Published : 05 Apr 2016 04:08 PM
Last Updated : 05 Apr 2016 04:08 PM
நாமக்கல் மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. அதில் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியும் ஒன்று. திருச்செங்கோடு நகராட்சி, மல்லசமுத்திரம் பேரூராட்சிகள், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், எலச்சிபாளையம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் கிராமத்தில் காந்தி ஆசிரமம் அமைந்துள்ளது. கடந்த 1930ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1ம் தேதி நாட்டிலேயே முதன்முறையாக புதுப்பாளையம் கிராமத்தில் பூரண மதுவிலக்கு அமுல்படுத்தப்பட்டது.
மூதறிஞர் ராஜாஜி துவங்கிய காந்தி ஆசிரமத்தை தந்தை பெரியார் திறந்து வைத்தார். மகாத்மா காந்தி வந்து தங்கிய குடில் இன்றளவும் ஆசிரமத்தில் பராமரிப்பு செய்யப்படுகிறது. இத்தொகுதியின் மற்றொரு சிறப்பம்சமாகும்.
அதுபோல் பாடல் பெற்ற ஸ்தலமான அர்த்தநாரீஸ்வர் கோயில் தொகுதியில் இருப்பது அதன் மற்றொரு சிறம்பசமாகும். போர்வெல் போட பயன்படுத்தப்படும் ரிக் வாகனங்கள், அதற்கு தேவையான உதிரிப்பாகங்கள் இங்கு தயார் செய்யப்படுகின்றன.
அதுபோல் விவசாயம், லாரி தொழில் மற்றும் ஜவுளி உற்பத்தி போன்றவை பிரதான தொழிலாகும். ஆசிய அளவில் பிரபலமான தனியார் கல்லூரி, பள்ளிகள் தொகுதியில் நிறைந்துள்ளன. கடந்த சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் நடைபெற்ற தொகுதி மறுசீரமைப்பில் திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதி இரண்டாக பிரிக்கப்பட்டது. அதன்காரணமாக குமாரபாளையம் சட்டப்பேரவை தொகுதி புதிதாக உதயமானது. தொகுதியின் முக்கிய பிரச்சினையாக போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் ரிங் ரோடு வசதி ஏற்படுத்த வேண்டுமென பல ஆண்டுகளாக மக்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும், அக்கோரிக்கை நிறைவேற்றப்படாமல் உள்ளது.
கடந்த 1957, 1962 ஆகிய இரு சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியும், 1967, 1971, 1996 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் 3 முறை திமுகவும், 1977, 1980, 1984, 1991, 2001 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் 6 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 1951ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளர், 1989ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திய பொதுவுடைக் கட்சியும், 2011ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தேமுதிகவும் தலா ஒரு முறை தொகுதியை கைப்பற்றியுள்ளது.
கடந்த 2011ம் ஆண்டு அதிமுக கூட்டணி சார்பில் களம் இறங்கிய தேமுதிக மாவட்ட செயலாளர் சம்பத்குமார், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சேலம் மாவட்டம் ஆத்துாரைச் சேர்ந்த எம். ஆர். சுந்தரம் ஆகியோர் போட்டியிட்டனர். அதில், தேமுதிக வேட்பாளர் சம்பத்குமார் வெற்றி பெற்றார்
2016 தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் விவரம்
வரிசை எண் | வேட்பாளர் | கட்சி |
1 | பொன். சரஸ்வதி | அதிமுக |
2 | பார். இளங்கோவன் | திமுக |
3 | ஜெ. விஜய்கமல் | தேமுதிக |
4 | ச. ராஜா | பாமக |
5 | எஸ். நாகராஜன் | பாஜக |
6 | பொ. நடராஜன் | நாம் தமிழர் |
7 | எஸ். நதிராஜவேல் | கொமதேக |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள் :
திருச்செங்கோடு வட்டம் (பகுதி)
கருவேப்பம்பட்டி, ராஜாபாளையம், கருப்பகவுண்டம்பாளையம், திருமங்கலம், கருமாபுரம், கூத்தாநத்தம், செண்பகமாதேவி, பள்ளக்குழி அக்ரஹாரம், மங்கலம், சப்பயபுரம், மாமுண்டி அக்ரஹாரம், மல்லசமுத்திரம் மேற்கு, கொளங்கொண்டை, கவுண்டம்பாளையம், செம்பாம்பாளையம், கருமனூர், பிள்ளாநத்தம், வட்டூர், கோட்டபாளையம், திருமங்கலம் புதுப்பாளையம், ஆண்டராப்பட்டி, சின்னதம்பிபாளையம், நெய்க்காரப்பட்டி, கைலாசம்பாளையம், தொக்கவாடி, வரகூராம்பட்டி, கவுண்டம்பாளையம், சத்திநாயக்கன்பாளையம், குப்பாண்டாபாளையம், கவுண்டம்பாளையம், வண்டிநத்தம், அவினாசிபட்டி, ராமாபுரம், பருத்திபள்ளி, கோட்டைபாளையம், பாலமேடு, கருங்கல்பட்டி, மொரங்கம், கண்டாங்கிபாளையம், முஞ்சனூர், கல்லுபாளையம், மின்னாம்பள்ளி, மேட்டுபாளையம், கிளாப்பாளையம், மோனிப்பள்ளி, உஞ்சனை, போக்கம்பாளையம், அத்திபாளையம், ஆண்டிபாளையம், தொட்டியபாளையம், ஏமப்பள்ளி, டி.கவுண்டம்பாளையம், பட்லூர், அட்டவணை இறையமங்கலம், மொளசி, செங்கோடம்பாளையம், எளையாம்பாளையம், குமாரபாளையம், பிரிதி, அணிமூர், சிறுமொளசி, வேட்டுவம்பாளையம், வட்டப்பரப்பு, புதுப்புளியம்பட்டி, சித்தளந்தூர், நல்லிபாளையம் மற்றும் மரப்பாரை கிராமங்கள்.
மல்லசமுத்திரம் (பேரூராட்சி), திருச்செங்கோடு (நகராட்சி) மற்றும் தேவனாங்குறிச்சி (மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்).
29/04/2016-ன்படி வாக்காளர்கள் விவரம்:
ஆண் | 1,06,142 |
பெண் | 1,10,464 |
மூன்றாம் பாலினத்தவர் | 34 |
மொத்த வாக்காளர்கள் | 2,16,640 |
தொகுதி கடந்து வந்த தேர்தல்கள் ( 1951 - 2011 )
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் |
1951 | எஸ். ஆறுமுகம் | சுயேச்சை | 29007 |
1957 | டி. எம். காளியண்ணன் | காங்கிரஸ் | 33360 |
1962 | டி. எம். காளியண்ணன் | காங்கிரஸ் | 24640 |
1967 | டி. எ. இராஜவேலு | திமுக | 42479 |
1971 | எஸ். கந்தப்பன் | திமுக | 43605 |
1977 | சி. பொன்னையன் | அதிமுக | 44501 |
1980 | சி. பொன்னையன் | அதிமுக | 69122 |
1984 | சி. பொன்னையன் | அதிமுக | 77659 |
1989 | வி. இராமசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 53346 |
1991 | டி. எம். செல்வகணபதி | அதிமுக | 113545 |
1996 | டி. பி. ஆறுமுகம் | திமுக | 96456 |
2001 | சி. பொன்னையன் | அதிமுக | 107898 |
2006 | பி. தங்கமணி | அதிமுக | 85471 |
2011 | பி. சம்பத் குமார் | தேமுதிக | 78103 |
ஆண்டு | 2ம் இடம்பிடித்தவர் | கட்சி | வாக்குகள் |
1951 | டி. எஸ் அர்த்தனாரி | இந்திய பொதுவுடமைக் கட்சி | 28807 |
1957 | ஆர். கந்தசாமி | காங்கிரஸ் | 29546 |
1962 | டி. எ. இராஜவேலு | திமுக | 21050 |
1967 | டி. பி. நடேசன் | காங்கிரஸ் | 17174 |
1971 | வி. குமாரசாமி | காங்கிரஸ் (ஸ்தாபன) | 24345 |
1977 | வி. குமாரசாமி | ஜனதாகட்சி | 17764 |
1980 | டி. எம். காளியண்ணன் | காங்கிரஸ் | 52046 |
1984 | எம். எம். கந்தசாமி | திமுக | 58437 |
1989 | ஆர். இராஜன் | அதிமுக (ஜெயலலிதா) | 35258 |
1991 | வி. இராமசாமி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) | 34886 |
1996 | எசு. சின்னுசாமி | அதிமுக | 53836 |
2001 | டி. பி. ஆறுமுகம் | திமுக | 63789 |
2006 | செ. காந்திசெல்வன் | திமுக | 85355 |
2011 | எம். ஆர். சுந்தரம் | காங்கிரஸ் | 54158 |
2006 தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | P. தங்கமணி | அ.தி.மு.க | 85471 |
2 | S. காந்திசெல்வன் | தி.மு.க | 85355 |
3 | S. பொங்கியண்ணன் | தே.மு.தி.க | 32327 |
4 | V. லிங்கப்பன் | சுயேச்சை | 2969 |
5 | P.T. தனகோபால் | பி.ஜே.பி | 2332 |
6 | M. ரவி | சுயேச்சை | 885 |
7 | தேன்மொழி | சி.பி.ஐ | 666 |
8 | P. மனோகரன் | சுயேச்சை | 663 |
9 | K. அண்ணாதுரை | சுயேச்சை | 303 |
10 | V. சிவமலை | சுயேச்சை | 267 |
11 | L. நந்தகுமார் | சுயேச்சை | 258 |
12 | T.G.P. தண்டபாணி | சுயேச்சை | 232 |
13 | P. செல்வராஜ் | சுயேச்சை | 190 |
14 | N. சின்னுசாமி | சுயேச்சை | 150 |
212068 |
2016 சட்டப் பேரவை தேர்தல்- வாக்கு விவரங்கள்
2011 - தேர்தல் ஒரு பார்வை
வரிசை எண் | வேட்பாளர்கள் | கட்சி | பதிவான வாக்குகள் |
1 | P. சம்பத்குமார் | தே.மு.தி.க | 78103 |
2 | M.R. சுந்தரம் | காங்கிரஸ் | 54158 |
3 | S. செல்வராஜ் | சுயேச்சை | 3809 |
4 | S. செந்தில்குமார் | சுயேச்சை | 3311 |
5 | R. தமிழரசு | சுயேச்சை | 2776 |
6 | S. நாகராஜன் | பி.ஜே.பி | 2609 |
7 | K. அப்பாவு | சுயேச்சை | 1401 |
8 | K. ஞானவேல் | பி.எஸ்.பி | 1227 |
9 | G. சம்பத்குமார் | சுயேச்சை | 771 |
10 | N. செந்தில்ராஜன் | சுயேச்சை | 656 |
11 | R. கணேஷ் | சுயேச்சை | 602 |
12 | K. கலையரசன் | சுயேச்சை | 422 |
149845 | |||
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT