Published : 05 Apr 2016 04:05 PM
Last Updated : 05 Apr 2016 04:05 PM
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒன்று திருவையாறு தொகுதி.
திருவையாறு ஒன்றியத்தின் 40 ஊராட்சிகள், பூதலூர் ஒன்றியத்தின் 42 ஊராட்சிகள், தொகுதி சீரமைப்பின்போது தஞ்சாவூர் தொகுதியில் இருந்து பிரிக்கப்பட்ட 29 ஊராட்சிகள், திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி பேரூராட்சிகள் மற்றும் திருச்சி சாலை செங்கிபட்டி பகுதிகளை உள்ளடக்கிய தொகுதி.
நெல், வாழை, வெற்றிலை, காய்கறிகள் அதிகம் விளைகின்றன. பழமையான கல்லணை, பூண்டி மாதா கோயில், திருவையாறு ஐயாறப்பர் கோயில், சத்குரு தியாகராஜர் சமாதி, அரசு இசைக் கல்லூரி, அரசினர் கல்லூரி மற்றும் தனியார் கல்லூரிகள், பள்ளிகள் உள்ளன.
கள்ளர், முத்தரையர், மூப்பனார், தலித், வன்னியர், பிராமணர், உடையார், பார்கவகுலத்தினர் பரவலாக உள்ளனர்.
செங்கிப்பட்டியில் அரசுப் பொறியியல் கல்லூரி, திருவையாறில் அரசு ஐடிஐ. திருவையாறில் வட்டாட்சியர் அலுவலகம், போக்குவரத்துக் கழக பணிமனை, கல்லணையில் கரிகால்சோழன் மணி மண்டபம், வளப்பக்குடியில் வாழை பதனிடும் குளிர்பதனக் கிடங்கு ஆகியன புதிய வரவுகள்.
தமிழகத்தின் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான இடத் தேர்வில் இத்தொகுதியின் செங்கிப்பட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.
காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி ஆறுகளில் வெள்ள அபாயத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த காவிரியில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். திருவையாறு நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்ற நீண்ட கால கோரிக்கைகள் உள்ளன.
பூதலூரை தாலுகாவாக அறிவித்தும் முறையான பேருந்து நிலையம், பேருந்து வசதிகள் ஏற்படுத்தாதது, ஏரி, குளங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தாது, செங்கப்பட்டி, பூதலூர் பகுதியில் உய்யகொண்டான் கட்டளை வாய்க்கால்களை சீரமைக்காதது போன்றவை மக்கள் விவசாயிகள் எழுப்பும் குறைகளாக உள்ளன.
கடந்த 1957 முதல் 2011 வரை நடைபெற்ற 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 6 முறை திமுகவும், 5 முறை அதிமுகவும், 2 முறை காங்கிரஸும் வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006 தேர்தலில் திமுகவின் துரை. சந்திரசேகனும், 2011 தேர்தலில் அதிமுகவின் எம். ரெத்தினசாமியும் வெற்றிபெற்றனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | எம்.ஜி.எம். சுப்பிரமணியன் | அதிமுக |
2 | துரை. சந்திரசேகரன் | திமுக |
3 | வெ. ஜீவக்குமார் | மார்க்சிஸ்ட் |
4 | இரா. கனகராஜ் | பாமக |
5 | ச. சிமியோன் சேவியர் ராஜ் | ஐஜேகே |
6 | கை.ரெ. சண்முகம் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் வட்டம் (பகுதி)
இந்தளூர், கடம்பங்குடி, சோழகம்பட்டி, மாறனேரி, காங்கேயம்பட்டி, கோட்ராப்பட்டி, தொண்டராயம்பாடி, பூதலூர், கோவில்பத்து, சித்திரக்குடி-கூடுதல், சித்திரக்குடி -முதன்மை, இராயத்தூர், கல்விராயன்பேட்டை, பெரம்பூர், இரண்டாம்சேத்தி, பெரும்பூர், முதல்சேத்தி, பிள்ளையார்நத்தம், சிராளூர், வெண்ணலோடை, சக்கரசாமந்தம், பள்ளியேரி, வேலூர், நரசநாயகிபுரம், திருவேதிகுடி, மானாங்கோரை, தண்டாங்கோரை, மாத்தூர், நல்லிச்சேரி, தோட்டக்காடு, கொண்டவட்டாந்திடல், ராமாபுரம், திட்டை, கூடலூர், குருங்களூர், மேலவெளிதோட்டம், ராமநாதபுரம் முதன்மை, ராமநாதபுரம் கூடுதல், வண்ணாரப்பேட்டை கூடுதல், ஆலக்குடி முதன்மை, செல்லப்பன்பேட்டை, வீரநரசன்பேட்டை, ஆவாரம்பட்டி, நந்தவனப்பட்டி, முத்துவீரக்கண்டியன்பட்டி, வெண்டையம்பட்டி, சூக்குடிபட்டி, இராயமுண்டான்பட்டி, புதுக்குடி வடக்கு, மனையேரிப்பட்டி, சானூரப்பட்டி, புதுப்பட்டி, மருதக்குடி, குருவாடிப்பட்டி, வல்லம்புதூர்சேத்தி, திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, பாலையம்பட்டி, தெற்குசேத்தி, பாலையப்பட்டி வடக்குசேத்தி, புதுக்குடி தெற்கு மற்றும் ஆச்சாம்பட்டி கிராமங்கள்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,22,042 |
பெண் | 1,25,873 |
மூன்றாம் பாலினத்தவர் | - |
மொத்த வாக்காளர்கள் | 2,47,915 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி |
1957 | சுவாமிநாதமேல்கொண்டார் | இந்திய தேசிய காங்கிரஸ் |
1962 | பழணி | இந்திய தேசிய காங்கிரஸ் |
1967 | ஜி.சேதுராமன் | திமுக |
1971 | இளங்கோவன் | திமுக |
1977 | இளங்கோவன் | திமுக |
1980 | M.சுப்ரமணியன் | அதிமுக |
1984 | துரை.கோவிந்தராஜன் | அதிமுக |
1989 | துரை.சந்திரசேகரன் | திமுக |
1991 | பி.கலியபெருமாள் | அதிமுக |
1996 | துரை.சந்திரசேகரன் | திமுக |
2001 | கி.அய்யாறுவாண்டையார் | திமுக |
2006 | துரை.சந்திரசேகரன் | திமுக |
2011 | எம்.ரத்தினசாமி | அதிமுக |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | துரை. சந்திரசேகரன் | தி.மு.க | 52723 |
2 | துரை. கோவிந்தராஜன் | அ.தி.மு.க | 52357 |
3 | N. மகேந்திரன் | தே.மு.தி.க | 6420 |
4 | C. குமரவேலு | பி.ஜே.பி | 1246 |
5 | T. சுரேஷ் | பி.எஸ்.பி | 868 |
6 | K. ராஜேஷ் | சுயேச்சை | 688 |
7 | A. மதியழகன் | சுயேச்சை | 596 |
114898 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | M. ரத்தினசாமி | அ.தி.மு.க | 88784 |
2 | S. அரங்கநாதன் | தி.மு.க | 75822 |
3 | G. முத்துகுமார் | ஐ.ஜே.கே | 4879 |
4 | D. ரஜேஷ்குமார் | எ.ஐ.ஜே.எம்.கே | 1408 |
5 | J. சிவகுமார் | பி.ஜே.பி | 1276 |
6 | M. அரங்கராஜன் | பி.எஸ்.பி | 911 |
7 | C. ராஜா சக்ரேட்ஸ் | பி.பி.ஐ.எஸ் | 626 |
173706 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT