Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM

94 - நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் நாமக்கல் சட்டப்பேரவை தொகுதியும் ஒன்று. இத்தொகுதியில் நாமக்கல் நகராட்சி, புதுச்சத்திரம், மோகனூர் ஆகிய பேரூராட்சிகள் உள்ளன. அதுபோல் நாமக்கல், புதுச்சத்திரம், மோகனூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. நாமக்கல் சட்டப்பேரவை தொகுதி மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. கோழிப்பண்ணை, லாரி பாடி கட்டுமான தொழிலுக்கு பிரசித்தி பெற்ற நாமக்கல் கடந்த சில ஆண்டுகளாக கல்வி மாவட்டமாக உருவெடுத்துள்ளது.

சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் மாநில அளவில் பிரபலமான தனியார் பள்ளி மற்றும் கல்லுாரிகள் உள்ளன. அதுபோல் பழமை வாய்ந்த அரசு கால்நடை மருத்துவக் கல்லுாரி அமைந்துள்ளது. தவிர, பிரசித்தி பெற்ற 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் கோயில் நாமக்கல்லில் உள்ளது. இந்து மதத்தை சார்ந்தவர்களை பெரும்பாலானவர்களை இத்தொகுதி உள்ளடக்கியுள்ளது. அதேவேளையில் கிறிஸ்துவர்கள், முஸ்லிம் சமுக மக்களும் கணிசமான அளவில் உள்ளனர்.

மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இங்குள்ள கல்வி நிறுவனங்களில் பயில்வதால், அவர்களது பெற்றோரும் நாமக்கல்லில் குறிப்பிட்ட ஆண்டுகள் வரை வாடகை வீடுகளில் தங்கிச் செல்கின்றனர். நாமக்கல் தொகுதியின் முக்கிய பிரச்சினை போக்குவரத்து நெரிசல். அதற்கு தீர்வு காணும் வகையில் பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும். அதுபோல் ரிங் ரோடு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்.

கோழிப்பண்ணைத் தொழிலுக்கு உதவும் வகையில் குளிர்சாதன வசதியுடன் கூடிய முட்டை சேமிப்புக் கிடங்கு அமைக்க வேண்டும். லாரித் தொழிலுக்கு ஏற்ற வகையில் ஆட்டோ நகர் திட்டம், லாரி ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாளைய கோரிக்கையாகும். எனினும், இக்கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. கடந்த 1952 முதல் 2011ம் ஆண்டு வரை நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 5 முறை காங்கிரஸ், 1967, 1971, 1989 மற்றும் 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் 4 முறை திமுகவும், 1977, 1980, 1984 மற்றும் 2011ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் 4 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுக நாமக்கல் நகரச் செயலாளரான கே.பி.பி. பாஸ்கர் வெற்றி பெற்றார்.

2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்

வரிசை எண்

வேட்பாளர்

கட்சி

1

கே.பி.பி. பாஸ்கர்

அதிமுக

2

டாக்டர் ரா. செழியன்

காங்கிரஸ்

3

என். இளங்கோ

தமாகா

4

எ. துரைசாமி

பாமக

5

வி. ராஜேந்திரன்

பாஜக

6

மு. லோகநாதன்

நாம் தமிழர்

7

செ. மாதேஸ்வரன்

கொமதேக



தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :

நாமக்கல் வட்டம் (பகுதி) சர்க்கார் நாட்டாமங்கலம், அக்ரகார நாட்டாமங்கலம், கல்யாணி, அனந்தகிருஷ்ணராயசமுத்திரம், கெஜல்நாய்க்கன்பட்டி, பாச்சல், பிடாரிபட்டி, கடந்தப்பட்டி, ராமநாய்க்கன்பட்டி, கதிராநல்லூர், திருமலைப்பட்டி, கண்ணூர்பட்டி, பொடங்கம், தாத்தையங்கார்பட்டி, நவணி, லக்கபுரம், ஏளுர், தத்தாதிரிபுரம், தத்தாதிரிபுரம் கரடிப்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, கரடிப்பட்டி, தானத்தம்பட்டி, அக்ரஹார உடுப்பம், கலங்காணி, காரைக்குறிச்சி, மின்னாம்பள்ளி, பொட்டணம் செல்லப்பம்பட்டி, தாளாம்பாடி, சர்க்கார் உடுப்பம், அணியார், சிலுவம்பட்டி, காதப்பள்ளி, பாப்பிநாய்க்கன்பட்டி, மரூர்பட்டி, வேட்டாம்பாடி, வீசாணம், நல்லிபாளையம் தும்மங்குறிச்சி, எர்ணாபுரம், தளிகை, நரவலூர் தொட்டிபாளையம், திண்டமங்கலம், கீரம்பூர், வள்ளிபுரம், பெரியப்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, நாமக்கல், வகுரம்பட்டி, லத்துவாடி, தொட்டிபட்டி, ராசாம்பாளையம், கோனூர், கீழ்சாத்தம்பூர், தோளுர், அணியாபுரம், பரளி, அரூர், ஆண்டாபுரம், அரசநத்தம், குமரிபாளையம், ஆரியூர், பேட்டைபாளையம், ராசிபாளையம் மற்றும் ஒருவந்தூர் கிராமங்கள்.

நாமக்கல் (நகராட்சி), பெரியப்பட்டி (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்) மற்றும் மோகனூர் (பேரூராட்சி)

29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:

ஆண்

1,18,136

பெண்

1,24,388

மூன்றாம் பாலினத்தவர்

39

மொத்த வாக்காளர்கள்

2,42,563

தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் (1977 - 2011 )

ஆண்டு

வெற்றி பெற்றவர்

கட்சி

வாக்குகள்

1951

கே. வி. இராமசாமி

இந்திய பொதுவுடமைக் கட்சி

29654

1957

பி. கொழந்தாக்கவுண்டர்

காங்கிரஸ்

38977

1962

எஸ். சின்னையன்

காங்கிரஸ்

26756

1967

எம். முத்துசாமி

திமுக

39510

1971

பழனிவேலன்

திமுக

39553

1977

அருணாச்சலம்

அதிமுக

31952

1980

அருணாச்சலம்

அதிமுக

42850

1984

அருணாச்சலம்

அதிமுக

58158

1989

வி. பி. துரைசாமி

திமுக

41979

1991

அன்பழகன்

அதிமுக

79683

1996

வேலுச்சாமி

திமுக

76860

2001

ஜெயகுமார்

காங்கிரஸ்

67515

2006

ஜெயகுமார்

காங்கிரஸ்

61306

2011

கே. பி. பி. பாஸ்கர்

அதிமுக

95579

ஆண்டு

2ம் இடம் பிடித்தவர்

கட்சி

வாக்குகள்

1951

எம். பி. பெரியசாமி

காங்கிரஸ்

27602

1957

வி. காளியப்பன்

சுயேச்சை

29575

1962

கே. வி. இராசப்பன்

திமுக

24937

1967

வி. ஆர். கே. கவுண்டர்

காங்கிரஸ்

31651

1971

காளியப்பன்

காங்கிரஸ் (ஸ்தாபன)

30447

1977

வேலுச்சாமி

திமுக

17215

1980

வேலுச்சாமி

திமுக

38957

1984

வேலுச்சாமி

திமுக

40868

1989

ராசு

அதிமுக (ஜெயலலிதா)

37636

1991

மாயவன்

திமுக

29788

1996

அன்பழகன்

அதிமுக

38795

2001

அகிலன்

புதிய தமிழகம்

38223

2006

சாரதா

அதிமுக

53207

2011

ஆர். தேவராசன்

கொமுக

59724

2006 தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K. ஜெயகுமார்

காங்கிரஸ்

61306

2

R. சாரதா

அ.தி.மு.க

53207

3

P. அமுதா

தே.மு.தி.க

22401

4

M. நடராஜன்

பி.ஜே.பி

2178

5

A. நடராஜன்

சுயேச்சை

1496

6

A. விஜயம்பாள்

பி.எஸ்.பி

853

7

K.D. ராமதாஸ்

சுயேச்சை

537

8

R. கரலன்

சுயேச்சை

442

9

P. கண்ணன்

எல்.ஜே.பி

408

10

T.. தனபால்

சுயேச்சை

381

11

A. சுப்பிரமணியம்

சுயேச்சை

286

12

S. அண்ணாதுரை

சுயேச்சை

259

13

K. விஜயா

எ.ஐ.எப்.பி

245

143999

2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்

2011 - தேர்தல் ஒரு பார்வை

வரிசை எண்

வேட்பாளர்கள்

கட்சி

பதிவான வாக்குகள்

1

K.P.P. பாஸ்கர்

அ.தி.மு.க

95579

2

R. தேவரசன்

கே.என்.எம்.கே

59724

3

C. சத்யமூர்த்தி

ஐ.ஜே.கே

2996

4

K. பழனியப்பன்

பி.ஜே.பி

2168

5

S. அர்ஜுனன்

சுயேச்சை

1333

6

T. பாஸ்கர்

சுயேச்சை

1101

7

P. முருகேசன்

சுயேச்சை

1015

8

M. நடராஜன்

சுயேச்சை

993

9

P. முருகன்

யு.எம்.கே

910

10

M. தேவராஜ்

சுயேச்சை

901

11

K. மனோகரன்

சுயேச்சை

895

12

G.A. நல்லதம்பி

சுயேச்சை

554

13

V. பாஸ்கர்

சுயேச்சை

449

14

S. அருள்மணி

சுயேச்சை

403

15

P. தேவராஜன்

சுயேச்சை

327

16

P. தேவராஜன்

சுயேச்சை

301

169649


FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x