Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 05 Apr 2016 04:09 PM
பாளையங்கோட்டை தாலுகா மற்றும் நாங்குநேரி தாலுகா ஆகிய இரு தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளை உள்ளடக்கியது. மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள களக்காடு ஒன்றிம் செழுமையான விவசாய நிலபரப்பை கொண்டது. களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு அணைக்கட்டுகள் இத் தொகுதியில் உள்ளன. நாட்டிலேயே ராணுவ தகவல் தொடர்புக்கான மிகப்பெரிய கடற்படை தளமான ஐஎன்எஸ் கட்டபொம்மன் கடற்படை தளம், நாட்டிலேயே முதன்முதலாக தொடங்கப்பட்ட நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலம், கூந்தன்குளம் பறவைகள் சரணாலம் ஆகியவை இத் தொகுதியில் உள்ளன.
இந்துக்கள் அதிகம் வசிக்கும் இத் தொகுதியில் தேவர் சமுதாயத்தினரும், அடுத்ததாக நாடார் சமுதாயத்தினரும் அதிகம் வசிக்கிறார்கள். இத் தொகுதியில் இருக்கும் ஏர்வாடி, களக்காடு பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமுள்ளனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
பல கிராமங்களை உள்ளடக்கிய இத் தொகுதியில் பல இளைஞர்கள் வேலைவாய்ப்புக்காக எந்தவித தொழிற்சாலைகளும் இல்லாததால் இங்கிருந்து மும்பை, சென்னை, கோவைக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முக்கிய நகராக இருந்த நாங்குநேரியில் கருவூலம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை என்று அனைத்தும் இருந்தன. தற்போது திருநெல்வேலி- கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலை புறவழிச்சாலையாக அமைந்துள்ளதால் ஊருக்குள் பேருந்துகள் வராமல் சென்றுவருகின்றன. களக்காடு, திருக்குறுங்குடி, சிறுமளஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஏத்தன் வாழை விவசாயம் நடைபெறுகிறது. வாழைக்கால் விலைவீழ்ச்சி ஏற்படுவதால் இப்பகுதியில் வாழைத்தார்களை சேமித்து வைப்பதற்கு குளிர்பதன கிட்டங்கி அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. நாங்குநேரி பொருளாதார சிறப்பு மண்டலம் முடங்கியிருக்கிறது. இதை முழுஅளவில் செயல்படுத்த அரசுகள் முன்வரவில்லை. தாமிரபரணி- கருமேனியாறு- நம்பியாறு நதிநீர் இணைப்பு வெள்ளநீர் கால்வாய் திட்டம் பாதியில் நிற்கிறது. களக்காடு சுற்றுவட்டார பகுதியில் களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம், திருக்குறுங்குடி மலை நம்பி கோயில், களக்காடு தலையணை, செங்கல்தேரி, தேங்காய் உருளி அருவி என்று அழகிய நீரோடைகளும், நாங்குநேரி வானுமாலமலை பெருமாள் திருக்கோயில், திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில், கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் என்று பல்வேறு சுற்றுலா தலங்கள் இருப்பதால், இப்பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுக்கான திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14 சட்டப் பேரவை தேர்தல்களில் 5 முறை காங்கிரஸ், 2 முறை திமுக, 4 முறை அதிமுக, ஜனதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு முறை வெற்றி பெற்றிருக்கின்றன. 2006-ல் இத் தொகுதியில் காங்கிரஸ் உறுப்பினர் எச். வசந்தகுமார் வெற்றி பெற்றிருந்தார். 2011-ல் அதிமுக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ. நாராயணன் வெற்றி பெற்றிருந்தார்.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
பாளையம் கோட்டை தாலுகா, நாங்குநேரி தாலுகா.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,20,033 |
பெண் | 1,21,415 |
மூன்றாம் பாலினத்தவர் | 2 |
மொத்த வாக்காளர்கள் | 2,41,450 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு |
2011 | A.நாராயணன் | அ.இ.ச.ம.க | 46 |
2006 | H.வசந்தகுமார் | இ.தே.கா | 51.76 |
2001 | S.மாணிக்கராஜ் | அதிமுக | 51.54 |
1996 | S.V.கிருஷ்ணன் | இந்திய கம்யூனிச கட்சி | 40.27 |
1991 | V.நடேசன் பால்ராஜ் | அதிமுக | 72.9 |
1989 | ஆச்சியூர் M.மணி | திமுக | 31.87 |
1984 | M.ஜான் வின்சென்ட் | அதிமுக | 58 |
1980 | M.ஜான் வின்சென்ட் | அதிமுக | 52.18 |
1977 | M.ஜான் வின்சென்ட் | ஜனதா கட்சி | 27.71 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | H. வசந்தகுமார் | காங்கிரஸ் | 54170 |
2 | S.P. சூரியகுமார் | அ.தி.மு.க | 34095 |
3 | R. சங்கர் | எ.ஐ.எப்.பி | 6869 |
4 | I. பாக்கியராஜ் | தே.மு.தி.க | 2700 |
5 | A. நாவனிதகிருஷ்ணன் | சுயேச்சை | 1964 |
6 | U. பாண்டி | பி.எஸ்.பி | 1872 |
7 | R. சோழகன் நெல்லை | பி.ஜே.பி | 1335 |
8 | K. யுகேந்தரன் | சுயேச்சை | 908 |
9 | S. சத்தியநாரயாணன் | சுயேச்சை | 317 |
10 | S. ஆனந்தகுமார் | ஐ.ஜே.பி | 247 |
11 | K. சிவனாந்தபெருமாள் | சுயேச்சை | 188 |
104665 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | A. நாராயணன் | அ.தி.மு.க | 65510 |
2 | H. வசந்தகுமார் | காங்கிரஸ் | 53230 |
3 | T. தேவனந்தன் யாதவ் | ஜே.எம்.எம் | 13425 |
4 | M. மஹாகண்ணன் | பி.ஜே.பி | 5290 |
5 | S. முருகன் | சுயேச்சை | 2207 |
6 | M. அனாந்த் | பி.எஸ்.பி | 2075 |
7 | V. சேனைதுரைநாடார் | சுயேச்சை | 940 |
142677 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT