Published : 05 Apr 2016 04:06 PM
Last Updated : 05 Apr 2016 04:06 PM

185 - திருப்பத்தூர்

திருப்பத்தூர் தொகுதியில் வள்ளல் பாரி மன்னன் ஆண்ட பிரான்மலையும், அரசு சார்பில் மருதுபாண்டியர்களின் நினைவிடமும் உள்ளன. பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில், குன்றக்குடி சண்முகநாதப்பெருமான் கோயில் ஆன்மிக சுற்றுலாத்தலமாக உள்ளன. பெரும்பாலும் விவசாயம் சார்ந்த பகுதி. சிங்கம்புணரியில் ஏராளமான தென்னை மரங்கள் உள்ளதால் கயிறு உற்பத்தி குடிசைத்தொழிலாக உள்ளன. விவசாயம், கயிறு தொழில், செங்கல்காளவாசல் உற்பத்தி தொழில் உள்ளன.

திருப்பத்தூர் தொகுதி என இருந்தது பின்னர் திருக்கோஷ்டியூர் தொகுதி என மாறியது. மீண்டும் திருப்பத்தூர் தொகுதி என மாறியது.

திருப்பத்தூர் தாலுகாவில் உள்ள திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியங்கள் உள்ளன. காரைக்குடி தாலுகாவில் உள்ள கானாடுகாத்தான், பள்ளத்தூர், கோட்டையூர் பேரூராட்சிகள் உள்ளன.புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமயம் தாலுகாவைச் சேர்ந்த பள்ளக்குறிச்சி கிராமம் சேர்ந்துள்ளது.

இங்கு முக்குலத்தோர், தாழ்த்தப்பட்டோர், யாதவர், வல்லம்பர், முத்தரையர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் பரவலமாக உள்ளனர். அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் உள்ளன.

1952 முதல் 14 தேர்தல்களை சந்தித்துள்ள இத்தொகுதியில் சுயேச்சை ஒரு முறையும், திமுக ஏழு முறையும், இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டு முறையும், அதிமுக மூன்று முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. 2006, -2011 ஆகிய இரு தேர்தல்களிலும்ல் கேஆர்.பெரியகருப்பன் (திமுக) வெற்றி பெற்றுள்ளார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கரு.அசோகன்

அதிமுக

2

கரு.பெரியகருப்பன்

திமுக

3

என்.சாத்தையா

இந்திய கம்யூ

4

பழ.அழகப்பன்

பாமக

5

கு.அந்தோனி லாரன்ஸ்

ஐகேகே

6

ஆசைசெல்வன்

நாம் தமிழர்



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

திருப்பத்தூர் தாலுகா

காரைக்குடிதாலுகா (பகுதி)

கானாடுகாத்தான், கொத்தமங்கலம், பன்னத்தூர், கொத்தரி, நெருப்புகாப்பட்டி, ஆத்தங்குடி, அரண்மனைப்பட்டி, டி,சூரக்குடி, ஒய்யக்கொண்டான் சிறுவயல், கோட்டையூர், கல்லாங்குடி மற்றும் மானகிரி சுக்கனேந்தல் கிராமங்கள்,

கானாடுகாத்தான் (பேரூராட்சி), பள்ளத்தூர் (பேரூராட்சி) மற்றும் கோட்டையூர் (பேரூராட்சி)

திருமயம் தாலுக்கா (பகுதி) (புதுக்கோட்டை மாவட்டம்) பாலக்குறிச்சி கிராமம் (பாலக்குறிச்சி கிராம புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகத்தின் கீழ்வந்தாலும், கள மற்றும் பூகோள ரீதியாக திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியின் எல்லைப்பரப்பிற்குள் வருகிறது)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,32,731

பெண்

1,35,244

மூன்றாம் பாலினத்தவர்

3

மொத்த வாக்காளர்கள்

2,67,978

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்ற வேட்பாளர்

கட்சி

வாக்கு விழுக்காடு

2011

கே. ஆர். பெரியகருப்பன்

திமுக

-

2006

கே. ஆர். பெரியகருப்பன்

திமுக

44.85

2001

K.K.உமாதேவன்

அதிமுக

50.87

1996

R.சிவராமன்

திமுக

56.76

1991

இராஜ கண்ணப்பன்

அதிமுக

66.06

1989

S.S.தென்னரசு

திமுக

34.41

1985 இடைத்தேர்தல்

மணவாளன்

இ.தே.கா

52

1984

S.மாதவன்

அதிமுக

59.99

1981 இடைத்தேர்தல்

அருணகிரி

இ.தே.கா

65

1980

V.வால்மீகி

இ.தே.கா

42

1977

S.சண்முகம் கூத்தக்குடி

இந்திய கம்யூனிச கட்சி

27.45

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.R. பெரியகருப்பன்

தி.மு.க

48128

2

K.K. உமாதேவன்

அ.தி.மு.க

42501

3

M. அழகுராஜ்

தே.மு.தி.க

12111

4

S. சிவராமன்

பாஜக

2029

5

G. லட்சுமி

சுயேச்சை

1323

6

P. அக்பர்

பகுஜன் சமாஜ் கட்சி

1211

107312

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

KR.பெரியகருப்பண்

தி.மு.க

83485

2

RS.ராஜாகண்ணப்பன்

அ.தி.மு.க

81901

3

Mமாணிக்கவள்ளி.

சுயேச்சை

1289

4

M.சிங்காரவேலு

ஐ.ஜே,கே

1270

5

M.ஷேக் தாவூத்

பாஜக

1154

6

M.பெரியையா

சுயேச்சை

842

7

M.சாத்தையா

பகுஜன் சமாஜ் கட்சி

799

8

A.தியாகராஜன்

சுயேச்சை

715

9

R. சாத்தப்பன்

சுயேச்சை

593

10

A.சக்திவேல்

சுயேச்சை

346

11

S.சந்தானகிருஷ்ணன்

சுயேச்சை

345

12

P.குணசேகரன்

சுயேச்சை

281

173020

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x