Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 05 Apr 2016 04:09 PM
இந்திய அளவில் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றான திருப்புல்லாணி ஆதிஜெகநாதப் பெருமாள் கோயில், உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயில்,
ராமநாதபுரத்தில் சேதுபதி மன்னர்கள் ஆட்சி செய்த ராமலிங்க விலாசம் அரண்மனை ஆகியவை வரலாற்றுச் சின்னங்களாக இத்தொகுதிக்குள் அமைந்துள்ளன. பாம்பனில்கடலுக்குள் அமைக்கப்பட்ட செஷர்ஸ் ரயில் பாலம் மற்றும் இந்திராகாந்தி ரோடு பாலம் ஆகியவை உலக அளவில் பிரபலமானவை. தொகுதி சீரமைப்பில் நீக்கப்பட்ட கடலாடி தொகுதி ராமநாதபுரம் மற்றும் முதுகுளத்தூர் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டுவிட்டது.
ராமநாதபுரம் தொகுதியில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை நகராட்சிகள், மண்டபம் பேரூராட்சி மற்றும் திருப்புல்லாணி, ராமநாதபுரம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் பேய்க்கரும்பு கிராமத்தில் முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் நினைவிடம் அமைந்துள்ளது. தற்போது இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்கள் வரும் இடமாக மாறியுள்ளது.
து. ராமேஸ்வரத்தில் இந்திய கடற்படை , மண்டபத்தில் இந்திய கடலோர காவல்படை, உச்சிப்புளியில் கடற்படை பருந்து விமானத்தளம் போன்ற ராணுவ முகாம்களும் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளது.
தொகுதியில் முக்குலத்தோர், முஸ்லிம்,கிறிஸ்தவர், ஆதிதிராவிடர், யாதவர் பரவலமாக வசிக்கின்றனர்.
முக்கியத் தொழிலாக மீன்பிடிப்பும், விவசாயமும் அமைந்துள்ளது. முதலிடத்தில் மீன்பிடித் தொழில் இருந்தும், இத்தொகுதி மீனவர் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் சர்வதேச பிரச்சினையாக இருந்து வருகிறது.
சுற்றுத்தலமான ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை நகராட்சியில் பாதாளச்சாக்கடை அமைக்கப்படாதது நீண்ட நாள் பிரச்சினையாக உள்ளது. வழுதூரைச் சுற்றிலும் எரிவாயு மூலம் 300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் 5 தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் அமைந்துள்ளன.
1952 முதல் 2011 வரை 14 முறை நடந்த சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் 3 முறை, சுயேச்சை ஒரு முறை, திமுக 4 முறை, அதிமுக 5 முறை, மனிதநேய மக்கள் கட்சி ஒரு முறை வென்றுள்ளது.
கடந்த 2006 தேர்தலில் காங்கிரஸின் ஹசன் அலியும், கடைசியாக 2011 தேர்தலில் மனிதநேய மக்கள் கட்சியின் எச்.ஜவாஹிருல்லாவும் வெற்றி பெற்றனர்.
2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | டாக்டர் எம்.மணிகண்டன் | அதிமுக |
2 | எம்.எச்.ஜவாஹிருல்லா | மமக |
3 | சிங்கை ஜின்னா | தேமுதிக |
4 | துரை.கண்ணன் | பாஜக |
5 | டாக்டர் க.சிவக்குமார் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
இராமேஸ்வரம் தாலுகா, இராமநாதபுரம் தாலுக்கா (பகுதி) ஆட்டங்கரை பெருங்குளம், வாலாந்தரவை, குயவன்குடி, இராஜசூரியமடை, வெள்ளாமரிச்சுக்கட்டி,திருப்பாலைகுடி, அச்சடிபிரம்பு, குதக்கோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், இரட்டையூரணி, நாகாச்சி, என்மணம்கொண்டான், பிரப்பன்வலசை, சாத்தக்கோன்வலசை, மண்டம், நொச்சியூரணி, புதுமடம், காரான், பெரியபட்டிணம், மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, பனையடியேந்தல், வேளனூர், குளபதம், பள்ளமோர்குளம், காஞ்சிரங்குடி, கிழக்கரை, மாணிக்கானேரி, புல்லாந்தை மற்றும் மாயாகுளம் கிராமங்கள் இராமநாதபுரம் (நகராட்சி), கீழ்க்கரை (பேரூராட்சி) மற்றும் மண்டபம் (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,41,900 |
பெண் | 1,42,412 |
மூன்றாம் பாலினத்தவர் | 18 |
மொத்த வாக்காளர்கள் | 2,84,330 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு |
2011 | ஜவாஹிருல்லா | மமக | |
2006 | K.அசன் அலி | இ.தே.கா | 46.43 |
2001 | A.அன்வர் ராசா | அதிமுக | 50.21 |
1996 | ரஹ்மான்கான் | திமுக | 51.22 |
1991 | M.தென்னவன் | அதிமுக | 59 |
1989 | M.S.K.இராஜேந்திரன் | திமுக | 36.21 |
1984 | T.இராமசாமி | அதிமுக | 59.91 |
1980 | T.இராமசாமி | அதிமுக | 57.63 |
1977 | T.இராமசாமி | அதிமுக | 46.86 |
1971 | சத்தியேந்திரன் | திமுக | |
1967 | தங்கப்பன் | திமுக | |
1962 | சண்முக ராஜேஸ்வர சேதுபதி | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | சண்முக ராஜேஸ்வர சேதுபதி | சுயேச்சை | |
1952 | சண்முக ராஜேஸ்வர சேதுபதி | இந்திய தேசிய காங்கிரசு |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K. அசன் அலி | ஐ.என்.சி | 66922 |
2 | M. பழனிசாமி | எம்.டி.எம்.கே | 53555 |
3 | S. தர்மராஜ் | தே.மு.தி.க | 12070 |
4 | A. சத்யா | பி.ஜே.பி | 5624 |
5 | C. ராஜேந்திரன் | சுயேச்சை | 1012 |
6 | S. விஸ்வநாதன் | சுயேச்சை | 974 |
7 | R. முத்துக்குமார் | ஏ.ஐ.எப்.பி | 628 |
8 | R. வீரச்சேகரன் | ஜே.டி | 590 |
9 | V. மாணிக்கம் | சுயேச்சை | 572 |
10 | A.M. முருகேசன் | சுயேச்சை | 558 |
11 | K. ஜோதிபாலன் | டி.என்.ஜே.சி | 517 |
12 | E. அல்லாபிச்சை | சுயேச்சை | 290 |
13 | A. மணி | சுயேச்சை | 281 |
14 | B. சுரேஷ் குமார் | சுயேச்சை | 200 |
15 | S. கணேசன் | சுயேச்சை | 192 |
16 | K. இளங்கோவன் | சுயேச்சை | 164 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | ஜவாஹிருல்லா | எம்.எ.எம்.எ.கே | 65831 |
2 | K. ஹாசன் அலி | காங்கிரஸ் | 50074 |
3 | D. கண்ணன் | பாஜக | 28060 |
4 | K. ராஜா உசேன் | ஐ.என்.எல் | 3606 |
5 | N. நம்புகுமார் | சுயேச்சை | 3001 |
6 | S. பெய்ரூஸ் கான் | சுயேச்சை | 2731 |
7 | KEP. உதயசூரியன் | சுயேச்சை | 1682 |
8 | M. மூர்த்தி | சுயேச்சை | 1138 |
9 | P. கருப்பையா | சுயேச்சை | 1021 |
10 | M. சேது | பகுஜன் | 876 |
11 | P. செல்வம் | சுயேச்சை | 595 |
12 | A. மணி | சுயேச்சை | 532 |
13 | R. செந்தில்குமார் | சுயேச்சை | 437 |
14 | A. கலையரசன் | சுயேச்சை | 397 |
15 | G. முருகேந்திரன் | சுயேச்சை | 382 |
16 | S. காளிதாஸ் | சுயேச்சை | 340 |
160703 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT