Published : 05 Apr 2016 04:07 PM
Last Updated : 05 Apr 2016 04:07 PM
நீலகிரி மாவட்டத்தில் உள்ளது கூடலூர் தொகுதி. கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களை உள்ளடக்கியது. பொது தொகுதியாக இருந்த இந்த சட்டப்பேரவை தொகுதி கடந்த 2011ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது.
சுற்றுலாவுக்கு போதுமான வாய்ப்பு இல்லாத நிலையில், இங்கு விவசாயமே பிரதான தொழில். தேயிலை, காபி, வாழை, குறுமிளகு, பாக்கு, நெல், ஏலக்காய் என பொன் விளையும் பூமியாக கருதப்படுகிறது. கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையில் இந்த சட்டப்பேரவை தொகுதி அமைந்துள்ளதால், இங்குள்ளவர்கள் மருத்துவம் உள்ளிட்ட தேவைக்களுக்கு அந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர்.
இங்கு தாயகம் திரும்பியோர், பழங்குடியினர் மற்றும் இதர மக்கள் வசிக்கின்றனர்.
இந்த சட்டப்பேரவை தொகுதியின் பிரதான பிரச்சினைகளின் ஒன்று செக்சன் 17 பிரச்சினை, தனியார் காடுகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் மனித - விலங்கு மோதல்கள்.
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான நிலங்கள் செக்சன் 17 நிலங்களாகும். இந்த நிலங்கள் இது வரை வகைப்படுத்தப்படாததால், இந்த நிலங்களில் வசிப்பவர்களுக்கு அடிப்படை வசதிகளான சாலை, மின்சாரம் கிடைப்பதில் சிரமம் உள்ளது. மேலும், இங்கு நிலங்கள் வகைப்படுத்தப்படாததால் வனப்பகுதி பல பிரிவுகளாக சிதறியுள்ளது. இதனால், யானை உள்ளிட்ட விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு நுழைவதால் மனித-விலங்கு மோதல் ஏற்படுகிறது.
கடந்த ஐந்தாண்டுகளில் சுமார் 40 பேர் யானை உள்ளிட்ட விலங்குகள் தாக்கி உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலப்பிரச்சினை தொடர்பாக உச்ச நீதிமன்றம் தமிழக அரசு முடிவு செய்துக்கொள்ளலாம் என அறிவித்தும், இது வரை அரசு எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இங்கு பல தனியார் காடுகள் உள்ளதால், இதன் உரிமையாளர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுவிடம் அனுமதி பெற்றே இந்த நிலங்களை வாங்கவோ, விற்கவோ வேண்டும் என்ற நிலையுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்ட பகுதியில் மசினகுடி உட்பட பல கிராமங்கள் உள்ளதால், இப்பகுதிகளில் வணிகரீதியான வளர்ச்சி பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்டப்பேரவை தொகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு முதல் கேரள மாநிலம் நிலம்பூர் வரை கூடலூர் வழியாக ரயில் பாதையை விரிவுப்படுத்த வேண்டும். மேலும், சிறியூர் வழியாக சத்தியமங்கலம் வரை சாலை அமைக்க வேண்டும் என்பது.
திமுகவின் கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில் கடந்த 2006ல் க.ராமசந்திரன்(திமுக) மற்றும் 2011ல் மு.திராவிடமணி(திமுக) வெற்றி பெற்றுள்ளனர்.
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | மு.திராவிடமணி | திமுக |
2 | எஸ்.கலைச்செல்வன் | அதிமுக |
3 | பி.தமிழ்மணி | மா.கம்யூ |
4 | முருகேஷ் | பாமக |
5. | பி.எம்.பரசுராமன் | பாஜக |
6. | எஸ்.கார்மேகம் | நாம் தமிழர் |
2008ஆம் ஆண்டு தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட இத்தொகுதியின் பகுதிகள்
பந்தலூர் வட்டம்
கூடலூர் வட்டம்
உதகமண்டலம் வட்டம் (பகுதி) மசினகுடி கிராமம், நடுவட்டம் (பேரூராட்சி).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 88,435 |
பெண் | 91,514 |
மூன்றாம் பாலினத்தவர் | - |
மொத்த வாக்காளர்கள் | 1,79,949 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1967 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1967 | சி. நஞ்சன் | காங்கிரஸ் | 20675 | 49.24 |
1971 | கே. எச். பொம்மன் | சுதந்திரா கட்சி | 18519 | 45.45 |
1977 | கே. ஹட்சி | திமுக | 15323 | 26.29 |
1980 | கே. ஹட்சி | திமுக | 36780 | 58.39 |
1984 | கே. ஹட்சி கவுடர் | அதிமுக | 52470 | 57.8 |
1989 | எம். கே. கரீம் | காங்கிரஸ் | 38147 | 33.61 |
1991 | கே. ஆர். இராசு | அதிமுக | 54766 | 48.46 |
1996 | பி. எம். முபாரக் | திமுக | 73565 | 59.43 |
2001 | எ. மில்லர் | அதிமுக | 78809 | 57.43 |
2006 | கே. இராமச்சந்திரன் | திமுக | 74147 | --- |
2011 | மு.திராவிட மணி | திமுக | 66871 | --- |
ஆண்டு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
1967 | பொம்மன் | சுதந்திரா கட்சி | 20047 | 47.74 |
1971 | கே. புட்டா | இந்திய பொதுவுடமைக் கட்சி | 16578 | 40.69 |
1977 | சி. ஐ. அல்லாபிச்சை | சுயேச்சை | 14963 | 25.68 |
1980 | எம். எசு. நாராயணன் நாயர் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 23636 | 37.52 |
1984 | கே. கருப்புசாமி | திமுக | 36013 | 39.67 |
1989 | டி. பி. கமலச்சன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 36867 | 32.49 |
1991 | டி. பி. கமலச்சன் | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 42460 | 37.57 |
1996 | கே. ஆர். இராசு | அதிமுக | 27660 | 22.35 |
2001 | எம். பாண்டியராசு | திமுக | 46116 | 33.61 |
2006 | எ. மில்லர் | அதிமுக | 53915 | --- |
2011 | எஸ்.செல்வராஜ் | தேமுதிக | 39497 | --- |
2006 சட்டமன்ற தேர்தல் | 115. கூடலூர் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | K. ராமச்சந்திரன் | தி.மு.க | 74147 |
2 | A. மில்லர் | அ.தி.மு.க | 53915 |
3 | L. கிருஷ்ணமூர்த்தி | தே.மு.தி,க | 7935 |
4 | B. குமரன் | பிஜேபி | 4270 |
5 | V.S. ஜான்சன் | சுயேச்சை | 1030 |
6 | M. ராஜம்மாள் | சுயேச்சை | 828 |
7 | I. தேவதாஸ் | சுயேச்சை | 753 |
8 | V. துரைச்சாமி | சுயேச்சை | 474 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 சட்டமன்ற தேர்தல் | 115. கூடலூர் | ||
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | M. திராவிடமணி | தி.மு.க | 66871 |
2 | S. செல்வராஜ் | தே.மு.தி.க | 39497 |
3 | D. அன்பரசன் | பிஜேபி | 3741 |
4 | S. விஸ்வநாதன் | சுயேச்சை | 2288 |
5 | K. செந்தில்குமார் | சுயேச்சை | 1588 |
113985 |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT