Published : 05 Apr 2016 03:58 PM
Last Updated : 05 Apr 2016 03:58 PM
மாநிலத்தில் மிகக்குறைவான மக்கள் தொகை கொண்ட மாவட்டம் பெரம்பலூர். 1995ல் திருச்சியிலிருந்து தனிக்குடித்தனம் பெற்று பெரம்பலூர் மாவட்டம் உதயமானது. மறுசீரமைப்பின் கீழ் பெரம்பலூர்(தனி) மற்றும் அரியலூர் வருவாய் மாவட்டத்தின் பகுதியளவை அடக்கிய குன்னம் என, ஒன்றரை சட்டமன்ற தொகுதிகள் பெரம்பலூர் மாவட்டத்தில் உண்டு. இந்த வகையில் மாவட்டத்தின் முழுமையான ஒரே சட்டமன்ற தொகுதி பெரம்பலூர்(தனி).
பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம்(பகுதியளவு) ஆகிய வட்டங்களை உள்ளடக்கிய இத்தொகுதியில், கணிசமான தலித் மக்கள் தவிர்த்து பரவலான இதர சமூக மக்களும், இஸ்லாமிய மக்களும் உள்ளனர். விவசாயம் பிரதான தொழில். சின்ன வெங்காயம், மக்காச்சோளம், பருத்தி போன்றவற்றில் மாநில அளவில் முதல் வரிசையில் இடம் பிடித்திருக்கிறது. கல் குவாரிகளால் அதிகளவில் கனிமம் வேட்டையாடப்படும் தொகுதி. தொல்லியல் துறை பராமரிப்பில் இருக்கும் ரஞ்சன்குடி கோட்டை தொகுதியின் வரலாற்று சிறப்பு. வேப்பந்தட்டை வட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் மலைச்சாரலும், நீர்வீழ்ச்சிகளும் உண்டு. அண்மைய சிறப்பு விசுவக்குடி அணை. எம்.ஆர்.எஃப் தனியார் தொழிற்சாலையும் உண்டு. ஜவுளிப்பூங்கா, ஆவின் பால் பண்ணை ஆகியவை உருவாகி வருகின்றன.
பல தேர்தல் வாக்குறுதிகளுக்கு பிறகும் தமிழகத்தில் ரயில் பாதை இல்லாத குறை பெரம்பலூர் மக்களுக்கு உண்டு. பிரதான தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருப்பது இந்தக் குறையை ஓரளவு ஈடேற்றுகிறது. விவசாயத்திற்கும், குடிநீருக்குமாக தண்ணீர் தேவை பற்றாக்குறை நிலவுகிறது. அண்மையில் திறப்பு விழா கண்ட விசுவக்குடி வரிசையில், சின்னமுட்லு நீர்த்தேக்கத்தை பகுதி விவசாயிகள் அதிகம் எதிர்பார்க்கின்றனர். தனியார் கல்வி நிலையங்கள் ஏராளம். கல் குவாரிகளால் நிலத்தடி நீர்மட்ட பாதிப்பு, கனிம சுரண்டல் என எதிர்காலத்திற்கான அச்சுறுத்தல்கள் அதிகம். பெருமளவில் கிராமங்களை உள்ளடக்கிய தொகுதியில் உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். மேலும் அதிக எண்ணிக்கையில் இருக்கும் தலித் மக்களின் மேம்பாட்டிற்கான சிறப்பு திட்டங்கள் இங்கே குவியம் பெற வேண்டும். காங்கிரஸ் 2 முறையும், சுயேட்சை மற்றும் சிபிஐ தலா 1 முறையும் வென்றது போக திமுக-6, அதிமுக-4 என சட்டமன்ற பிரதிநிதிகளை அரசியல் கட்சிகள் அனுப்பியுள்ளன. அதிலும் கடந்த கால் நூற்றாண்டாக தமிழகத்தை ஆளும் கட்சிக்கான பிரதிநிதிகளே இங்கே மாறிமாறி தேர்வாகிறார்கள்.
இந்த வகையில் தற்போதைய எம்.எல்.ஏவான இரா.தமிழ்செல்வன் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதில் தடுமாறி இருக்கிறார். இளைஞரான இவரது செயல்பாடுகளால் தமிழக அமைச்சரவை இசை நாற்காலியில், அமைச்சர் பிரதிநிதித்துவத்தை பெரம்பலூர் இழந்துள்ளது. ஆனால் இந்த இழப்புகளை பெரம்பலூரின் முன்னாள் ஆட்சியரான தரேஸ் அஹமது போன்ற அதிகாரிகளே ஓரளவு சமன் செய்திருக்கார்கள்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | ரா.தமிழ்ச்செல்வன் | அதிமுக |
2 | ப.சிவகாமி | திமுக - சமூக சமத்துவப்படை |
3 | கி.ராஜேந்திரன் | தேமுதிக |
4 | மு.சத்தியசீலன் | பாமக |
5 | மு.கலியபெருமாள் | பாஜக |
6 | நெ.அருண்குமார் | நாம் தமிழர் |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
• வேப்பந்தட்டை வட்டம்
• பெரம்பலூர் வட்டம்
• குன்னம் வட்டம் (பகுதி)
சிறுகவயல், நக்கசேலம், எலந்தலப்பட்டி, டி.களத்தூர், புது அம்மா பாளையம், கன்னப்பாடி, தேனூர், மாவிலங்கை, நாரணமங்கலம், நாட்டார்மங்கலம், செட்டிகுளம், இரூர், பாடலூர் (மேற்கு) மற்றும் பாடலூர் (கிழக்கு) கிராமங்கள
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,36,003 |
பெண் | 1,42,372 |
மூன்றாம் பாலினத்தவர்: | 14 |
மொத்த வாக்காளர்கள் | 2,78,389 |
பெரம்பலூர் (தனி) சட்டமன்ற தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | பரமசிவம் | சுயேச்சை | 25411 | 16.1 |
1957 | கே. பெரியண்ணன் | காங்கிரஸ் | 20375 | 11.76 |
1962 | டி. பி. அழகுமுத்து | திமுக | 38686 | 55.38 |
1967 | ஜெ. எஸ். இராஜ் | திமுக | 33657 | 51.03 |
1971 | ஜெ. எஸ். இராஜ் | திமுக | 39043 | 55.28 |
1977 | எஸ். வி. இராமசாமி | அதிமுக | 37400 | 56.53 |
1980 | ஜெ. எஸ். இராஜ் | திமுக | 28680 | 40.98 |
1984 | கே. நல்லமுத்து | காங்கிரசு | 57021 | 63.88 |
1989 | ஆர். பிச்சைமுத்து | இந்திய பொதுவுடமைக் கட்சி | 34829 | 34.51 |
1991 | டி. செழியன் | அதிமுக | 76202 | 70.69 |
1996 | எம். தேவராசன் | திமுக | 64918 | 55.07 |
2001 | பி. இராசரத்தினம் | அதிமுக | 67074 | 53.45 |
2006 | எம். இராஜ்குமார் | திமுக | 60478 | --- |
2011 | ஆர்.தமிழ்செல்வன் | அதிமுக | 98497 | --- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1951 | பழனிமுத்து | தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி | 19756 | 12.52 |
1957 | கிருஷ்ணசாமி | காங்கிரசு | 38975 | 22.49 |
1962 | ஆர். இராம ரெட்டியார் | காங்கிரசு | 31168 | 44.62 |
1967 | எம். அய்யாக்கண்ணு | காங்கிரசு | 28864 | 43.76 |
1971 | கே. பெரியண்ணன் | ஸ்தாபன காங்கிரசு | 23335 | 33.04 |
1977 | கே. எஸ். வேலுசாமி | திமுக | 16459 | 24.88 |
1980 | எம். அங்கமுத்து | அதிமுக | 24224 | 34.62 |
1984 | டி. சரோஜினி | திமுக | 27751 | 31.09 |
1989 | எம். தேவராசன் | திமுக | 34398 | 34.09 |
1991 | எம். தேவராசன் | திமுக | 25868 | 24 |
1996 | எஸ். முருகேசன் | அதிமுக | 41517 | 35.22 |
2001 | எஸ். வல்லபன் | திமுக | 47070 | 37.51 |
2006 | எம். சுந்தரம் | அதிமுக | 53840 | --- |
2011 | எம்.பிரபாகரன் | திமுக | 79418 | --- |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | ராஜ்குமார்.M | திமுக | 60478 |
2 | சுந்தரம்.M | அதிமுக | 53840 |
3 | மணிமேகலை.P | தேமுதிக | 12007 |
4 | புகழேந்தி.C | சுயேச்சை | 2481 |
5 | பாஸ்கரன்.K | சுயேச்சை | 1934 |
6 | பிச்சைமுத்து.R | பாஜக | 1530 |
7 | நீதிராஜா.P | சுயேச்சை | 459 |
8 | ஸ்டாலின்.R | லோக சனசக்தி கட்சி | 439 |
9 | ராஜபாண்டியன்.R | பகுஜன் சமாஜ் கட்சி | 425 |
10 | சரவணன்.K | சுயேச்சை | 270 |
133863 |
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | தமிழ்செல்வன்.R | அதிமுக | 98497 |
2 | பிரபாகரன்.M | திமுக | 79418 |
3 | ஜெயபாலாஜி.J | இந்திய ஜனநாயக கட்சி | 3668 |
4 | ரவிச்சந்திரன்.S | சுயேச்சை | 2020 |
5 | கிருஷ்ணமூர்த்தி.S | பகுஜன் சமாஜ் கட்சி | 1851 |
6 | செல்லமுத்து.V.P | சுயேச்சை | 1442 |
7 | சுபாஷினி.V | சுயேச்சை | 1117 |
8 | ஷ்யாம் சுந்தர்.G | சுயேச்சை | 712 |
188725 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT