதி, தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டு 56 ஆண்டு கடந்துவிட்டது. விவசாயத்தை மட்டுமே முக்கிய தொழிலாக கொண்டது இப்பகுதி. அதிக அளவில் ஆடு,மாடு உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு மற்றும் கறி கோழி உற்பத்தி தொழில் பல குடும்பங்களை வாழவைக்கிறது. அமராவதி ஆற்றுப் பாசனம் மூலம் பல ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது.
படித்த இளைஞர்கள் இத்தொகுதியை விட்டு வெளியேறி, திருப்பூர் பனியன் நிறுவனங்களை நோக்கி கொத்துக் கொத்தாக செல்கின்றனர். இத்தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் தொழிற்சாலை வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது. அமராவதி அணை தூர் வாரப்படாததால் பாசன நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆண்டுக்கு 2 போக நெல், கரும்பு சாகுபடி நடந்து வந்த இத்தொகுதியில, ஒரு போக விளைச்சலே அரிதாகி விட்டது. விளைநிலங்கள் எல்லாம் வீட்டுமனையாக மாறிவிட்டது.
தொகுதி முழுவதும் நிலவும் குடிநீர் பிரச்சனைகள் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. மாணவ, மாணவிகள் பள்ளிப்படிப்புக்கு பிறகு, உயர்கல்வி கற்க வெளியூர் சென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர். தாராபுரத்தில் ஒரு அரசு கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்ட கால கோரிக்கையாக உள்ளது.
கொளத்துப்பாளையத்தில் மூடப்பட்டுள்ள ஈரோடு மாவட்ட கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் திறக்க வேண்டும். நவீன நூற்பு இயந்திரங்களை நிறுவி மீண்டும் இயக்க வேண்டும். இந்த ஆலையில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்கள் வீணாக துருப்பிடித்து கிடக்கிறது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜெனரேட்டர்கள் உள்ளிட்ட பல இயந்திரங்கள் திருட்டு போய்விட்டன. ஆலையை உடனே இயக்க வேண்டும் என்பதும் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
மூலனூர் பகுதியில் முருங்கைக்காய் விளைச்சல் அதிகம். இவை, வளைகுடா நாடுகள் வரையிலும் புகழ்பெற்றது. முருங்கை அதிகமாக விளையும் காலத்தில் இவற்றை பக்குவப்படுத்தி, பவுடர் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழில்சாலை அமைக்க வேண்டும். காய்கறிகள் நியாயமான விலை கிடைக்கும் வரை அவற்றை பாதுகாக்க மூலனூர், தாராபுரம், குண்டடம் பகுதிகளில் அரசின் பங்களிப்புடன் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்.
இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் தாராபுரம், மூலனூர், குண்டடம் பகுதிகளில் புதிய தொழிற்சாலை அமைக்க வேண்டும். . மூலனூர் தனி தாலுகாவாக மாற்றப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
2011-ல் அதிமுக பொன்னுசாமி வெற்றி பெற்றார். 1966 முதல் 11 சட்டப்பேரவை தேர்தல்களை சந்தித்துள்ளது தாராபுரம் தொகுதி. அதில் திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக-வில் வெற்றி பெற்ற அனைவரும் ஆண்களாகவும், திமுக-வில் வெற்றி பெற்றவர்கள் பெண்களாகவும் உள்ளனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | கே.பொன்னுசாமி | அதிமுக |
2 | வி.எஸ்,காளிமுத்து | திமுக |
3 | நாகை.திருவள்ளுவன் | மதிமுக |
4 | கி.மாதவன் | பாமக |
5. | மா.சண்முகம் | பாஜக |
6. | இரா.பிச்சைமுத்து | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
தாராபுரம் வட்டம்
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,17,556 |
பெண் | 1,20,454 |
மூன்றாம் பாலினத்தவர் | 6 |
மொத்த வாக்காளர்கள் | 2,38,016 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1951 | சேனாபதி கவுண்டர் | சுயேச்சை | 17085 |
1957 | எ. சேனாபதி கவுண்டர் | காங்கிரஸ் | 26164 |
1962 | பார்வதி அர்ச்சுனன் | காங்கிரஸ் | 37842 |
1967 | பழனியம்மாள் | திமுக | 42433 |
1971 | பழனியம்மாள் | திமுக | 40947 |
1977 | ஆர். அய்யாசாமி | அதிமுக | 18884 |
1980 | எ. பெரியசாமி | அதிமுக | 43319 |
1984 | எ. பெரியசாமி | அதிமுக | 51919 |
1989 | டி. சாந்தகுமாரி | திமுக | 34069 |
1991 | பி. ஈசுவரமூர்த்தி | அதிமுக | 66490 |
1996 | ஆர். சரசுவதி | திமுக | 62027 |
2001 | வி. சிவகாமி | பாமக | 56835 |
2006 | பி. பார்வதி | திமுக | 55312 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1951 | நடராஜ கவுண்டர் | காங்கிரஸ் | 13683 |
1957 | பி. எஸ். கோவிந்தசாமி கவுண்டர் | சுயேச்சை | 25555 |
1962 | எ. ஆர். சுப்ரமணியன் | திமுக | 18059 |
1967 | பி. வேலுச்சாமி | காங்கிரஸ் | 21800 |
1971 | வி. என். கோபால் | காங்கிரஸ் (ஸ்தாபன) | 21597 |
1977 | எ. கே. சிவலிங்கம் | காங்கிரஸ் | 16202 |
1980 | வி. பி. பழனியம்மாள் | திமுக | 32887 |
1984 | ஆர். அய்யாசாமி | திமுக | 35951 |
1989 | எ. பெரியசாமி | அதிமுக (ஜெ) | 32633 |
1991 | டி. சாந்தகுமாரி | திமுக | 28545 |
1996 | பி. ஈசுவரமூர்த்தி | அதிமுக | 38989 |
2001 | ஆர். சரசுவதி | திமுக | 34683 |
2006 | எம். இரங்கநாயகி | அதிமுக | 50600 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | பொன்னுசாமி.K | அதிமுக | 83856 |
2 | ஜெயந்தி.R | திமுக | 68831 |
3 | கருணாகரன்.P | பாஜக | 3353 |
4 | ராஜேஷ்.R | சுயேச்சை | 2882 |
5 | ஆறுமுகம்.S | பகுஜன் சமாஜ் கட்சி | 1378 |
6 | சுந்தரராசு.A | சுயேச்சை | 1159 |
7 | துரைசாமி.D | சுயேச்சை | 789 |
162248 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT