Published : 05 Apr 2016 04:07 PM
Last Updated : 05 Apr 2016 04:07 PM
நீலகிரி மாவட்டத்தில் தனித்தொகுதியாக இருந்த குன்னூர் சட்டப்பேரவை தொகுதி கடந்த 2011ம் ஆண்டு தொகுதி மறு சீரமைப்புக்கு பின்னர் பொதுத்தொகுதியாக மாற்றப்பட்டது.
இந்த தொகுதியின் அடையாளங்கள் குன்னூரில் உள்ள மத்திய அரசின் நிறுவனங்களான பாஸ்டியர் ஆய்வகம் மற்றும் அருவங்காட்டில் உள்ள வெடிமருந்து தொழிற்சாலைகள். மேலும், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளதால் விஐபி அந்தஸ்து பெற்றுள்ளது.
குன்னூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்டு குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய இரு தாலுக்காக்கள் உள்ளன. காய்கறி மற்றும் தேயிலை விவசாயம் பிரதான தொழில். படுகரின மக்களுக்கு அடுத்தாக இந்து, இஸ்லாமிய மக்கள் கணிசமானோர் வசிக்கின்றனர். மேலும், இருளர் மற்றும் குறும்பரின பழங்குடியினரும், கணிசமான தாயகம் திரும்பியோர் வசிக்கின்றனர்.
தேயிலை தோட்டங்கள் நிறைந்த இந்த சட்டப்பேரவை தொகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாய தொழிலாளர்கள்.
குன்னூரில் அரசு மற்றும் தனியார் தேயிலை ஏல மையங்கள் உள்ளன. இதனால் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் குடோன்கள் இப்பகுதியில் அமைந்துள்ளன. தேயிலை தொழிலை சார்ந்து சுமார் ஒரு லட்சம் பேர் உள்ளனர்.
பசுந்தேயிலைக்கு விலை இல்லாததால் பெரும்பாலான தேயிலை தோட்டங்கள் விற்கப்பட்டு வருகின்றன. இவற்றை வாங்குபவர்கள் தேயிலை தோட்டங்களை அழித்து ஆடம்பர பங்களாக்களை எழுப்பி வருகின்றனர். இதனால் உள்ளூர் மக்கள் வேலை வாய்ப்பு இழந்து பிழைப்பு தேடி சமவெளிப்பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். மேலும், தேயிலை குடோன்கள் மேட்டுப்பாளையத்துக்கு மாற்றப்பட்டு வருவதால், ஆயிரத்துக்கு மேற்பட்ட பாரம் தூக்கும் தொழிலாளர்கள் வேலை இழப்பை எதிர்நோக்கியுள்ளனர்.
மிகவும் குறுகிய நகரமான குன்னூரின் பிரதான பிரச்சினை ஆக்கிரமிப்பு மற்றும் தண்ணீர்.
நகரின் தண்ணீர் தேவையை போக்க கரன்சி குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் முறையாக இத்திட்டம் செயல்படுத்தப்படாததால் பல ஆண்டுகளாக பயனற்று கிடக்கிறது.
குன்னூர் பேருந்து நிலைய விரிவாக்கம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. குன்னூர் நகரின் நுழைவுவாயில் மலை ரயில் பாதை உள்ளது. காலை 10 மற்றும் மதியம் 3 மணிக்கு மலை ரயில் வரும் போது வாயில் மூடப்படுவதால், தினமும் இங்கு போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக மக்கள் கோரி வருகின்றனர். ஆனால் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பசுந்தேயிலைக்கு ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.30 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தலுக்கு தேர்தல் வாக்குறுதி அளிக்கப்படாலும் இது வரை விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.
திமுகவின் கோட்டையாக கருதப்படும் குன்னூர் சட்டப்பேரவை தொகுதியில் 2006ல் சவுந்திரபாண்டின்(திமுக) மற்றும் 2011ல் க.ராமசந்திரன்(திமுக) வெற்றி பெற்றனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1. | சாந்தி ஏ,ராமு | அதிமுக |
2. | பா.மு.முபாரக் | திமுக |
3. | வி.சிதம்பரம் | தேமுதிக |
4. | கே.வி.செந்தில்குமார் | பாமக |
5. | பி.குமரன் | பாஜக |
6. | பி.ராமசாமி | நாம் தமிழர் |
2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிகள்
கோத்தகிரி வட்டம்
குன்னார் வட்டம் (பகுதி)
எட்டப்பள்ளி, பர்லியார், குன்னூர் மற்றும் மேலூர் கிராமங்கள்,
அரவங்காடு (டவுன்ஷிப்), வெலிங்கடன் (கண்டோன்மெண்ட் போர்டு), குன்னூர் (நகராட்சி), ஹப்பதலா (சென்சஸ் டவுன்), அதிகரட்டி (பேரூராட்சி) மற்றும் உலிக்கல் (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 89,978 |
பெண் | 96,889 |
மூன்றாம் பாலினத்தவர் | 1 |
மொத்த வாக்காளர்கள் | 1,86,868 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1957 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | ஆண்டு |
1957 | ஜெ. மாதே கவுடர் | காங்கிரஸ் | 22113 | 44.56 | 1957 |
1962 | ஜெ. மாதே கவுடர் | காங்கிரஸ் | 36668 | 51.65 | 1962 |
1967 | பி. கவுடர் | திமுக | 31855 | 58.74 | 1967 |
1971 | ஜெ. கருணைநாதன் | திமுக | 33451 | 60.84 | 1971 |
1977 | கே. அரங்கசாமி | திமுக | 22649 | 42.33 | 1977 |
1980 | எம். அரங்கநாதன் | திமுக | 34424 | 56.85 | 1980 |
1984 | எம். சிவக்குமார் | அதிமுக | 47113 | 56.7 | 1984 |
1989 | என். தங்கவேல் | திமுக | 40974 | 42.38 | 1989 |
1991 | எம். கருப்புசாமி | அதிமுக | 53608 | 59.4 | 1991 |
1996 | என். தங்கவேல் | திமுக | 63919 | 64.27 | 1996 |
2001 | கே. கந்தசாமி | தமாகா | 53156 | 55.86 | 2001 |
2006 | எ. சவுந்தரபாண்டியன் | திமுக | 45303 | --- | 2006 |
2011 | கா.ராமச்சந்திரன் | திமுக | 61302 | --- | 2011 |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1957 | எச். பி. அரி கவுடர் | சுயேச்சை | 16845 | 33.94 |
1962 | ஜெ. பெல்லி | திமுக | 15103 | 21.27 |
1967 | எம். கே. என். கவுடர் | காங்கிரஸ் | 22380 | 41.26 |
1971 | என். ஆண்டி | ஸ்தாபன காங்கிரஸ் | 15325 | 27.87 |
1977 | சி. பெரியசாமி | அதிமுக | 13150 | 24.58 |
1980 | சி. பெரியசாமி | அதிமுக | 22756 | 37.58 |
1984 | எம். அரங்கநாதன் | திமுக | 34990 | 42.11 |
1989 | பி. ஆறுமுகம் | காங்கிரஸ் | 29814 | 30.84 |
1991 | ஈ. எம். மாகாளியப்பன் | திமுக | 31457 | 34.86 |
1996 | எசு. கருப்புசாமி | அதிமுக | 28404 | 28.56 |
2001 | ஈ. எம். மாகாளியப்பன் | திமுக | 36512 | 38.37 |
2006 | எம். செல்வராசு | அதிமுக | 39589 | --- |
2011 | தெள்ளி | இகம்யூ | 52010 | --- |
2006 சட்டமன்ற தேர்தல் | 116. குன்னூர் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | A. சொந்தரப்பாண்டியன் | தி.மு.க | 45303 |
2 | M. செல்வராஜ் | அ.தி.மு.க | 39589 |
3 | V. சிதம்பரம் | தே.மு.தி.க | 7227 |
4 | D. அன்பரசன் | பிஜேபி | 1729 |
5 | P. ராமச்சந்திரன் | சுயேச்சை | 594 |
6 | P. தென்மதி | பிஎஸ்பி | 569 |
7 | A. அன்னக்கிளி | சுயேச்சை | 405 |
8 | P. ஆறுமுகம் | ஏஐஎப்பி | 250 |
95666 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 116. குன்னூர் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K. ராமச்சந்திரன் | தி.மு.க | 61302 |
2 | A. பெல்லி | சி.பி.இ | 52010 |
3 | M. அல்வஸ் | பிஜேபி | 3040 |
4 | அப்துல் வஹாப் | சுயேச்சை | 1231 |
5 | R. ஜோதிலிங்கம் | சுயேச்சை | 871 |
6 | V. மதிவண்ணன் | சுயேச்சை | 803 |
7 | M.G. லியோன் ஜெரால்டு திலக் | பகுஜன் | 798 |
8 | V. இசக்கிமுத்து | சுயேச்சை | 612 |
9 | N. லெனின் | ஐஜேகே | 348 |
121015 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT