Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
திருப்பூர் தெற்கு தொகுதி. இது 2011ல் திருப்பூர் தொகுதி மறுசீரமைப்புக்கு பின் உதயமானது.
திருப்பூர் மாநகராட்சியின் 21 வார்டுகள், திருப்பூர் புறநகர் பகுதிகள், திருப்பூர் தெற்கு சட்டப்பேரவை தொகுதிக்குள் தான் வருகிறது. மாவட்டத்தின் மையப்பகுதியாக அமைந்துள்ள தொகுதியும் இது ஆகும். பனியன் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் அதை சார்ந்த தொழில்கள் பிரதானமாக உள்ளன. திருப்பூர் பழைய பேருந்து நிலையம் , மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, வட்டாட்சியர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கல்லூரிகள், பெருமாள் கோயில் என தொகுதியில் முக்கியப்பகுதிகள் உள்ளன.
கொங்கு வேளாளர் அதிகளவில் வசிக்கின்றனர். முதலியார், செட்டியார், ஆதிதிராவிடர்கள், இஸ்லாமியர், கிறிஸ்துவ சமூகத்தை சேர்ந்தவர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். தென்மாவட்டங்களில் இருந்து வந்த ஏராளமானோர், தங்கி வேலை செய்யும் பகுதி, திருப்பூர் தெற்கு தொகுதியாகும். அதில், 60 சதவீதத்தினருக்கும் அதிகமானோருக்கு வாக்குரிமையும் உள்ளது.
தெற்கு தொகுதியில் பழைய பேருந்து நிலையம், பல்லடம், தாராபுரம் சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும்விதமாக, பறக்கும் மேம்பாலம் அமைக்கும்பணிகளும், மெதுவாக நடைபெறுகிறது. நகரின் உட்கட்டமைப்பு, முறையான குடிநீர் விநியோகம், சுகாதாரம், கொசு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு அடிப்படைப் பிரச்சினைகள், பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருப்பது தொகுதிவாசிகளை கவலையடைய வைத்துள்ளது. இவைகளை களைய வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
பாதாள சாக்கடைத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. போக்குவரத்துக்கு ஏற்ப சாலை வசதிகள் மேம்படுத்தப்படவில்லை, சாலைகளில் அடிக்கடி ஏற்படும் குண்டும் குழிகளை செப்பனிடாமல் இருப்பது. மழைகாலங்களில் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகும் அளவிற்கு, படுமோசமான நகர கட்டமைப்பு. இவற்றால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். தொகுதிக்குள் தான் வருகிறது.
தொகுதி உருவானதற்கு பின்பு நடந்த கடந்த சட்டப்பேரவை தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, வெற்றி கண்டது. இத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கே.தங்கவேல்(மா.கம்யூனிஸ்ட்) உள்ளார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | சு.குணசேகரன் | அதிமுக |
2 | க.செல்வராஜ் | திமுக |
3 | கே.தங்கவேல் | மார்க்சிஸ்ட் |
4 | என். பாயிண்ட் மணி | பாஜக |
5 | எஸ். மன்சூர் உசேன் | பாமக |
6 | க. சண்முகசுந்தரம் | நாம் தமிழர் |
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,26,626 |
பெண் | 1,20,990 |
மூன்றாம் பாலினத்தவர் | 27 |
மொத்த வாக்காளர்கள் | 2,47,643 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
• திருப்பூர் (மாநகராட்சி) வார்டு எண். 21 முதல் 52 வரை
• எஸ். நல்லூர் (நகராட்சி
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | தங்கவேலு.K | மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி | 75424 |
2 | செந்தில்குமார்.K | காங்கிரஸ் | 37121 |
3 | பாயின்ட் மணி.N | பாஜக | 4397 |
4 | முஹமத் அமானுல்லாஹ்.M | எஸ்டிபிஐ | 2645 |
5 | மஸ்வூத்.L.M | சுயேச்சை | 944 |
6 | பொன்னுசாமி.R | சுயேச்சை | 415 |
7 | பழனிசாமி.M.N | சுயேச்சை | 362 |
8 | சிவானந்தம்.K.R | இந்திய ஜனநாயக கட்சி | 361 |
9 | விக்டர்மனோவா. L | பகுஜன் சமாஜ் கட்சி | 227 |
10 | அஹ்மத் முஸ்தபா.M | சுயேச்சை | 215 |
11 | கிருஷ்ணசாமி.P | சுயேச்சை | 135 |
12 | சுரேஷ்குமார்.G | சுயேச்சை | 129 |
122375 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT