Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது உடுமலைப்பேட்டை தொகுதி. கடந்த 1952-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
2011-ல் மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறு சீரமைப்பின் போது, உடுமலை நகரம், தாராபுரம் தொகுதியில் முன்பிருந்த குடிமங்கலம் ஒன்றியம், பொள்ளாச்சி தொகுதியில் முன்பிருந்த தெற்கு ஒன்றியம், வடக்கு ஒன்றியம் ஆகிய பகுதிகள் இத்தொகுதியில் இணைந்துவிட்டன.
இத்தொகுதியில், கோவை மாவட்டத்தை சேர்ந்த பொள்ளாச்சி வடக்கு, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியங்களும், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த உடுமலை நகரம், உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய கோட்டை, சின்னவீரம்பட்டி, குறுஞ்சேரி ஊராட்சி பகுதிகளும், குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியமும் இணைந்துள்ளது.
தொகுதி மறுசீரமைப்புக்கு முன்பு, உடுமலை நகரம், ஒன்றியம், மடத்துக்குளம் ஒன்றியம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியிருந்தது குறிபிடத்தக்கது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உரிமையியல் நீதிமன்றம், அரசு கலைக் கல்லூரி, ஓரிரு தனியார் கலை அறிவியல் கல்லூரிகளை கொண்டுள்ளது. அண்மையில் தொடங்கப்பட்ட அரசு ஐடிஐ குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளில் நகரைச் சுற்றிலும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இத்தொகுதியில், கொங்குவேளாளர் கவுண்டர், நாயுடு சமூகத்தினர், ஆதிதிராவிடர்கள் அதிகளவில் உள்ளனர். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களும் கணிசமான எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்.
கறிக்கோழி வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இத்தொகுதியில் தொடங்கப்பட்ட தனியார் கறிக்கோழி உற்பத்தி நிறுவனம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இத்தொகுதியின் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த உடுமலை நகராட்சியில் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சனைகள் ஏராளமாக உள்ளன.
அதில் முக்கியமாக உடுமலை மத்திய பேருந்து நிலைய விரிவாக்கம், தினசரி சந்தை, வாரச்சந்தை மேம்பாடு, அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும். இணைப்புச் சாலைகள் ஏற்படுத்த வேண்டும். நகரின் விரிவாக்க பகுதிகளுக்கு மினி பஸ் சேவை, தேவையான இடங்களில் சுரங்க நடைபாதைகள் அமைக்க வேண்டும். கல்வி வளர்ச்சிக்காக அரசு பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும். உடுமலையை கல்வி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். நலிவுற்ற பஞ்சாலைகளை செயல்படுத்த வேண்டும். நவீன வேளாண்மை மூலம் தரம் உயர்த்த வேண்டும். தக்காளி, மக்காச்சோளம் அதிக அளவில் விலைவதால் அவற்றில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள் தயாரிக்க தேவையான தொழிற்சாலைகள் அமைக்க வேண்டும் என்பது மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
1952-முதல் 2011 வரை நடைபெற்ற 14 சட்டப்பேரவை தேர்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது. இத்தொகுதியில், போட்டியிட்ட சாதிக்பாட்சா (திமுக), குழந்தைவேலு (அதிமுக), சண்முகவேலு (அதிமுக) ஆகியோர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தனர்.
தற்போதைய எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக உள்ளார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | கே.ராதாகிருஷ்ணன் | அதிமுக |
2 | மு.க.முத்து | திமுக |
3 | செ.கணேஷ்குமார் | தேமுதிக |
4 | பெ.துரைசாமி | பாமக |
5 | யு.கே.பி.என்.கந்தசாமி | பாஜக |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
உடுமலைப்பேட்டை வட்டம் (பகுதி)
கொசவம்பாளையம், மூங்கில்தொழுவு, அமந்தக்கடவு, குப்பம்பாளையம், பெரியபட்டி, பூலவாடி, ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி, குடிமங்கலம், இலுப்பநகரம், அனிக்கடவு, வாகத்தொழுவு, வீடம்பட்டி, விருகல்பட்டி, சோமவாரப்பட்டி, வடுகபாளையம், கோட்டமங்கலம், பொன்னேரி, புக்குளம், தொட்டம்பட்டி, கொங்கல்நகரம், புதுப்பாளையம், பண்ணைக்கிணர், குருஞ்சேரி, சின்னவீரம்பட்டி, பெரியகோட்டை,
உடுமலைபேட்டை (நகராட்சி)
பொள்ளாச்சி வட்டம் (பகுதி)
சோளபாளையம், நல்லம்பள்ளி, சீலக்காம்பட்டி, கோமங்கலம், எஸ்.மலையாண்டிபட்டினம், கோலார்பட்டி, கஞ்சம்பட்டி, தென்குமாரபாளையம், கூலநாய்க்கன்பட்டி, கோமங்கலம்புதூர், சிஞ்சுவாடி, விரல்பட்டி, தாளவாய்ப்பாளையம், தொண்டாமுத்தூர், எஸ்.பொன்னாபுரம், ஊஞ்சவேலாம்பட்டி, ஜாமீன்கோட்டம்பட்டி, கள்ளிப்பட்டி,கொண்டகவுண்டன்பாளையம், மூலனூர், ஆவலப்பம்பட்டி, கொல்லம்பட்டி, ஏ.நாகூர், பூசாரிப்பட்டி, போலிகவுண்டன்பாளையம், ஏரிப்பட்டி, திப்பம்பட்டி, மக்கிளம்பட்டி, நாட்டுக்கல்பாளையம் மற்றும் பழையூர் கிராமங்கள்.
ஜமீன் ஊத்துக்குளி (பேரூராட்சி), சின்னம்பாளையம் (சென்சஸ் டவுன்), குளேஸ்வரன்பட்டி (பேரூராட்சி) மற்றும் சமத்தூர் (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,21,445 |
பெண் | 1,27,150 |
மூன்றாம் பாலினத்தவர் | 20 |
மொத்த வாக்காளர்கள் | 2,48,615 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1951 | மௌனகுருசாமி நாயுடு | காங்கிரஸ் | 19866 |
1957 | எஸ். டி. சுப்பையா கவுண்டர் | சுயேச்சை | 18621 |
1962 | ஆர். இராஜகோபாலசாமி நாய்க்கர் | காங்கிரஸ் | 29529 |
1967 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 39796 |
1971 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 45369 |
1977 | பி. குழந்தைவேலு | அதிமுக | 28737 |
1980 | பி. குழந்தைவேலு | அதிமுக | 50570 |
1984 | எசு. திருமலைசாமி கவுண்டர் | காங்கிரஸ் | 56004 |
1989 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 55089 |
1991 | கே. பி. மணிவாசகம் | அதிமுக | 75262 |
1996 | டி. செல்வராசு | திமுக | 69286 |
2001 | சி. சண்முகவேலு | அதிமுக | 78938 |
2006 | சி. சண்முகவேலு | அதிமுக | 66178 |
2011 | பொள்ளாச்சி ஜெயராமன் | அதிமுக | 95477 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1951 | தங்கவேலு | இந்திய பொதுவுடமைக் கட்சி | 10574 |
1957 | மௌனகுருசாமி நாயுடு | காங்கிரஸ் | 14903 |
1962 | எஸ். ஜே. சாதிக்பாட்சா | திமுக | 25514 |
1967 | கே. இராமசாமி | காங்கிரஸ் | 25778 |
1971 | டி. மலையப்ப கவுண்டர் | சுயேச்சை | 25887 |
1977 | யு. கே. பி. நடராசன் | ஜனதா கட்சி | 24619 |
1980 | ஆர். டி. மாரியப்பன் | திமுக | 46049 |
1984 | ஆர். டி. மாரியப்பன் | திமுக | 46526 |
1989 | பி. குழந்தைவேலு | அதிமுக (ஜெ) | 46684 |
1991 | ஆர். டி. மாரியப்பன் | திமுக | 44990 |
1996 | சி. சண்முகவேலு | அதிமுக | 44966 |
2001 | டி. செல்வராசு | திமுக | 39030 |
2006 | சி. வேலுச்சாமி | திமுக | 62715 |
2011 | இளம்பரிதி | கொநாமுக | 50424 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | சண்முகவேலு.C | அதிமுக | 66178 |
2 | வேலுச்சாமி.C | திமுக | 62715 |
3 | ஞானசம்பந்தம்.G.R | தேமுதிக | 9153 |
4 | கதிர்வேல்.K | சுயேச்சை | 1207 |
5 | கார்த்திகேயன்.M.K | பாஜக | 1179 |
6 | வாஞ்சிமுத்து.N | சுயேச்சை | 871 |
7 | ராமகனபதி..K | பகுஜன் சமாஜ் கட்சி | 812 |
8 | கருப்பசாமி.K | சுயேச்சை | 587 |
9 | அய்யப்பன்.K | சுயேச்சை | 308 |
10 | அறிவுடைநம்பி.V | சுயேச்சை | 297 |
11 | குருசாமி..M | சுயேச்சை | 286 |
143593 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | பொள்ளாச்சி ஜெயராமன்.V | அதிமுக | 95477 |
2 | இளம்பரிதி.T | கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் | 50917 |
3 | விஸ்வநாதன்.M | பாஜக | 3817 |
4 | வெங்கடாசலம்.M | சுயேச்சை | 2403 |
5 | ஜெயராமன்.K | சுயேச்சை | 1870 |
6 | மோகன்ராஜ்.R.S | சுயேச்சை | 1496 |
7 | வேலுசாமி.P | பகுஜன் சமாஜ் கட்சி | 865 |
156845 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT