Published : 05 Apr 2016 04:06 PM
Last Updated : 05 Apr 2016 04:06 PM
காரைக்குடி தொகுதி செட்டிநாடு கட்டிடக்கலை, சமையற்கலைக்கு பெயர் பெற்றது. சினிமா தயாரிப்பாளர் ஏவிஎம் மெய்யப்பச் செட்டியார், எஸ்பி.முத்துராமன், பஞ்சுஅருணாசலம் ஆகியோரின் சொந்த ஊர். வள்ளல் அழகப்பர் தந்த கொடையால் இங்கு கல்வி வளர்ச்சி ஏற்பட்டு, கல்வி நகரமாகத் திகழ்கிறது. காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், மத்திய அரசின் சிக்ரி ஆராய்ச்சி நிலையம், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி, செட்டிநாடு கால்நடைப்பண்ணை, மானாவாரி வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் போன்றவை உள்ளன.
நகரத்தார்களால் தமிழும், ஆன்மிகமும் செழித்தோங்கி வளரும் பகுதி. ஆன்மிக சுற்றுலாத்தலங்கள் உள்ளன. கலைநயமிக்க செட்டிநாடு பங்களாக்களை காண வெளிநாட்டினர் வருகைபுரியும் சிறப்பு வாய்ந்த இடம். ஆயிரம் ஜன்னல் வீடு, கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் பல செட்டிநாடு பங்களாக்கள் உள்ளன.
செட்டிநாடு கண்டாங்கி பருத்தி சேலைகள், ஆத்தங்குடி டைல்ஸ், செட்டிநாடு பலகாரங்கள், அரியக்குடி விளக்குகள், செட்டிநாடு கலைநயமிக்க பொருட்கள், ஆயிரம் ஜன்னல் வீடு ஆகியவை புகழ் பெற்றவை.
விவசாயமும், நெசவுத்தொழிலும் பிரதானத் தொழில்களாக உள்ளன.
காரைக்குடி, தேவகோட்டை (தாலுகாக்கள்) ஆகிய இரண்டு நகராட்சிகள், சாக்கோட்டை, கண்ணங்குடி, தேவகோட்டை ஆகிய மூன்று ஒன்றியங்கள்,
கண்டனுவர், புதுவயல் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன.
அரசு பொறியியல், கலைக்கல்லுவரிகள், தனியார் கல்லுவரிகள்,தனியார் பள்ளிகள் ஏராளமாக உள்ளன.
முக்குலத்தோர், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், நகரத்தார், வல்லம்பர், இஸ்லாமியர், உடையார் கிறிஸ்தவர்கள் பரவலாக வசிக்கின்றனர்.
1952- முதல் 14 தேர்தல்களை சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் 3 முறை, சுதந்திரா கட்சி 2, திமுக 3, அதிமுக 4, பாஜக, தமாகா தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. 2006-ல் என்.சுந்தரம் (காங்கிரஸ்), 2011-ல் சோழன் சித.பழனிச்சாமி (அதிமுக) ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | கற்பகம் இளங்கோ | அதிமுக |
2 | கேஆர்.ராமசாமி | காங்கிரஸ் |
3 | சே.செவந்தியப்பன் | மதிமுக |
4 | பிஆர்.துரைப்பாண்டி | பாமக |
5 | வி.முத்துலெட்சுமி | பாஜக |
6 | எஸ்.பரிமளம் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
தேவகோட்டை தாலுகா
காரைக்குடி தாலுகா(பகுதி)
பாலையூர், சாக்கோட்டை, பாணான்வயல், என்கிற பன்னாம்பட்டி, வெள்ளிப்பட்டி, பெரியகோட்டை, களத்தூர், நட்டுச்சேரி, ஜெயம்கொண்டான், பூக்குடி, ஆம்பக்குடி, குளப்பாடி, மேலமணக்குடி, கண்டனூர், செக்கலைக்கோட்டை, காரைக்குடி, செஞ்சை, கழனிவாசல், கோவிலூர், காரைக்குடி (ஆர்,எப்) அரியக்குடி, இலுப்பைக்குடி, மாத்தூர், சிறுகவயல், பிரம்புவயல், மித்ரவயல், செங்காத்தான்குடி, பெரியகோட்டகுடி, அமராவதிபுதூர், கல்லுப்பட்டி கிராமங்கள் மற்றும் கண்ணங்குடி கப்பலூர், கேசனி கிராமங்கள்.
கண்டனூர் (பேரூராட்சி) புதுவயல்(பேரூராட்சி) மற்றும் காரைக்குடி (நகராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,41,927 |
பெண் | 1,44,191 |
மூன்றாம் பாலினத்தவர் | 30 |
மொத்த வாக்காளர்கள் | 2,86,148 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு |
2011 | சோழன் சி.த.பழனிச்சாமி | அதிமுக | ------------------ |
2006 | என்.சுந்தரம் | இ.தே.கா | 48.7 |
2001 | எச். ராஜா | பா.ஜ.க | 48.4 |
1996 | என்.சுந்தரம் | தமாகா | 62.98 |
1991 | எம்.கற்பகம் | அதிமுக | 65.68 |
1989 | இராம.நாராயணன் | திமுக | 41.24 |
1984 | எஸ். பி. துரைராசு | அதிமுக | 48.98 |
1980 | சி. டி. சிதம்பரம் | திமுக | 51.78 |
1977 | காளியப்பன் | அதிமுக | 32.03 |
1971 | சி. டி. சிதம்பரம் | திமுக | |
1967 | மெய்யப்பன் | சுதந்திராக் கட்சி | |
1962 | சா. கணேசன் | சுதந்திராக் கட்சி | |
1957 | மு. அ. முத்தையா செட்டியார் | காங் | |
1952 | சொக்கலிங்கம் செட்டியார் | காங் |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | N. சுந்தரம் | ஐ.என்.சி | 64013 |
2 | O.L. வெங்கடசலம் | அ.தி.மு.க | 47767 |
3 | D. பாஸ்காரன் | தே.மு.தி.க | 13094 |
4 | N.K. ராமன் | ப.ஜா.க | 3787 |
5 | H. மொகமது ஹானிபா | சுயேட்சை | 1833 |
6 | P.L. அழகப்பன் | சுயேட்சை | 938 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | சோழன் சி.த.பழனிச்சாமி | அ.தி.மு.க | 86104 |
2 | KR. ராமசாமி | காங்கிரஸ் | 67204 |
3 | V. சிதம்பரம் | பாஜக | 4194 |
4 | S. ஆசைதைம்பி | ஐ.ஜே.கே | 3895 |
5 | N. பாலுசாமி | பகுஜன் சமாஜ் கட்சி | 2272 |
6 | R. ராஜ்குமார் | சுயேச்சை | 1728 |
7 | S. ஆனந்தகுமார் | ஜே.எம்.எம் | 999 |
8 | R. காரசிங்கம் | சுயேச்சை | 885 |
9 | K. ரபிக் ராஜா | சுயேச்சை | 772 |
10 | U. மகேஷ்வரன் | சுயேச்சை | 744 |
168797 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT