Published : 19 May 2016 09:04 AM
Last Updated : 19 May 2016 09:04 AM
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இரவு 8 மணி நிலவரப்படி அதிமுக கூட்டணி 134 தொகுதிகளையும், திமுக கூட்டணி 98 தொகுதிகளையும் (திமுக 89, காங்கிரஸ் 8, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1) வசப்படுத்துகின்றன. | அதன் முழு விவரம்: >தமிழகத்தில் அதிமுக ஆட்சி: மீண்டும் முதல்வர் ஆகிறார் ஜெயலலிதா; வலுவான எதிர்க்கட்சியாக திமுக!
கூட்டணி வாரியாக - முடிவுகள் | |
---|---|
தொகுதிகள்-232/234 பெரும்பான்மைக்கு 118 | |
அணிகள் | முன்னிலை / வெற்றி |
அதிமுக கூட்டணி | 134 |
திமுக கூட்டணி | 98 |
தேமுதிக - ம.ந.கூ | 00 |
பாமக | 00 |
பாஜக கூட்டணி | 00 |
நாம் தமிழர் | 00 |
முக்கிய செய்திகள்:
அதிமுகவையும், திமுகவையும் தவிர்த்துப் பார்த்தால், திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வாக்கு வீதத்தில் மூன்றாம் இடத்தில் உள்ளது. மற்ற கட்சிகளின் வாக்கு சதவீதம் அறிய: >வாக்கு சதவீதத்தில் தேமுதிகவை முந்திய பாமக, பாஜக
தமிழக சட்டப்பேரவையில் திமுக சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படும் என அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முழு விவரம்: >சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்படுவோம்: ஸ்டாலின்
தமிழ்நாட்டில் மக்கள் நலனையும், ஜனநாயகத்தையும் காக்க நாங்கள் அமைத்துள்ள ஆறு கட்சிகளின் கூட்டணி மிக்க உறுதியுடன், வலுவாக தமிழக அரசியல் களத்தில் இயங்கும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். அதன் முழு விவரம்: >உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம்: வைகோ உறுதி
எல்லா நேரங்களிலும் சத்தியமே ஜெயிக்கும் என்பதை வரும் காலங்கள் உணர்த்தும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். அதன் முழு விவரம்: >தர்மம் மீண்டும் வெல்லும்: விஜயகாந்த் நம்பிக்கை
2016 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, தமிழக மக்களாலேயே சாத்தியமானதாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அதம் முழு விவரம்: >மக்களால்தான் வரலாற்றுச் சிறப்பு சாத்தியமானது: ஜெயலலிதா வெற்றிப் பேச்சு
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் தொல்.திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். முழு விவரம்: >திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி
சென்னையில் உள்ள 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அதிமுக 11 தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளது. முழு விவரம்: >சென்னையில் 16-ல் 11 தொகுதிகளில் அதிமுக பின்னடைவு
மதியம் 1.30 மணி நிலவரப்படி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக அதிக அளவில் வாக்கு சதவீதம் பெற்றுள்ளது. முழு விவரம்: >பிற்பகல் 1.30 மணி: கட்சிகளின் வாக்கு சதவீத விவரம்
திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். முழு விவரம்: >திருவாரூரில் திமுக தலைவர் கருணாநிதி வெற்றி
நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹெச்.வசந்தகுமார் வெற்றி பெற்றார். முழு விவரம்: >நாங்குநேரியில் ஹெச்.வசந்தகுமார் வெற்றி
அதிமுகவின் வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார். முழு விவரம்: >வெற்றிக்கு உழைத்த அனைவருக்கும் நன்றி: ஜெயலலிதா
அதிமுக ஐவர் அணியில் இருவர் பின்னடைவை சந்தித்துள்ளனர். ஒரத்தநாட்டில் அமைச்சர் வைத்திலிங்கம் தோல்வியடைந்தார். முழு விவரம்: >'அதிமுக ஐவர் அணி'யில் இருவர் பின்னடைவு; ஒருவர் தோல்வி
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து பின்னடைவில் இருக்கிறார். விரிவான செய்திக்கு... >கடலூர் தொகுதியில் சீமான் கடும் பின்னடைவு
சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். விரிவான செய்திக்கு... >கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து முன்னிலை
தமிழகத்தில் மக்கள் தீர்ப்பு என்ன என்பதை இப்போது அறிந்துவருவீர்கள். இந்த 2016 தேர்தல் முடிவுகள் உணர்த்துவது என்ன? விரிவான செய்திக்கு... >தேர்தல் முடிவுகள் 2016 உணர்த்துவது என்ன?
ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்துள்ளார். விரிவான செய்திக்கு... >ஜெயலலிதாவுக்கு பிரதமர் மோடி தொலைபேசியில் வாழ்த்து
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். விரிவான செய்திக்கு... >பென்னாகரத்தில் 3-வது இடத்தில் அன்புமணி
ஆத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நத்தம் விஸ்வநாதன் பின்தங்கியுள்ளார். விரிவான செய்திக்கு... >ஆத்தூர் தொகுதியில் நத்தம் விஸ்வநாதன் பின்னடைவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி- தமாகா அணி எந்த ஒரு தொகுதியிலும் முன்னணி பெறவில்லை. இதனால் தேமுதிக அலுவலகம் வெறிச்சோடி காணப்படுகிறது. விரிவான செய்திக்கு... >கடும் பின்னடைவால் வெறிச்சோடியது தேமுதிக அலுவலகம்
உளுந்தூர்பேட்டையில் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் 5325 வாக்குகள் பின்தங்கியுள்ளார். விரிவான செய்திக்கு... >உளுந்தூர்பேட்டையில் ம.ந.கூ முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் பின்னடைவு
காலை 10 மணி நிலவரப்படி அதிமுக 42% வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. மற்ற கட்சிகளின் வாக்கு சதவீதம் அறிய... >முதல் சுற்று முடிவில் கட்சிகளின் வாக்கு சதவீதம் எவ்வளவு?
திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. விரிவான செய்திக்கு... >திருப்பூரில் 8 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலை
சென்னை டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். 5424 வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயலலிதா முன்னிலை வகிக்கிறார். விரிவான செய்திக்கு... >ஆர்.கே.நகரில் ஜெயலலிதா முன்னிலை
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி அதிமுக கூட்டணி 118 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 81 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கன்றன. விரிவான செய்திக்கு... >தேர்தல் முடிவுகள் 10 மணி நிலவரம்: அதிமுக முன்னிலை
> தமிழக தேர்தல் முடிவுகள் 2016 - முழு நிலவரம் அறிவதற்கான சிறப்புப் பக்க இணைப்பு>>http://tamil.thehindu.com/tamilnadu/election2016/
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை தொடங்கியது. தமிழகத்தில் புதிய சட்டப்பேரவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய மே 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அதிகளவு பணப்பட்டுவாடா புகார் காரணமாக அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 65 ஆயிரத்து 486 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT