Published : 05 Apr 2016 04:06 PM
Last Updated : 05 Apr 2016 04:06 PM
திருமயத்தில் உள்ள ஒரே குன்றில் சிவன், பெருமாள் குடைவரை கோயில்கள் உள்ளன. இவ்விரு கோயில்களும் பல்லவ மன்னர்களால் மலையை குடைந்து கட்டப்பட்டுள்ளன. கோயிலில் ஒரே கல்லில் 21 அடி நீள பெருமாள் சிலை அனந்த சயன நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு விழா பிரசித்தி பெற்றதாகும். பிரசித்தி பெற்ற பழமையான கோவில்கள், கட்டிடங்கள் கம்பீரமாக காட்சி அளிக்கின்றன. மேலும் இப்பகுதி சோழ பாண்டிய நாடுகளை பிரிக்கும் எல்லையாக இருந்து உள்ளது.
திருமயம் வரலாற்று சிறப்பு மிக்க கோட்டை உள்ளது. இங்கு ஊமைத்துரை தலைமறைவாக தங்கி இருந்ததால், இக்கோட்டை ஊமைத்துரை கோட்டை என்று அழைக்கப்பட்டு வருகிறது. மேலும் திருமயம் முன்னாள் முதல் அமைச்சர் காமராஜரின் அரசியல் குருவான சத்தியமூர்த்தி பிறந்து வாழ்ந்த ஊராகும்.
திருமயத்தில் இருந்து 15-வது கிலோ மீட்டர் தூரத்தில் காட்டுபாவா பள்ளிவாசல் அமைந்துள்ளது. இந்த தர்காவில் இந்து, முஸ்லீம் என மத பேதமின்றி அனைவரும் வழிபடுகின்றனர். இது மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
காங்கிரஸ் அதிகம்
இதுவரை நடைபெற்ற திருமயம் தொகுதியில் 13 சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் 6 முறையும், தி.மு.க. 3 முறையும், அ.தி.மு.க. 3 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
இத்தொகுதியில் முத்தரையர், கள்ளர், மறவர் இன மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.
திருமயம் சட்டப்பேரவைத் தொகுதி சிவகங்கை மக்களவைத் தொகுதியோடு சேர்ந்தது. இத்தொகுதியில் திருமயம், பொன்னமராவதி ஒன்றிய பகுதிகள், அரிமளம் பேரூராட்சியும் இணைக்கப்பட்டுள்ளன.
திருமயம் சட்டமன்ற தொகுதியில் பிரதான தொழில் விவசயம். இங்குள்ள நிலங்கள் வானம் பார்த்த பூமியாகத்தான் இருந்து வருகிறது.
மழை பெய்தால்தான் விவசாயம் நடைபெறும். இதனால் விவசாயம் தொடர்ந்து நடைபெற கொள்ளிடம் காவிரி நீரை புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கொண்டு வர வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.
சுதந்திர போராட்ட தியாகி சத்தியமூர்த்திக்கு திருமயத்தில் மணிமண்டபம் கட்ட வேண்டும். அவர் பிறந்து வாழ்ந்த வீட்டை நினைவிடமாக மாற்ற வேண்டும். திருமயம் பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.
திருமயத்தில் இருந்து மதுரை செல்லும் சாலையில் 3 கிலோ மீட்டர் தூரத்தில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்பட்டு வந்த சித்த மருந்து தயாரிக்கும் தற்போது மூடப்பட்டுள்ளது. அதனை மீண்டும் திறந்து செயல்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.
இத்தொகுதியில் கடந்த 2011-ல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பி. கே. வைரமுத்து 78,913 வாக்குகளும், காங்கிரஸ் வேட்பாளர் ராம.சுப்புராம் 47,778 வாக்குளும் பெற்றனர். அதில் வைரமுத்து 31,135 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | பி.கே. வைரமுத்து | அதிமுக |
2 | எஸ். ரகுபதி | திமுக |
3 | பிஎல்.ஏ. சிதம்பரம் | தமாகா |
4 | ஏ . சுரேஷ் | பாமக |
5 | பி. வடமலை | பாஜக |
6 | எம். கனகரத்தினம் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருமயம் தாலுக்கா (பாலக்குறிச்சி கிராமம் தவிர)
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,02,471 |
பெண் | 1,05,727 |
மூன்றாம் பாலினத்தவர் | - |
மொத்த வாக்காளர்கள் | 2,08,198 |
2006 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | சுப்புராம்.R.M | காங்கிரஸ் | 47358 |
2 | ராதாகிருஷ்ணன் | அதிமுக | 47044 |
3 | கிருஷ்ணன் | பாஜக | 10490 |
4 | முருகேசன் | தேமுதிக | 7863 |
5 | செல்லக்கண்ணு | பகுஜன் சமாஜ் கட்சி | 1581 |
6 | ராதாகிருஷ்ணன் | சுயேச்சை | 1462 |
7 | வெங்கடேசன் | டி.என்.ஜே.சி | 618 |
8 | நாராயணன் | சுயேச்சை | 607 |
9 | ரவிச்சந்திரன் | சுயேச்சை | 525 |
10 | சுப்பிரமணியன் | சுயேச்சை | 438 |
117986 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | வைரமுத்து.P.K | அதிமுக | 78913 |
2 | சுப்புராம்.R.M | காங்கிரஸ் | 47778 |
3 | வடமலை.P | பாஜக | 2686 |
4 | இளங்கோ.R | சுயேச்சை | 1457 |
5 | ராதாகிருஷ்ணன் | சுயேச்சை | 1046 |
6 | சஞ்சய் காந்தி.S | பகுஜன் சமாஜ் கட்சி | 1021 |
7 | அரிமளம் தியாகி M சுப்ரமணிய முத்தரையர் | சுயேச்சை | 927 |
8 | முரளி (எ) மீனாட்சி சுந்தரம் | சுயேச்சை | 560 |
9 | பாலமுருகன்.C | சுயேச்சை | 541 |
10 | பாண்டியராஜன்.S | சுயேச்சை | 500 |
135429 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT