Published : 05 Apr 2016 04:09 PM
Last Updated : 05 Apr 2016 04:09 PM
பிரசித்திபெற்ற ஓரியூர் தேவாலயம், தேவிபட்டினத்தில் கடலுக்குள் அமைந்துள்ள நவபாஷான கோயில், தமிழகத்தின் 2வது பெரிய ஏரியான ஆர்.எஸ்.மங்கலம் ஏரி ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. திருவாடானை தொகுதி. திருவாடானை வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்கள் மற்றும் ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி பேரூராட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேலும் ராமநாதபுரம் வட்டத்தின் ஒரு பகுதியான பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்தூர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந்தல், தேவிபட்டினம், பெருவயல், குமரியேந்தல், காவனூர், காரேந்தல், புல்லங்குடி, சித்தார்கோட்டை, அத்தியூத்து, பழங்குளம், தொருவளூர், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டணம்காத்தான், திருவொத்தியகழுகூரணி, தேர்போகி, அழகன்குளம், சக்கரக்கோட்டை, கூரியூர், அச்சுந்தன்வயல், லாந்தை, பனைக்குளம், மாலங்குடி மற்றும் எக்ககுடி கிராமங்கள் இத்தொகுதியில் இடம் பெற்றுள்ளன. ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் இத்தொகுதிக்குள்தான் வருகிறது.
அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, ஒரு தனியார் பொறியியல் கல்லூரி, 3கலைக்கல்லூரிகள் இடம் பெற்றுள்ளனர். கல்வி நிலையங்கள் இத்தொகுதியில் மிகக்குவு.
மாவட்டத்தின் நெற்களஞ்சியமான திருவாடானையில், முதலிடத்தில் விவசாயமும், அடுத்ததாக மீன்பிடித் தொழிலும் உள்ளன. திருப்பாலைக்குடி முதல் தொண்டி வரையிலான கடற்கரை பகுதி மக்கள் இன்னும் குடிநீருக்கு அலையும் நிலை உள்ளது. காவிரி குடிநீர் வந்தும் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படவில்லை. தொகுதியின் பெரும்பாலான மக்கள் ரயில்போக்குவரத்தை கண்டதில்லை. இங்குள்ள கண்மாய்களை முழுமையாக தூர்வார வேண்டும், தேவிபட்டினம், திருப்பாலைக்குடி,தொண்டி பகுதிகளில் மீன் இறங்கு தளங்கள் அமைக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
தொகுதியில் முக்குலத்தோர்,, ஆதிதிராவிடர், முஸ்லிம், கிறிஸ்தவர், யாதவர் கணிசமாக வசிக்கின்றனர்.
1952 முதல் 2011 வரை 14 முறை நடந்த சட்டப்பேரவை தேர்தலில் சுயேச்சை வேட்பாளர்கள் மற்றும் சுதந்திரா கட்சியினர் தலா 2 முறையும், காங்கிரஸ் 5 முறையும், திமுக மற்றும் தமாகா தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2006 தேர்தலில் காங்கிரஸ் உறுப்பினர் கே.ஆர்.ராமசாமியும், கடைசியாக 2011ல் நடந்த தேர்தலில திமுக சார்பில் சுப.தங்கவேலனும் வெற்றி பெற்றனர்.
2016 தேர்தலில் கலம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | சே.கருணாஸ் | அதிமுக |
2 | த.திவாகரன் | திமுக |
3 | வி.மணிமாறன் | தேமுதிக |
4 | வே.பாண்டி | பாமக |
5 | டி.தேவநாதன் யாதவ் | பாஜக |
6 | ரா.ராஜீவ்காந்தி | நாம் தமிழர் |
7 | பெ.ஜான்பாண்டியன் | தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருவாடானை தாலுகா
இராமநாதபுரம் தாலுகா (பகுதி)
பாண்டமங்கலம், ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்தூர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந்தல், தேவிபட்டினம், பெருவயல், குமரியேந்தல், காவனூர், காரேந்தல், புல்லங்குடி, சித்தர்கோட்டை, அத்தியூத்து, பழங்குளம், தொருவளுர், வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டிணம்காத்தான், திருவொத்தியகழுகூரணி, தேர்போகி,திருப்பாலைக்குடி, புதுவலசை, அழகன்குளம், சக்கரக்கோட்டை, கூரியூர், அச்சுந்தன்வயல், லாந்தை, பனைக்குளம், மாலங்குடி மற்றும் எக்ககுடி கிராமங்கள்.
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,37,440 |
பெண் | 1,35,985 |
மூன்றாம் பாலினத்தவர் | 28 |
மொத்த வாக்காளர்கள் | 2,73,453 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1952 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்ற வேட்பாளர் | கட்சி | வாக்கு விழுக்காடு |
2011 | சுப. தங்கவேலன் | திமுக | |
2006 | க. ரா. இராமசாமி | இ.தே.கா | 46.94 |
2001 | க. ரா. இராமசாமி | த.மா.கா | 39.12 |
1996 | க. ரா. இராமசாமி | த.மா.கா | 61.77 |
1991 | இராமசாமி அம்பலம் | இ.தே.கா | 62.92 |
1989 | இராமசாமி அம்பலம் | இ.தே.கா | 35.56 |
1984 | K.சொர்ணலிங்கம் | இ.தே.கா | 47.8 |
1980 | S.அங்குச்சாமி | அதிமுக | 37.96 |
1977 | கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம் | இ.தே.கா | 36.75 |
1971 | பி.ஆர்.சன்முகம். | தி.மு.க. | |
1967 | கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம் | சுதந்திராக் கட்சி | |
1962 | கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம் | சுதந்திராக் கட்சி | |
1957 | கரு. இராம. கரிய மாணிக்கம் அம்பலம் | சுயேச்சை | |
1952 | செல்லதுரை | சுயேச்சை |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K.R. ராமசாமி | காங்கிரஸ் | 55198 |
2 | C. ஆனிமுத்து | அ.தி.மு.க | 49945 |
3 | P. திருவேங்கடம் | தே.மு.தி.க | 6091 |
4 | S. இருளையா | பி.ஜே.பி | 2064 |
5 | K. சுப்பிரமணியன் | பி.எஸ்.பி | 1485 |
6 | R. லியாகத் அலி | சுயேச்சை | 1444 |
7 | A. ராவுத்தர் நாயினார் முகமது | சுயேச்சை | 739 |
8 | S. சிவா | எஸ்.பி | 639 |
117605 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | தங்கவேலன் சுபா | தி.மு.க | 64165 |
2 | S. முஜிபுபுர் ரஹமான் | தே.மு.தி.க | 63238 |
3 | U. பாண்டிவேலு | சுயேச்சை | 6667 |
4 | பவுலின் தர்சிஸ் | ஐ.டி.பி | 3919 |
5 | U. கருப்பையா | ஜே.எம்.எம் | 3871 |
6 | மகாலிங்கம் சிவா | ப.ஜா.க | 3632 |
7 | R. செல்வம் | சுயேச்சை | 2201 |
8 | S.S. பாலகிருஷ்ணன் | சுயேச்சை | 1448 |
9 | V. காஸ்பர் | சுயேச்சை | 1390 |
10 | V. சாகுல் ஹமித் | சுயேச்சை | 1252 |
11 | M. செந்தில் ராமு | பகுஜன் | 986 |
12 | S. ராஜேந்திரன் | சுயேச்சை | 960 |
13 | S. முஜிபுர் ரஹமான் | சுயேச்சை | 751 |
14 | U. முருகேசன் | சுயேச்சை | 700 |
15 | முத்து ராமலிங்கம் | சுயேச்சை | 449 |
16 | K. செல்லதுரை | சுயேச்சை | 443 |
156072 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT