Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 05 Apr 2016 04:09 PM
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளில் முதுகுளத்தூர் ஒன்று. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர், முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் சோ.பாலகிருஷ்ணன் இத்தொகுதியில் வெற்றி பெற்றுள்ளனர். தொகுதி மறு சீரமைப்பிபின்போது கடலாடி சட்டப்பேரவை தொகுதி நீக்கப்பட்டு, முதுகுளத்தூர் மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டன.
முதுகுளத்தூர் மற்றும் கடலாடி வட்டங்களில் உள்ள கிராமங்கள் அனைத்தும் இடம் பெற்றுள்ளன. மேலும் கமுதி தாலுகாவின் ஒரு பகுதியான முடிமன்னார்கோட்டை, நீராவி, நீ.கரிசல்குளம், மேலராமநதி, கீழராமநதி, க.நெடுங்குளம், ஆனையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல்குளம், க.வேப்பங்குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரியமங்களம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு.புதுக்குளம், இடிவிலகி, பொந்தம்புளி, திம்மநாதபுரம், து.வாலசுப்பிரமணியபுரம், பா.முத்துராமலிங்கபுரம், பெருநாழி, காடமங்களம், சடையனேந்தல், சம்பக்குளம், கமுதி, தவசிக்குறிச்சி கிராமங்கள் மற்றும் கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி பேரூராட்சிகள் முழுவதும் இடம் பெற்றுள்ளது.
ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற பாதுஷா நாயகம் தர்ஹா அனைத்து மதத்தினரும் வந்து செல்லும் இடமாக உள்ளது. மேலும் முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ளது.
முதுகுளத்தூர் தொகுதி ஜாதி மோதல்களால் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி. தொகுதி சீரமைப்பின்போது முதற்கட்டமாக முதுகுளத்தூர் தொகுதி நீக்கப்பட்டது. ஆனால் இப்பகுதி பொதுமக்களும், வியாபாரிகளும் முத்துராமலிங்கத் தேவர் போட்டியிட்ட தொகுதியை நீக்கக்கூடாது என பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதனையடுத்து தேர்தல் ஆணையம் கடலாடி தொகுதியை நீக்கிவிட்டு, முதுகுளத்தூர் தொகுதியை அறிவித்தது.
தொகுதியில் முக்கியத்தொழில் விவசாயம். வானம் பார்த்த பூமியான இங்கு மழை பெய்தால் மட்டுமே விவசாயம். தொடர்ந்து ஏற்பட்ட வறட்சியால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே ஆயிரக்கணக்கான குடும்பங்கள் மதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்சலைகளோ, சிறு தொழில்களோ இல்லை. ஒரு அரசு கலைக்கல்லூரி, 2 தனியார் கலைக்கல்லூரிகள் மட்டுமே அமைந்துள்ளன.
தொகுதியில் முக்குலத்தோர், ஆதிதிராவிடர், யாதவர், முஸ்லிம், கிறிஸ்தவர் குறிப்பிடும்படியாக பரவலாக உள்ளனர்.
1952 முதல் 2011 வரை 14 முறை நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பார்வர்ட் பிளாக் 2 முறை, சுதந்திரா கட்சி மற்றும் தமாகா தலா ஒரு முறை, சுயேட்சை 3 முறை, காங்கிரஸ் 3 முறை, திமுக 2 முறை, அதிமுக 2 முறை வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2006 தேர்தலில் திமுக உறுப்பினர் முருகவேல் வெற்றி பெற்றார். கடைசியாக நடந்த 2011 தேர்தலில் அதிமுக உறுப்பினர் எம்.முருகன் வெற்றி பெற்றார்.
2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | கீர்த்திகா முனியசாமி | அதிமுக |
2 | மலேசியா எஸ்.பாண்டி | காங் |
3 | பொ.ராஜ்குமார் | மதிமுக |
4 | ரா.இருளாண்டி | பாமக |
5 | பிடி.அரசகுமார் | பாஜக |
6 | சே.ப.முகம்மது கதாபி | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
முதுகுளத்தூர் தாலுகா
கடலாடி தாலுகா
கமுதி தாலுகா (பகுதி)
முடிமன்னார்கோட்டை, நீராவி, கரிசக்குளம், மேலராமநதி, கீழராமநதி, க.நெடுங்குளம், ஆணையூர், பாக்குவெட்டி, செங்கப்படை, முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல்குளம், க.வேப்பங்குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரியமங்களம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு.புதுக்குளம், இடிவிலகி, பொந்தம்புளி, திம்மநாதபுரம், து.வாலாகப்ரமணியபுரம், பா.முத்துராமலிங்கபுரம், பெருநாழி, காடமங்களம், சடையனேந்தல், சம்பக்குளம், கமுதி மற்றும் தவசிக்குறிச்சி கிராமங்கள்,
கமுதி (பேரூராட்சி)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,49,225 |
பெண் | 1,47,680 |
மூன்றாம் பாலினத்தவர் | 8 |
மொத்த வாக்காளர்கள் | 2,96,913 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1977 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு |
2006 | K.முருகவேல் | திமுக | 49.71 |
2001 | K.பதினெட்டாம்படியான் | அதிமுக | 46.99 |
1996 | S.பாலகிருஷ்ணன் | த.மா.கா | 44.71 |
1991 | S.பாலகிருஷ்ணன் | இ.தே.கா | 41.74 |
1989 | S.காதர் பாட்சா (எ) வெள்ளைச்சாமி | திமுக | 33.14 |
1984 | K.முத்துவேல் | சுயேட்சை | 37.33 |
1980 | K.தனுஷ்கோடி தேவர் | சுயேட்சை | 51.43 |
1977 | S.பாலகிருஷ்ணன் | இ.தே.கா | 24.13 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K. முருகவேல் | தி.மு.க | 51555 |
2 | S.P.காளிமுத்து | அ.தி.மு.க | 41034 |
3 | M. சிவகுமார் | தே.மு.தி.க | 3535 |
4 | K. சண்முகராஜ் | பி.ஜே.பி | 2178 |
5 | K. தனிகொடி | எ.ஐ.எப்.பி | 1698 |
6 | P. மோகன் தாஸ் | பி.எஸ்.பி | 1399 |
7 | R. பாலன் | சுயேச்சை | 1037 |
8 | V. குருசாமி | சுயேச்சை | 460 |
9 | P. வாஞ்சி நாராயணன் | எல்.கே.பி.டி | 300 |
10 | M. சுப்பிரமணியன் | சுயேட்சை | 263 |
11 | M. பாலமுனியாண்டி | ஜே.டி | 247 |
103706 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | M. முருகன் | அ.தி.மு.க | 83225 |
2 | V. சத்தியமுர்த்தி | தி.மு.க | 63136 |
3 | D. ஜான்பாண்டியன் | டி.எம்.எம்.கே | 21701 |
4 | A. சண்முகராஜ் | பாஜக | 2784 |
5 | T. சந்திரசேகரன் | ஜே.எம்.எம் | 2308 |
6 | R. முருகன் | சுயேச்சை | 1838 |
7 | J. சிவசுப்ரமணியன் | சுயேச்சை | 1628 |
8 | M. கதிரேசன் | சுயேச்சை | 935 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT