Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 05 Apr 2016 04:09 PM
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள 10 சட்டப் பேரவை தொகுதிகளில் திருநெல்வேலி தொகுதியும் ஒன்று. திருநெல்வேலி மாநகராட்சியிலுள்ள 55 வார்டுகளில் 40 முதல் 55-வது வார்டுகளும், 1 முதல் 4 வார்டுகளும் இத் தொகுதியில் இணைந்துள்ளன. இதுபோல் சங்கர்நகர், நாரணம்மாள்புரம் பேரூராட்சிகளும் சுற்றியுள்ள 58 ஊராட்சிகளையும் உள்ளடக்கி பரந்துவிரிந்திருக்கிறது.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
பொதிகை மலையில் உற்பத்தியாகி 124 கி.மீ. தொலைவுக்கு ஓடிவரும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணியும், அதனால் வளம்பெறும் நெல் விளையும் பூமியும் திருநெல்வேலியில் முக்கிய அடையாளங்கள். நெல்லையப்பர் கோயில் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், அரசு கால்நடை மருத்துவ கல்லூரி, பழமை வாய்ந்த பேட்டை மதிதா இந்துக் கல்லூரி போன்ற பல்வேறு கல்வி நிலையங்களையும் இத் தொகுதி தன்னகத்தே கொண்டுள்ளது.
இத் தொகுதியில் இந்து மதத்தை சேர்ந்த வாக்காளர்கள் அதிகம். பேட்டை பகுதியில் முஸ்லிம் வாக்காளர்கள் கணிசமாக உள்ளனர். இத் தொகுதியில் பிள்ளைமார் சமுதாயத்தினர் அதிகமாகவும், அடுத்து தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினரும், தேவர், யாதவா சமுதாயத்தினர் அடுத்த நிலையிலும் அதிக வாக்காளர்களாக இருக்கிறார்கள்.
திருநெல்வேலிக்குள் நுழையும்போதுதான் தாமிரபரணி பெருமளவில் மாசடைகிறது. மாசுபாடு ஒருபுறம் இருக்க ஆற்றுத்தண்ணீரை பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு தாரை வார்க்கப்படுவதும் முக்கிய பிரச்சினையாக இருக்கிறது. திருநெல்வேலி மாநகராட்சியிலிருந்து கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் தேங்கி ராமையன்பட்டி பகுதி மக்களை சொல்லொணா துயரத்துக்கு ஆள்படுத்தியிருக்கிறது. திருநெல்வேலி மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. திருநெல்வேலி பேட்டையில் தென்னிந்திய கூட்டுறவு நூற்பாலை கடந்த 1958-ல் தொடங்கப்பட்டு 2004-ம் ஆண்டுவரை செயல்பட்டது. லாபத்தில் இயங்கிவந்த இந்த நூற்பாலையை திடீரென மூடியதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்தனர். ஒவ்வொரு தேர்தலின்போதும் இதை திறப்பதாக வாக்குறுதி மட்டுமே அளிக்கப்பட்டு வருகிறது. கங்கைகொண்டானில் அமைக்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டையில் பல்வேறு தொழிற்சாலைகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும்.
இத் தொகுதியில் 1952 முத் 2011 வரை நடைபெற்ற 14 சட்டப் பேரவை தேர்தல்களில் 3 முறை காங்கிரஸ், 5 முறை திமுக, 6 முறை திமுக வேட்பாளர்கள் வெற்றிபெற்று எம்.எல்.ஏக்களாகியிருக்கிறார்கள். 2006-ம் ஆண்டு தேர்தலில் திமுக உறுப்பினர் என். மாலைராஜாவும், 2011 தேர்தலில் அதிமுக உறுப்பினர் நயினார் நாகேந்திரனும் வெற்றி பெற்றிருந்தனர்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருநெல்வேலி தாலுகா (பகுதி)
உக்கிரன்கோட்டை, வாகைகுளம், அழகியபாண்டியபுரம், கட்டாரங்குளம், செலியநல்லூர், பிராஞ்சேரி, சித்தார் சத்திரம், கங்கைகொண்டான், பிள்ளையார்குளம், கானார்பட்டி, எட்டான்குளம், களக்குடி, குறிச்சிகுளம், தெற்குப்பட்டி, மானூர், பல்லிக்கோட்டை, தாழையூத்து, தென்களம், நாஞ்சான்குளம், மாவடி, மாதவக்குறிச்சி, உகந்தான்பட்டி, புதூர், கருவநல்லூர், சீதபற்பநல்லூர், வல்லவன்கோட்டை, துலுக்கர்பட்டி, சேதுராயன்புதூர், பாலாமடை, அலங்காரப்பேரி, பதினாலாம்பேரி, குப்பகுறிச்சி, கட்டளை உதயனேரி, காட்டாம்புளி, உதயனேரி, கல்குறிச்சி, ராஜவல்லிபுரம், வேப்பங்குளம், ராமையன்பட்டி, அபிசேகப்பட்டி, சிறுக்கன்குறிச்சி, வெட்டுவான்குளம், வேளார்குளம், சிவனியார்குளம், துலுக்கர்குளம், திருப்பணிகரிசல்குளம், துவராசி, வடுகன்பட்டி, சங்கந்திரடு, மேலகல்லூர், கோடகநல்லூர், பழவூர், கொண்டாநகரம்,சுத்தமல்லி, கருங்காடு, நரசிங்கநல்லூர், பேட்டை மற்றும் தென்பத்து கிராமங்கள்.
சங்கர்நகர் (பேரூராட்சி) மற்றும் நாரணம்மாள்புரம் (பேரூராட்சி),
திருநெல்வேலி (மாநகராட்சி) வார்டு எண்-1 முதல் 4 வரை மற்றும் 40 முதல் 55 வரை.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,32,183 |
பெண் | 1,36,579 |
மூன்றாம் பாலினத்தவர் | 20 |
மொத்த வாக்காளர்கள் | 2,68,782 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
2011 | நயினார் நாகேந்திரன் | அதிமுக | |
2006 | N.மாலை ராஜா | திமுக | 45.85 |
2001 | நயினார் நாகேந்திரன் | அதிமுக | 40.93 |
1996 | A.L.சுப்பிரமணியன் | திமுக | 52.48 |
1991 | D.வேலய்யா | அதிமுக | 62.81 |
1989 | A.L.சுப்பிரமணியன் | திமுக | 35.55 |
1986 இடைத்தேர்தல் | இராம. வீரப்பன் | அதிமுக | 59.57 |
1984 | S.நாராயணன் | அதிமுக | 59.57 |
1980 | இரா. நெடுஞ்செழியன் | அதிமுக | 57.96 |
1977 | G.R.எட்மண்ட் | அதிமுக | 38.5 |
1971 | பி.பத்மநாபன் | திமுக | |
1967 | ஏ.எல்.சுபிரமணியன் | திமுக | |
1962 | ராஜாத்தி குஞ்சிதபாதம் | காங்கிரஸ் | |
1957 | ராஜாத்தி குஞ்சிதபாதம் | காங்கிரஸ் | |
மற்றும் சோமசுந்தரம் | |||
1952 | ஆறுமுகம் மற்றும் | காங்கிரஸ் | |
எஸ். என். சோமையாஜுலு |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | N. மாலை ராஜா | தி.மு.க | 65517 |
2 | நைனார் நாகேந்திரன் | அ.தி.மு.க | 64911 |
3 | S. ஜெயச்சந்திரன் | சுயேச்சை | 4080 |
4 | S. நம்பிராஜன் | பார்வர்டு பிளாக் | 2709 |
5 | K.M. சிவகுமார் | பாஜக | 2257 |
6 | A. ஜெயக்குமார் | பி.எஸ்.பி | 1406 |
7 | A. வேலு | சுயேச்சை | 565 |
8 | ராஜி யாதவ் | சுயேச்சை | 525 |
9 | T. ராஜமாணிக்கம் | சி.பி.ஐ | 444 |
10 | S. செல்லதுரை | எஸ்.பி | 178 |
11 | M. சங்கர்குமார் | சுயேச்சை | 135 |
12 | S. கணேசன் | சுயேச்சை | 99 |
13 | E. இன்பராஜ் | சுயேச்சை | 82 |
142908 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | நைனார் நாகேந்தரன் | அ.தி.மு.க | 86220 |
2 | A.L.S.லட்சுமணன் | தி.மு.க | 47729 |
3 | G.வேலம்மாள் | ஜே.எம்.எம் | 7771 |
4 | C.பசுபதிபாண்டியன் | சுயேச்சை | 4307 |
5 | S.மதன் | ஐ.ஜே.கே | 2696 |
6 | G.முருகதாஸ் | பி.ஜே.பி | 1815 |
7 | M. சுப்பரமணியன் | சுயேச்சை | 1200 |
8 | P. ராமகிருஷ்ணன் | சுயேச்சை | 975 |
9 | K. வேதாந்தன் | சுயேச்சை | 969 |
10 | C. மாடசாமி | சுயேச்சை | 814 |
11 | T.தேவேந்தரன் | பி.எஸ்பி | 732 |
12 | S.தேன்மொழி | சி.பி.ஐ | 695 |
13 | K. பூல்பாண்டியன் | சுயேச்சை | 495 |
14 | S. சரவணன் | சுயேச்சை | 367 |
15 | M. சுரேஷ்குமார் | சுயேச்சை | 208 |
16 | M. ஆண்டணி பாஸ்கர் | சுயேச்சை | 169 |
17 | R. கொம்பையா | சுயேச்சை | 142 |
157304 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT