Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 05 Apr 2016 04:09 PM

223 - ஆலங்குளம்

விவசாயம், வியாபாரத்தை அடிப்படையாக கொண்ட ஆலங்குளம் தாலுகா, அம்பாசமுத்திரம் தாலுகாவின் ஒரு பகுதி, ஆழ்வார்குறிச்சி, முக்கூடல் பேரூராட்சிகள் மற்றும் 22 ஊராட்சிகளை உள்ளடக்கியது இத் தொகுதி.

பீடித்தொழிலாளர்கள் கணிசமாக வசிக்கும் இத் தொகுதியில் பரவலாக நாடார், கோனார், தேவர், யாதவர் சமுதாயத்தினர் வசிக்கிறார்கள். ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் காய்கறி உற்பத்தி பிரசித்தம். இங்கு உற்பத்தியாகும் காய்கறிகள் கேரளத்துக்கு பெருமளவுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. இதனால் விவசாயம், அதை சார்ந்த தொழில்களில் இத் தொகுதியில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

அரிசி ஆலைகள், காய்கறி சந்தை என்று நாளுக்குநாள் ஆலங்குளம் தொகுதியில் பல்வேறு தொழில் வாய்ப்புகள் இருந்தாலும் உரிய முன்னேற்றம் இல்லை. விவசாயிகளும், கூலித்தொழிலாளர்களும் நிறைந்துள்ள இத் தொகுதியில் கூலி உயர்வு கேட்டு பீடித்தொழிலாளர்கள் போராட்டம் தொடர்கதையாகிவிட்டது. இங்கு சாகுபடி செய்யப்படும் மிளகாய், கத்தரி, வெண்டை, பல்லாரி ஆகியவை அண்டை மாநிலமான கேரளத்துக்கு தினமும் லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் சமீபத்தில் விவசாயத்துக்கு அச்சுறுத்தலாக காற்றாலைகள் ஆங்காங்க பெருகிவருகின்றன. ஆலங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி அரசு மருத்துவமனையாக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. ஆலங்குளத்தில் நீதிமன்றம் அமைக்கப்படும் என்று அதிமுக அரசு அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆலங்குளத்தில் காய்கறி பதப்படுத்தும் நிலையம் அமைக்கும் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. இத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியிலுள்ள ராமநதி, கடனா நதி அணைகள் தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைக்காலத்தில் தண்ணீரை சேமித்து வைக்கமுடியவில்லை.

1952 முதல் 2011 வரை நடைபெற்ற 14 சட்டப் பேரவை தேர்தல்களில் அதிமுக, திமுக, காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர்கள் தலா 4 முறை வெற்றி பெற்றிருக்கிறார்கள். காந்தி காமராஜ் காங்கிரஸ், சுயேச்சை வேட்பாளர்கள் தலா 1 முறை வெற்றி பெற்றிருந்தனர். 2006 தேர்தலில் திமுக வேட்பாளர் பூங்கோதை ஆலடி அருணாவும், 2011 தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி.ஜி. ராஜேந்திரனும் வெற்றி பெற்றிருந்தனர்.

தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

ஆலங்குளம் தாலுகா

அம்பாசமுத்திரம் தாலுகா (பகுதி)

கடையம் பெரும்பத்து, கீழகடையம், வடக்கு அரியநாயகிபுரம், பாப்பாக்குடி, காசிதர்மம், இடைகால், தெற்குமடத்தூர், அயன் பொட்டல்புதூர்-மி, தெற்குகடையம், இரவணசமுத்திரம், கோவிந்தபேரி, அயன் தர்மபுர மடம், சிவசைலம், வீரசமுத்திரம், பாப்பான்குளம், செங்குளம், ரெங்கசமுத்திரம், பனஞ்சாடி, பள்ளக்கால், அடைச்சாணி, கீழ ஆம்பூர், மற்றும் மேல ஆம்பூர் கிராமங்கள்.

ஆழ்வார்குறிச்சி (பேரூராட்சி) மற்றும் முக்கூடல் (பேரூராட்சி).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:



ஆண்

1,19,444

பெண்

1,25,144

மூன்றாம் பாலினத்தவர்

-

மொத்த வாக்காளர்கள்

2,44,588



தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு (%)

2011

P.G.இராஜேந்திரன்

அதிமுக

2006

பூங்கோதை ஆலடி அருணா

திமுக

46.05

2001

P.G.இராஜேந்திரன்

அதிமுக

48.95

1996

V.அருணாசலம் (ஆலடி அருணா)

திமுக

46.1

1991

S.S.இராம சுப்பு

இ.தே.கா

62.69

1989

S.S.இராம சுப்பு

இ.தே.கா

28.57

1984

N.சண்முகைய்யா பாண்டியன்

அதிமுக

54.49

1980

R.நவநீத கிருஷ்ண பாண்டியன்

கா.கா.கா

53.88

1977

V.கருப்பசாமி பாண்டியன்

அதிமுக

28.43

1971

V.அருணாசலம் (ஆலடி அருணா)

திமுக

1967

V.அருணாசலம் (ஆலடி அருணா)

திமுக

1962

எஸ். செல்லபாண்டியன்

இந்திய தேசிய காங்கிரஸ்

1957

வேலுச்சாமித்தேவர்

சுயேச்சை

1952

சின்னத்தம்பி

இந்திய தேசிய காங்கிரஸ்

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

பூங்கோதை ஆலடி அருணா

தி.மு.க

62299

2

M. பாண்டிராஜ்

அ.தி.மு.க

55454

3

M. சிவகுமார்

பி.எஸ்.பி

6620

4

P. சாமிநாதன்

எ.ஐ.எப்.பி

4664

5

முத்துகுமாரசாமி

தே.மு.தி.க

2751

6

M. அருள்செல்வன்

பாஜக

2170

7

A. மீரன்

சுயேச்சை

1336

135294

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

P.G. ரஜேந்திரன்

அ.தி.மு.க

78098

2

DR. பூங்கோதை ஆலடி அருணா

தி.மு.க

77799

3

S. சுடலையாண்டி

பி.ஜே.பி

2664

4

E. முருகேசன்

பி.எஸ்.பி

1234

5

N. ரஜேந்திரன்

சுயேச்சை

1099

6

S. தங்கராஜ்

சுயேச்சை

1058

7

R. ராமலிங்கம்

சுயேச்சை

924

8

G. பிரகாஷ்

சுயேச்சை

793

9

R. கேசவராஜ்

சுயேச்சை

629

10

M. முருகன்

சுயேச்சை

408

11

A. ஞான அருள்

சுயேச்சை

228

12

D. செல்வின்

சுயேச்சை

200

165134

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x