Published : 05 Apr 2016 04:05 PM
Last Updated : 05 Apr 2016 04:05 PM

177 - பேராவூரணி

பேராவூரணி ஒன்றியத்தின் 26 ஊராட்சிகள், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தின் 36 ஊராட்சிகள், நீக்கப்பட்ட திருவோணம் தொகுதியின் 9 ஊராட்சிகள், பேராவூரணி, பெருமகளூர் பேரூராட்சிகளை உள்ளடக்கிய தொகுதி.

நெல், தென்னை சாகுபடி, மீன்பிடித் தொழில் முதன்மையானவை. முக்குலத்தோர், முத்தரையர்கள், யாதவர் பெரும்பான்மையாகவும், தலித், இஸ்லாமியர்கள் பரவலாகவும் உள்ளனர்.

பேராவூரணி அருகில் தொடங்கப்பட்டுள்ள அரசு கலைக் கல்லூரி புதுவரவும். கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டத்தின் கடலோர பகுதியான சேதுபாவாசத்திரத்தில் மீன்பிடி தொழிலை மேம்படுத்த சிறு துறைமுகம் அமைக்க வேண்டும். நோயுற்றுள்ள பேராவூரணி அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். காட்டாறுகளில் தடுப்பணைகள் கட்டியும், ஏரிகள், குளங்களை தூர்வாரியும் பாசனத்துக்கு பயன்படுத்த வேண்டும். காட்டாறுகளின் தரைமட்டப் பாலங்களை, உயர்ட்டப் பாலங்களாக மாற்ற வேண்டும். பல ஆண்டுகளாக தடைபட்டுள்ள திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதை திட்டத்தை முடித்து ரயில் போக்குவரத்தை தொடக்க வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைகள்..

கடந்த 1967 முதல் 2011 வரை நடைபெற்ற 11 சட்டப்பேரவைத் தேர்தல்களில் 4 முறை அதிமுக, 2 முறை காங்கிரஸ், 2 முறை தமாக, தலா ஒரு முறை திமுக, சுயேட்சை, தேமுதிக வெற்றிபெற்றுள்ளன. கடந்த 2006 தேர்தலில் அதிமுகவின் வீரகபிலனும், 2011 தேர்தலில் தேமுதிகவின் நடிகர் அருண்பாண்டியனும் வெற்றி பெற்றனர்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

மா. கோவிந்தராஜ்

அதிமுக

2

நா. அசோக்குமார்

திமுக

3

தமயந்தி திருஞானம்.

இந்திய கம்யூ

4

ப. தியாகராஜன்

பாமக

5

ரெ. இளங்கோ

பாஜக

6

க. பாலதண்டாயுதம்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

பேராவூரணி வட்டம்

ஒரத்தநாடு வட்டம் (பகுதி)

தளிகைவிடுதி, பாண்டிபழமவைக்காடு, வெட்டுவாக்கோட்டை-மிமி,வெட்டுவாக்கோட்டை-மி, சென்னியாவிடுதி, நெய்வேலிவடபாதி,நெய்வேலி தென்பாதி, வேங்கரை பெரியக்கோட்டைநாடு, வேங்கரை திப்பன்விடுதி மற்றும் வேங்கரை கிராமங்கள்,

பட்டுக்கோட்டை வட்டம் (பகுதி)

நம்பிவயல், கொள்ளுக்காடு, அனந்தகோபாலபுரம் வடபாதி, அனந்தகோபாலபுரம் தென்பாதி, பாதிரங்கோட்டை தென்பாதி, பாத்ரங்கோட்டை வடபாதி, அதம்பை வடக்கு, அதம்பை தெற்கு, நடுவிக்கோட்டை, காயாவூர், பூவளூர், வழுதலைவட்டம், வாட்டாத்திக்கோட்டை கொள்ளுக்காடு, வாட்டாத்திக்கோட்டை உக்கடை பீமாபுரம், எடையாத்தி வடக்கு,எடையாத்தி தெற்கு, சூரியநாராயணபுரம், செருவாவிடுதி வடபாதி, கிருஷ்ணபுரம், செருவாவிடுதி தென்பாதி, மடத்திக்காடு, துறவிக்காடு, புனவாசல் மேற்கு, புனவாசல் கிழக்கு, குறிச்சி, நெய்வாவிடுதி, அனந்தீஸ்வரபுரம், அலிவலம், கொண்டிகுளம், மணவயல், துவரமடை, கழுகபுளிக்காடு, பில்லன்கிழி, பாலத்தளி, எண்ணெய்வயல், எழுத்தாணிவயல், பண்ணைவயல், பைங்காட்டுவயல், கூத்தடிவயல், சொக்கநாதபுரம், பூவணம், கட்டயன்காடு உக்கடை, மதன்பட்டவூர், ஓட்டங்காடு, திருச்சிற்றம்பலம் மேற்கு, திருச்சிற்றம்பலம் கிழக்கு, களத்தூர் மெற்கு, களத்தூர் கிழக்கு, ஒட்டங்காடு உக்கடை, நடுவிக்குறிச்சி, கட்டையங்காடு, புக்கரம்பை, பள்ளத்தூர், மருதங்காவயல், கொள்ளுக்காடு, வெளிவயல், புதுப்பட்டினம், ஆண்டிக்காடு, எட்டிவயல், உதயமுடையான், ஆலடிக்காடு, அழகிநாயகிபுரம், ஏரளிவயல், கரிசவயல், தண்டாமரைக்காடு, பள்ளிஓடைவயல், புதிரிவயல், ரெண்டாம்புளிக்காடு, அலமதிக்காடு, மறவன்வயல், கள்ளிவயல் மற்றூம் சரபேந்திரராஜன் பட்டினம் கிராமங்கள் ,

ஆலங்குடி வட்டம் (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்)

காட்டாத்தி கிராமம், (**காட்டாத்தி கிராமம் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் வந்தாலும் கள ரீதியாகவும், நிலப்பரப்பு ரீதியாகவும் பேராவூரணி சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது).

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,01,404

பெண்

1,03,963

மூன்றாம் பாலினத்தவர்

1

மொத்த வாக்காளர்கள்

2,05,368

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1971 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

1971

குழ.செல்லையா

சுயேச்சை

1977

எம்.ஆர்.கோவிந்தன்

அதிமுக

1980

எம்.ஆர்.கோவிந்தன்

அதிமுக

1984

எம்.ஆர்.கோவிந்தன்

அதிமுக

1989

ஆர்.சிங்காரம்

இந்திய தேசிய காங்கிரஸ்

1991

ஆர்.சிங்காரம்

இந்திய தேசிய காங்கிரஸ்

1996

எஸ்.வி.திருஞாணசம்பந்தம்

தமாகா

2001

எஸ்.வி.திருஞாணசம்பந்தம்

தமாகா

2006

எம்.வி.ஆர்.கபிலன்

அதிமுக

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

M.V.R. வீரகபிலன்

அ.தி.மு.க

54183

2

S.V. திருஞானசம்பந்தர்

காங்கிரஸ்

50577

3

V.S.K. பழனிவேல்

தே.மு.தி.க

19627

4

D. தியாகராஜன்

பி.ஜே.பி

2998

5

M. சத்தியமூர்த்தி

சுயேச்சை

1320

6

M. அந்தோனிராஜ்

சுயேச்சை

1076

129781

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

C. அருண்பாண்டியன்

தே.மு.தி.க

51010

2

K. மகேந்திரன்

ஐ.என்.சி

43816

3

S.V. திருஞானசம்பந்தர்

சுயேச்சை

25137

4

V. சுப்பிரமணியன்

சுயேச்சை

7470

5

K. தங்கமுத்து

ஜே.எம்.எம்

4453

6

R. இளங்கோ

பி.ஜே.பி

2691

7

M. பாலசுப்பிரமணியன்

சுயேச்சை

1465

8

V. மாயாழகு

பி.எஸ்.பி

1432

9

K.M. காளிமுத்து

சுயேச்சை

1430

10

A. முத்துகுமரன்

சுயேச்சை

1140

140044

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x