Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 05 Apr 2016 04:09 PM
ஆண்டிபட்டி தொகுதி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. முதல்வர் ஜெயலலிதாவை வெற்றி பெறச்செய்த தொகுதி. இந்த தொகுதியில் உள்ள ஆண்டிபட்டி, டி.சுப்புரலாபுரம், ஜக்கம்பட்டி பகுதிகளில் நெசவு தொழில் பிரதான தொழிலாக உள்ளது. இப்பகுதியில் நெய்யப்படும் சேலைகள் தமிழக அரசின் இலவச சேலை திட்டத்திற்காக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. மேலும் ஆண்டிபட்டி, வருசநாடு பகுதிகளில் முருங்கை, வெண்டை, கொட்டைமுந்திரி, இலவசம் பஞ்சு சாகுபடியும், காமயகவுண்டன்பட்டி, என்.டி.பட்டி, கே.கே.பட்டி பகுதியில் பல ஆயிரம் ஏக்கரிர் திராட்சை, திசுவாழை, நெல் சாகுபடியும் நடந்து வருகிறது. கானாவிலக்கில் அரசு மருத்துவக்கல்லு£ரி மருத்துவமனையும், அண்ணா கூட்டுறவு நு£ற்பாலையும் செயல்பட்டு வருகிறது. மேகமலை, ஹைவேவிஸ், மேல் மணலாறு, கீழ் மணலாறு, மகாராஜாமெட்டு ஆகிய மலை கிராமங்களில் தேயிலை அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஹைவேவிஸ் மலை சிறந்த சுற்றுலாத்தளமாக உள்ளது.
கூடலு£ர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் முல்லைபெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் மூலம் நீர் மின்உற்பத்தி நடைபெறுகிறது-. இங்குதான் முல்லை பெரியாறு அணையை கட்டி ஆங்கில பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுவிக் மணிமண்டபமும் கட்டப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி, கடமலை மயிலை என ஊராட்சி ஒன்றியங்களும், கூடலு£ர் நகராட்சி, ஆண்டிபட்டி, காமயகவுண்டன்பட்டி, ஹைவேவிஸ் என பேரூராட்சிகள் உள்ளது. முக்குலத்தோர் சுமார் 31சதவீதமும், தாழ்த்தப்பட்டோர் சுமார் 19சதவீதமும், கவுண்டர் சுமார் 15சதவீதமும், நாயுடு சுமார் 11சதவீதமும், சாலியர் உள்பட பிற சமூகத்தினர் 24சதவீதமும் வசித்து வருகின்றனர். வைகை உயர்தொழில்நுட்ப பூங்கா திட்டம், வருசநாடு-விருதுநகரை இணைக்கும் புதிய சாலை திட்டம், பிப்ரவு அணை திட்டம், மூலவைகை ஆற்றில் குறுக்கே அணை ஆகிய திட்டங்கள் பல ஆண்டு கோரிக்கையாக உள்ளது.
கடந்த 1962-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை 12 தேர்தல்களில் காங்கிரஸ், சுதந்திரா கட்சி தலா ஒருமுறை, திமுக 2, அதிமுக 8 என வெற்றி பெற்றுள்ளது. 2006-ம் ஆண்டு அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா வெற்றி பெற்றார். 2011-ம் ஆண்டில் தங்க தமிழ்ச்செல்வன்(அதிமுக) வெற்றி பெற்றார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | டி.தங்கதமிழ்செல்வன் | அதிமுக |
2 | எல்.மூக்கையா | திமுக |
3 | எம்.என்.கிருஷ்ணமூர்த்தி | தேமுதிக |
4 | கே.ரவி | பாமக |
5 | எஸ்.ஆர்.சக்கரவர்த்தி | பாஜக |
6 | எம்.தம்பி ஆனந்த் என்ற எம்.ஆனந்தபாபு | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
ஆண்டிபட்டி தாலுகா
உத்தமபாளையம் தாலுகா (பகுதி)கீழக்கூடலூர், நாராயணத்தேவன்பட்டி மற்றும் வண்ணாத்திப்பாறை (ஆர்.எப்) வருவாய்க் கிராமங்கள்,காமயக்கவுண்டன்பட்டி (பேரூராட்சி), கூடலூர் (நகராட்சி) மற்றும் ஹைவேவிஸ் (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,26,436 |
பெண் | 1,27,308 |
மூன்றாம் பாலினத்தவர் | 19 |
மொத்த வாக்காளர்கள் | 2,53,763 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1962 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
2011 | தங்க. தமிழ்ச்செல்வன் | அதிமுக | |
2006 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 55.04 |
2002 | ஜெ. ஜெயலலிதா | அதிமுக | 58.21 |
2001 | தங்க. தமிழ்ச்செல்வன் | அதிமுக | 53.78 |
1996 | பி. ஆசையன் | திமுக | 44.9 |
1991 | கே. தவசி | அதிமுக | 64.25 |
1989 | பி. ஆசையன் | திமுக | 29.5 |
1984 | எம். ஜி. இராமச்சந்திரன் | அதிமுக | 67.4 |
1980 | எஸ். எஸ். ராஜேந்திரன் | அதிமுக | 59.79 |
1977 | கே. கந்தசாமி | அதிமுக | 34.41 |
1971 | என்.வி.குருசாமி | சுதந்திராக் கட்சி | |
1967 | எஸ்.பரமசிவம் | சுதந்திராக் கட்சி | |
1962 | அ.கிருஷ்ணவேணி | இந்திய தேசிய காங்கிரஸ் |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | J. ஜெயலலிதா | அ.தி.மு.க | 73927 |
2 | சீமான் | தி.மு.க | 48741 |
3 | V.S. சந்திரன் | தி.மு.தி.க | 6795 |
4 | M. சாந்தகுமார் | ப.ஜ.க | 1298 |
5 | P. பாலசுந்தர்ராஜன் | பகுஜன் | 1154 |
6 | K. முருகவேல் ராஜன் | ஜனதா | 389 |
7 | S. ராஜா மணி | சுயேச்சை | 363 |
8 | R. ஜெயராமன் | சுயேச்சை | 363 |
9 | P. ராஜா | சுயேச்சை | 299 |
10 | S. ரமேஷ் | சுயேச்சை | 282 |
11 | G. பெரியசாமி | சுயேச்சை | 197 |
12 | K.S. பாஸ்காரன் | சுயேச்சை | 112 |
13 | M.பிச்சைமணி | சுயேச்சை | 108 |
14 | S. சக்திவேல் | சுயேச்சை | 101 |
15 | R. சுப்புராஜ் | சுயேச்சை | 90 |
16 | A.பரமேஸ்வரன் | சுயேச்சை | 85 |
134304 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | தங்கதமிழ்செல்வன் | அ.தி.மு.க | 91721 |
2 | L. மூக்கையா | தி.மு.க | 70690 |
3 | R. குமார் | ப.ஜ.க | 1660 |
4 | R. ராஜபாண்டி | ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா | 1015 |
5 | S. பிச்சைமணி | சுயேச்சை | 961 |
6 | U. மஹாலிங்கம் | சுயேச்சை | 700 |
7 | S. ஈஸ்வரன் | பகுஜன் | 620 |
8 | M. முத்துப்பாண்டி | சுயேச்சை | 592 |
9 | R. பாலக்கிருஷ்ணன் | சுயேச்சை | 517 |
10 | K. தங்கமுத்து | சுயேச்சை | 322 |
11 | M. செல்வக்குமார் | சுயேச்சை | 228 |
12 | R. முருகானந்தம் | இந்திய ஜனநாயககட்சி | 224 |
13 | C. சேரலாதன் | சுயேச்சை | 203 |
14 | S.M. ராமர் | சுயேச்சை | 198 |
15 | S.S. குருசாமி | சுயேச்சை | 172 |
16 | K. பால்பாண்டி | சுயேச்சை | 171 |
17 | R. முருகன் | சுயேச்சை | 153 |
18 | V. அருண்குமார் | சுயேச்சை | 113 |
19 | M.S. காலுசிவலிங்கம் | சுயேச்சை | 107 |
20 | R. ஈஸ்வரன் | சுயேச்சை | 102 |
21 | R. கருணாநிதி | சுயேச்சை | 97 |
22 | S. அந்தோனிராஜ் | சுயேச்சை | 86 |
170652 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT